தேர்தலுக்கு இயக்க பிரச்சாரம் செய்யப்போகும் இளைஞர்களே!

in 2023 மே

தலையங்கம் :

தேர்தலுக்கு இயக்க பிரச்சாரம் செய்யப்போகும் இளைஞர்களே! தேர்தலுக்கு இயக்க பிரச்சாரம் செய்யப்போகும் இளைஞர்களே! மக்களுக்கு மார்க்க பிரச்சாரம் செய்யப்போவது எப்போது? 

அன்பு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

இறைச்செய்தி 23:52 வசனத்தின் அடிப்படையிலான ஒரே சமுதாய அமைப்பான இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்யப் போகின்றீர்களா?  அல்லது

அல்குர்ஆன் 3:105 வசனத்தின் எச்சரிக்கை யான இயக்கங்கள், மத்ஹபுகள், தரீக்கா போன்ற வழிகெட்ட பிரிவினை மதமாகிய போலி இஸ்லாமிய மதத்தை பிரச்சாரம் செய்யப் போகின்றீர்களா? எதைப் பற்றிப் பிரச்சாரம்  செய்யப்  போகின்றீர்கள்?

மனித  சமுதாயம்  ஒரே  சமுதாயமே?

இன்னும் நிச்சயமாக சன்மார்க்கமான உங்கள் சமுதாயம் முழுவதும் ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன். எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என்றும் கூறினோம். (அல்குர்ஆன் 23:52)

ஆனால், அச்சமுதாயத்தவர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 23:53)

எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும்.  (அல்குர்ஆன் 23:54)

இயக்கப்  பிரிவுகளும்  இணைவைப்பே!

இறைவனின் தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்க ளுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.  (அல்குர்ஆன் 3:105)

எனவே மத்ஹபுகளும், ´ர்க் அதே போன்று தவ்ஹீத் இயக்கப் பிரிவினைகளும் ´ர்க்காகும்.  இதற்கான  ஆதாரம் :

“”நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே நபியே! நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், நீங்கள் அனைவரும் சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள். நீங்கள் அதில் பிரிந்து விடாதீர் கள் என்பதே! இணை வைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது. தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். அவனை முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.”  அல்குர்ஆன் 42:13

இறைதூதர்  ஏற்படுத்திய  ஜமாஅத் :

அல்குர்ஆன் 22:78 வசனத்தின்படி அல் முஸ்லிமீன் என்ற அமைப்பின் பக்கம் அழைப்பதே  சரியான  இஸ்லாமிய  அழைப்பாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஏற்படுத்திய ஜமாஅத் மட்டுமே அல்லாஹ்வால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஜமாஅத் தாகும். அந்த ஜமாஅத்துதான் ஜமாஅத்துல் முஸ்லிமீன்  என்ற  ஜமாஅத்தாகும்.   ஆதாரம் : புகாரி: 3606

ஹுதைஃபா இப்னு யமான்(ரழி) அறிவித்தார்:

மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என் னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் அதைப் பற்றிக் கேட்டேன் நான், இறைத் தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் காலமாச்சரியத் திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் இஸ்லாம் எனும் நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை குழப்பம் இருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம் இருக்கிறது என்று பதிலளித்தார் கள். 

நான், இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா? என்று கேட்டேன். நபி (ஸல்)அவர்கள் ஆம்! ஆனால் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும் என்று பதிலளிக்க நான், அந்தக் கலங்கலான என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் கள், ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழிகாட்டுவார்கள். அவர்களின் செயல்களைக் கண்டு நீங்கள் அவர்களை புறக் கணித்து விடுவீர்கள் என்று பதிலளித்தார்கள்.  நான், அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம்! நரகத்தின் வாசல்களுக்கு வருமாறு அழைப்பார்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள் என்று பதிலளித்தார்கள். நான் இறைத்தூதர் அவர்களே! அவர்களுடைய அடையாளங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று கேட்க! நபி(ஸல்) அவர்கள், “அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள். நம் மொழிகளிலேயே பேசுவார்கள் என்று பதிலளித்தார்கள். நான், இந்த மனிதர் களைச் சந்திக்கும் நிலையை அடைந்தால் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டேன். 

அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ ஜமாஅத் அல் முஸ்லிமீனையும் அதன் தலைவரையும் இறுகப் பற்றிக்கொள் என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், அவர்களுக்கு ஒரு கூட்ட மைப்போ ஒரு தலைவரோ இல்லை பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள் என்றால், என்ன செய்வது? என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு விலகி ஒதுங்கிவிடு, ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி. எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு! என்று  பதிலளித்தார்கள். புகாரி : 3606, அத்தியாயம் 61, நபி(ஸல்) அவர்களின் சிறப்புகள்.

Previous post:

Next post: