அறிந்து கொள்வோம்!

in 2023 மார்ச்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

 • யாரை விசாரணை செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?

யாருக்கு தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களை.  அல்குர்ஆன் 7:6

 • யார்வெற்றியாளர்கள்எனஅல்லாஹ்கூறுகிறான்?

நன்மையின்  எடை  கனமாக  இருப்பவர்கள்.  அல்குர்ஆன் 7:8

 • ஷைத்தான் யாருடைய நண்பன் என அல்லாஹ்  கூறுகிறான்?

நம்பிக்கையில்லாதவரின்  நண்பன். அல்குர்ஆன் 7:27

 • யாரை நான் நேசிப்பதில்லை என அல்லாஹ்  கூறுகிறான்?

அளவுகடந்து  விரயம்  செய்பவர்களை.  அல்குர்ஆன் 7:31

 • பயபக்தி கொண்டு திருந்தியவர்களுக்கு எது இல்லை என அல்லாஹ் கூறுகிறான்?

அச்சமும்  இல்லை,  துக்கமும்  இல்லை.   அல்குர்ஆன் 7:35

 • காஃபிர்களுக்கு எது இல்லை என அல்லாஹ்  கூறுகிறான்?

பாவமன்னிப்பு.  அல்குர்ஆன் 4:18

 • யாரை தொழுகைக்கு நெருங்காதீர்கள் என அல்லாஹ்  கூறுகிறான்?

போதையில்  இருப்பவர்களை.    அல்குர்ஆன் 4:43 

 • முஃமின்கள் என்ன செய்யவேண்டும் என்று  அல்லாஹ்  கூறுகிறான்?

அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியவேண்டும்.  அல்குர்ஆன் 8:1

 • அல்குர்ஆன் எத்தனை முறைகளின்கீழ் இறங்கியதாக நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்? 

ஏழு முறைகளின் கீழ்.  உமர்(ரழி), புகாரி:2419

 • யாருடைய வீடுகளை எரித்துவிட நினைத்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்?

கூட்டுத்தொழுகைக்கு வராதவர்களின் வீடுகள்.   அபூஹுரைரா(ரழி), புகாரி: 2420

 • நபி(ஸல்) அவர்கள் எதற்காக தமது மேலாடையை மாற்றிப் போட்டார்?

மழைக்காக  துஆ செய்யும்போது. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரழி), புகாரி:1011

 • இறப்பின் நெருக்கத்தில் இருப்பவர்களி டம் எதை நினைவுபடுத்த நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

லா  இலாஹா  இல்லல்லாஹ்அபூசயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம்: 1672

 • உங்கள்சப்தங்களையாருடையசப்தத்திற்கும்மேலாகஉயர்த்தஅல்லாஹ்தடைசெய்தான்? 
  நபியின்  சப்தத்திற்கு.   அல்குர்ஆன் 49:2
 • அல்லாஹ்வின் தூதரிடத்தில் தமது சப்தங்களை தாழ்த்திக் கொள்பவரின் நிலை என்ன?

அவர்களது உள்ளங்களை பரிசுத்தமாக்கப்பட்டவர்கள். அல்குர்ஆன்  49:3

 • இந்த மார்க்கம் எதுவரை வலிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள்?
  குறையராக இருக்கும் 12 ஆட்சித் தலைவர்கள்  வரை.  முஸ்லிம்: 3721
 • தெளிவாகப் பேச இயலாதவர் என யாரை பிர்அவ்ன் கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்?

   மூஸா (அலை).  அல்குர்ஆன் 43:52

 • ஞானத்தை கொண்டு வந்திருப்பதாக எந்த  நபி  கூறினார்?

ஈஸா  நபி.  அல்குர்ஆன் 43:63

 • நீங்கள் செய்யாததை கூறுவது அல்லாஹ்விடம்  எப்படி  இருக்கிறது.

  பெரிதும்  வெறுப்புடையதாக.      அல்குர்ஆன் 61:3

 • ஆது கூட்டத்தார் எதைக் கொண்டு அழிக்கப்பட்டனர்?

வேகமாக சுழன்று அடிக்கும் கொடுங் காற்றால்.  அல்குர்ஆன் 69:6

 • மனிதனை எந்த நிலையிலிருந்து படைத்த தாக  அல்லாஹ்  கூறுகிறான்?

  மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்ததாக.  அல்குர்ஆன் 96:2

Previous post:

Next post: