மனிதர்கள்! 

in 2023 ஜுன்

மனிதர்கள்! 

S. அப்துல் நாசர், மங்களூர் 

அல்லாஹ்வின் ஏவல்களையும், விலக்கல்களையும், வாழ்க்கையின் எல்லா நிலை களிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும், பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின்றேன். மனிதன் தன் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் சுயநலம் மிக்கவன். தொழி லானாலும் சரி, அவன் வாழ்க்கை நிலைகள் ஆனாலும் சரி அனைத்திலும் மனிதன் சுய நலம் மிக்கவன். பிற மனிதர்களின் துன்ப நிலைகளைக் கண்டு சிரிப்பவன்; அல்லது ஏளனம் செய்பவன்தான் மனிதன், சாலைகளில் விபத்துக்குள்ளாகிக் கிடக்கும் மனிதர்களுக்கு உதவி செய்யாமல்நமக்கென்னஎன்று வேடிக்கை பார்த்துவிட்டுச் செல்பவன்தான் மனிதன். பிற வீடுகளில் நடக்கும் குடும்பச் சண்டைகளோ, அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகளோ, நடந்தால் அவற்றை வேடிக்கைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவன்தான் மனிதன். இதே நிகழ்ச்சிகள் தன் வாழ்க்கையிலோ, தன் குடும்பத்திலோ, நடந்தால் வேடிக்கை பார்ப்பவர்களை கோபத்தாலும், வெறுப்பாலும் பார்ப்பவன் தான் மனிதன். இதுதான் மனிதர் களின் நிலை.

சாதாரண விளையாட்டு நிகழ்ச்சிகளை எடுத்துப் பாருங்கள். கால்பந்து, கிரிக்கெட் வேறு எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி, தன் அணிதான் வெற்றிபெற வேண்டும் என்பதில் சுயநலமிக்கவன் மனிதன். வியாபாரங்களிலும், பிற மனிதனின் வியாபாரத்தைத் தோற்கடிப்பதில் குறிக்கோளாக இருப்பவன்தான் மனிதன். தான் வியாபாரத்தில் முன்னேறுகிறாமோ இல்லையோ, அடுத்த மனிதன் வீழ வேண்டும் என்பதுதான் வியாபாரம் செய்கின்ற மனிதனின் எண்ணம்; குடும்ப நிலைகளை  எடுத்தாலும், பிற மனிதர்களின் வீட்டில் என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்பதைப் பற்றி, பிற மனிதர்களைக் கிண்டல் அடிப்பதிலும் அற்ப சந்தோசம் அடைபவன்தான் மனிதன். உலக நிகழ்வுகள் அனைத்திலும் மனிதன் தான் சுயநலம் மிக்கவன்.

எந்த ஒரு மனிதனின் செயல் வேறு ஒரு மனிதனுக்கு பிடிக்கின்றதோ, அந்த மனிதன் செய்வது, சொல்வது அனைத்தும் இந்த மனிதனுக்குப் பிடிக்கும். அதே மனிதன் ஏதாவது காரணத்தால் இந்த மனிதனுக்குப் பிடிக்கவில்லையயன்றால் அந்த மனிதன் என்ன சொன்னாலும், செய்தாலும் இந்த மனிதனுக்குப் பிடிக்காது. மனிதா?  குர்ஆன் வசனத்திற்கும், ஹதீதிற்கும் உன் சொல், செயல் மாற்றமாக இருக்கிறதே? இந்த சொல் செயலை மாற்றக் கூடாதா? அதற்கு அந்த மனிதனிடம் மாற்றம் இருக்காது. இதற்குப் பதிலாக சொன்ன மனிதனிடம் ஏதாவது குற்றங்கள் குறைகள் இருக்கிறதா? என்பதைப் பற்றி ஆராய்வதிலேயே குறியாக இருப்பான். அதுவரை ஒன்றாக இருந்த மனிதர்கள் பிரிந்தவுடன் இல்லாத, கூறாக, நடக்காத அவதூறுகளைக் கட்டிவிடுவதை அன்றாடம் பார்க்கின்றோம். மனிதர்களுக்குத் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ஏற்கவே மாட்டார்கள். இந்த மனிதன் சொல்லி நான் ஏற்பதா? “இவன் யார் இங்கு?’ என்பன போன்ற எண்ணங்கள் மனிதனின் மனதில் உண்டாகின்றன. ஏன் இந்த நிலை ஏற்பட்டது? என்றால் மனிதா? நீ மறுமைக்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்து கொண்டதினால்தான்.

எனினும் நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் மறுமை வாழ்க்கையோ சிறந்ததாகும் என்றும்  நிலைத்திருப்பதும்  ஆகும். அல்குர்ஆன் 87:16,17

இந்த  உலகில் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. காற்றே! நாளை முதல் வீசாதே! என்று மனிதன் சொன்னால் காற்று வீசாமல் இருக்குமா? சூரியனே! நாளை முதல் நீ உதிக்காதே! என்று மனிதன் கூறினால் சூரியன் உதிக்காமல் சென்று விடுமா? நாளை முதல் உறங்கவே மாட்டேன் என்று மனிதன் கூறினால் அவனால் உறங்காமல் இருக்க முடியுமா? மழையே வராதே என்றால் மழை வராமல் இருக்குமா? சாப்பிடவே மாட்டேன் என்று மனிதன் சொன்னால் அவ னுக்கு பசிக்காமல் இருக்குமா? இவைகள் ஒன்றுமே மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை. இவை அனைத்துமே இறைவன் கட்டுப்பாட்டில் உள்ளன.

நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியைக் காண்பித்தோம். அதைப் பின்பற்றி நன்றியுள்ளவனாக இருக்கின்றான் அல்லது அதைப் புறக்கணித்து நன்றியற்றவனாக  இருக்கின்றான்.  அல்குர்ஆன் 76:3

தொழுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிட்டால் தொழமாட்டேன் என்று கூற மனிதர் களுக்கு உரிமையுண்டா? நோன்பு வையுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிட்டால் நோன்பு வைக்க மாட்டேன் என்று கூற மனிதனுக்கு உரிமையுண்டா? 

மது குடிக்காதீர் கள் என்று அல்லாஹ் கட்டளையிட்டால் குடிப்பேன் என்று கூற மனிதனுக்கு உரிமை யுண்டா? வட்டி வாங்காதீர், வட்டி கொடுக்காதீர்கள் என்று அல்லாஹ் கட்டளை யிட்டால் வாங்குவேன், கொடுப்பேன் என்று கூற மனிதனுக்கு உரிமையுண்டா? விபச்சாரம் செய்யாதீர்கள் அது மானக்கேடானது, வேறு பாவங்களுக்கும் இட்டுச் செல்லும் என்று அல்லாஹ் கட்டளையிட்டால் இல்லை செய்யலாம் என்று கூற மனிதனுக்கு உரிமையுண்டா. ஒன்று அல்லாஹ்வுக்கு மனிதன் நன்றியுள்ள வனாக இருக்கலாம். இல்லை நன்றி கெட்டவனாக  இருக்கலாம்.

நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 100:6

மனிதா தொழுதுகொள்! என்று அல்லாஹ் கூறுவது எதற்காக? மனிதா! மது குடிக்காதே? விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதே? என்று அல்லாஹ் கட்டளையிடுவது எதற்காக? வட்டி வாங்காதே, கொடுக்காதே என்று அல்லாஹ் கட்டளையிடுவது எதற்காக? அல்லாஹ்வின் ஏவல்களையும், விலக்கல்களையும் ஏற்று முஸ்லிம் களாகவே மரணமடையுங்கள் என்று அல்லாஹ் கூறுவது எதற்காக? அல்லாஹ்வுக்கு வேண்டியா? இல்லை! 

மனிதா உனக்குத்தான்! உன்  நன்மைகளுக்குத்தான்!! ஆனால் அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது உறுதி கொள்ளவுமில்லை. அவன் தொழவு மில்லை. ஆகவே, அவன் கோபித்து முகம் திருப்பியுங்கொண்டான். பின்னர் அவன் தன் குடும்பத்தாரிடம் மமதையோடு சென்றுவிட்டான். கேடு உனக்கே மனிதனே! உனக்கு பின்னரும் உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா? அல்குர்ஆன் 75:31-36

Previous post:

Next post: