கல்வியின் அவசியம்!

in 2023 மார்ச்

கல்வியின் அவசியம்!

மீரான் கஸ்ஸாலி

நாம் இந்திய முஸ்லிம்கள் ஆவோம். இந்த நாட்டின் உயர்வு, தாழ்வுகளில் நமது வாழ்க்கையும் பின்னிப் பிணையப்பட்டுள் ளது. நாம் இங்கு வாழ்க்கை நடத்துவதற்கு இந்த நாட்டின் மொழிகளில், பாடத் திட்டங்களில் சிறப்புப் பெற்றிருக்க வேண் டும். இந்திய முஸ்லிம்களில் 100 பேருக்கு 4 பேர்கள்தான் பள்ளி இறுதித் தேர்வு வரை போகிறவர்களாக இருக்கிறோம். “பட்டப் படிப்பு என்ற நிலையோ 100 பேருக்கு 2.9 விகிதம்தான். படிப்பின் அடிப்படையில் தான் அரசாங்க வேலைகளோ, அல்லது பொது, தனியார் நிறுவனங்களிலோ, ஒரு நல்ல வேலையில் அமர முடியும். குர்ஆன், ஹதீதுக்கு முரணாகப் போராடி, மார்க்கம் அனுமதிக்காத வகையில் அரசு உத்தியோ கங்களை முஸ்லிம்கள் என்ற அடிப்படை யில் (றீ.ளீ., றீ.வீ.)போன்று பெற்றாலும் அந்த குறைந்தபட்ச தகுதியுடையவர்களையும்  முஸ்லிம்களில் காண்பது அரிதாகவே இருக் கும். நல்லவேலை, நல்ல சம்பளம், நல்ல வாழ்க்கை. இதுதான் நமக்கு இன்றைய உலகத் தேவையாக இருந்தாலும் அதற்குரிய படிப்பறிவு முஸ்லிம்களிடையே மிக மிகக் குறைவு. நல்ல வாழ்க்கையின் ஒரு பகுதி தான் இறைவணக்கத்தில் வருகிறது. மற்ற சமுதாயங்களின் நிலை, அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு இவைகளோடு ஒப்பிடும் போது நமது தரம் மிகப் பின்தங்கியுள்ளது. இந்தப் பின்னடைவுக்கு யார் காரணம்?

சுதந்திர இந்தியாவின் 100 நாடாளு மன்ற உறுப்பினர்களின் வெற்றித் தோல் வியை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு வாக் காளர்களைப் பெற்றிருக்கும் இந்தச் சமுதா யத்தை இவ்வளவு நாட்களாக வழி கெடுத் தது யார்? நமது சமுதாய மக்களின் நியாய மான தேவைகளை அரசின் பார்வையில் இதுவரை கொண்டு செல்லப்படவில் லையே? இந்த நிலைக்கு யார் காரணம்? மற்ற சமுதாய மக்களின் தேவைகள் எல் லாம் பரிசீலிக்கப்படும்போது, இந்த முஸ் லிம் சமுதாயத்திற்கு மட்டும் ஏன் இந்தப் பின்னடைவு?

ஒரு சமுதாயம் விழிப்புற, அதன் தூக் கத்திலிருந்து விடுபட அது செய்ய வேண் டிய முதல் காரியம் கல்வி கற்க வேண்டும். கல்வி கற்ற சமுதாயத்தினர், மற்றவர்களுக்கு கட்டாயமாகக் கற்றுக் கொடுத்து ஒன்று சேர்க்க வேண்டும்; மூன்றாவதாக, உன் சமுதாய முன்னேற்றத்திற்காக குரல் கொடு! என்றார் நம் நாட்டில் பிறந்த அறிஞர். அவரின் கூற்றை எடுத்தாண்ட அச்சமுதாய மக்களின் முன்னேற்றத்தைக்குறிப்பாக முஸ்லிம்  சமுதாயம்  காண  வேண்டாமா?

நம்மைச் சார்ந்தவர்கள் மதகுருமார் களிடம் அடிமையாகி விட்டோம். இன் னும் ஆகிக் கொண்டே இருக்கிறோம். இதில்  மாற்றம்  வேண்டும்.

மதகுருமார்கள், ஆலிம்கள்கல்வி என் றாலே மார்க்கக் கல்வி மட்டும்தான் சிறந்தது; அதுதான் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசி யம் எனப் பேசி இச்சமுதாயத்தைப் பின்ன டையச் செய்ததில் பெரும் பங்காற்றி வருகி றார்கள். அவர்கள் கூறும் மார்க்கக் கல்வியும் உண்மையில் குர்ஆன், ஹதீத் அடிப்படையி னால் ஆனதல்ல. அதற்கு மாறாக மனிதக் கற் பனைகள் கலந்தபிக்ஹு (மத்ஹபு) கல்வி யாகும். நாம் வாழ்வதற்கு இந்நாட்டில் புழங்கப்படக்கூடிய மொழிகளிலே, இந் நாட்டிற்கு தேவையான கல்வி கேள்வி களிலே சிறந்தோமேயானால் தான் வாழ முடியும். அதை விடுத்து, கடை வீதிகளிலோ,  அலுவலகங்களிலோ அல்லது பெரும் பான்மையிடங்களிலோ வழக்கத்தில் இல் லாத குர்ஆன், ஹதீதுக்கு முரணான கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்து இந்தச் சமுதாயத்தை மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளி விட்டார்கள். இது எவ்வளவு அநியாயம்? படித்த, சமூக சிந் தனையுள்ள ஒவ்வொரு முஸ்லிமும், மற்ற முஸ்லிம்கள் நடைமுறைக் கல்வி பயில உதவ வேண்டும்.

முஸ்லிம் பெண்களின் கல்வி விகிதம் மிக மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது. இது, இந்தச் சமுதாயத்தை நேசிக்க கூடியவர்களுக்கு இதயத்தில் அடிக்கும் சம்மட்டி அடியாகும். மற்ற சமு தாய பெண்களின் கல்வி நிலையோடு முஸ் லிம் பெண்களின் கல்வி நிலையை ஒப்பிடும் போது அது மிகமிகக் குறைவாகக் காணப் படுகிறது.வீட்டிலுள்ள தாய்மார்களுக்கு ஓரளவு படிப்பிருந்தால் தானே வருங்கால சந்ததிகள் சிறப்பாகவும், கண்ணியத்துட னும் வாழ வழி வகைகள் செய்ய முடியும். இப்போது இருக்கக்கூடிய நிலைமை மிக அபாயகரமானது. இந்த நிலையைப் போக்குவதற்கு நடைமுறைக் கல்வியின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர நிறை யக் கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும். தொடர்ந்து அறிவுரைகளும் உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

சிறந்த நிலையிலிருந்த முஸ்லிம் சமுதாயம். குர்ஆன் ஹதீஃத் போதனைப்படி நடைமுறைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் சிறப்பு நிலையடைய வல்ல இறைவன் அருள் புரிவானாக.  ஆமின்.

Previous post:

Next post: