முஸா(அலை), ஈஸா(அலை) ஆகியோருக்கு கடமையாக்கப்பட்ட வார வழிபாட்டு நாள் எது? 

in 2023 ஜுன்

முஸா(அலை), ஈஸா(அலை) ஆகியோருக்கு

கடமையாக்கப்பட்ட வார வழிபாட்டு நாள் எது? 

அபூ ஹனிபா, புளியங்குடி.

இன்றைக்கு நாம் வெள்ளிக்கிழமை ஜூம்மாவுடைய நாளை வார வழிபாட்டு நாளாக கொண்டிருக்கிறோம். அதுபோல யூதர்கள் சனிக்கிழமையும், கிறிஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமையம் வார வழிபாட்டு நாளாக  கொண்டிருக்கிறார்கள்.

மூஸா(அலை) அவர்களுக்கு சனிக்கிழமையும். ஈஸா(அலை) அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாட்டு நாட்களாக அல்லாஹ் தான் நிர்ணயித் தான். மூஸா(அலை) அவர்கள் சனிக்கிழமை தான் வார வழிபாட்டை நடத்தினார்கள். ஈஸா(அலை) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை தான் வார வழிபாட்டை நடத்தினார்கள் என்று பல ஆலிம்கள் கூறி வருகிறார்கள்.

உண்மையில் அல்லாஹ் தான் மூஸா(அலை) அவர்களுக்கு சனிக்கிழமையும், ஈஸா(அலை) அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாட்டு நாளாக நிர்ணயித்தானா? இல்லையா? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள், மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்களுக்குக் கடமையாக்கப்பட்ட இந்த நாளில் (வெள்ளிக்கிழமை) அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நன்மையே பின் தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர் களுக்கு அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர் என அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். புகாரி: 876

அவர்களுக்குக் கடமையாக்கப்பட்ட இந்த நாளில் அதாவது வெள்ளிக்கிழமையில் அவர்கள் முரண்பட்டனர் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ் ஒன்றை கடமையாக்கினால் அதற்கு மூஸா(அலை), ஈஸா(அலை) அவர்கள் மாற்றம் செய்வார்களா? செய்யமாட்டார்கள். அப்படி என்றால் மூஸா (அலை), ஈஸா(அலை) ஆகியோர் உயிரோடு வாழும் வரைக்கும் அவர்கள் கடைபிடித்த வந்த வாரவழிபாட்டு நாள் என்பது அது வெள்ளிக்கிழமையாகவே இருந்து வந்துள் ளது.

பிற்காலத்தில் வந்த யூதர்கள், கிறிஸ்த வர்கள் வேதத்தை மாற்றி அமைத்தது போல வார வழிபாட்டு நாளான வெள்ளிக்கிழமை யையும் மாற்றி சனிக்கிழமையாக, ஞாயிற்றுக் கிழமையாக  ஆக்கி  இருக்கின்ற னர்.

அவர்கள் இவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? காரணம் அவர்கள் அல்லாஹ்விற்கு மாறு செய்து வந்ததுதான். செவிமடுத்தோம், அதற்கு மாறு செய்வோம் என்று அவர்கள் கூறி வந்ததால் அல்லாஹ் அவர்களை நேர்வழியில் இருந்து வழி பிறழ செய்துவிட்டான் என்பது தெளிவாகிறது. முஸ்லிம் : 1552  ஹதீதில்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், நமக்கு முந்தைய (யூதர் மற்றும் கிறித்தவ) சமுதாயத்தாரை(வார வழி பாட்டு நாளான) வெள்ளிக்கிழமையிலிருந்து வழி பிறழ விட்டுவிட்டான். எனவே, யூதர்களுக்குச் சனிக்கிழமையையும், கிறித்த வர்களுக்கு ஞாயிறறுக்கிழமையும், (வார வழிபாட்டு நாட்களாக) அமைந்தன. பிறகு அல்லாஹ் நம்மைப் படைத்து நமக்கு வெள்ளிக்கிழமையை அறிவித்தான். (வரிசை முறையில்) வெள்ளி, சனி, ஞாயிறு என அமைந்திருப்பதைப் போன்றே மறுமை நாளிலும் அவர்கள் நம்மைப் பின் தொடர்பவர்களாகவே இருப்பார்கள். உலக மக்களில் நாமே (காலத்தால்) பிந்திய வர்களாக இருக்கிறோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் படைப் பினங்களில் அனைவருக்கும் முன் தீர்ப் பளிக்கப்படுபவர்களாகவும் இருப்போம். இதை அபூஹுரைரா(ரழி) அவர்களும் ஹுதைஃபா(ரழி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.

மூஸா(அலை), ஈஸா(அலை) ஆகியோருக்கு வார வழிபாட்டு நாளாக அல்லாஹ் நிர்ணயித்த நாள் வெள்ளிக்கிழமை தான் என்பது இந்த ஹதீத்களில் இருந்து தெளி வாகிறது. பின்னால் வந்த வழிகேடர்களான யூத, கிறிஸ்தவர்கள் தான் வெள்ளிக் கிழமையை, சனிக்கிழமையாகவும், ஞாயிற்றுக்கிழமையாகவும் மாற்றி அமைந் திருக்கிறார்கள். இதில் இருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் யூதர்கள் சனிக்கிழமையையும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாடு செய்வது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியது அல்ல. மாறாக அல்லாஹ்வுக்கு மாறு செய்து அவர்களாகவே உருவாக்கிக் கொண்டது. இதை விளங்கிக் கொள்ளாமல் இன்றைக்கு இஸ்லாமிய அறிஞர்கள் பலர் தவறாக விளக்கம் கொடுத்து வருகிறார்கள். அவர் கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு இனிவரும் காலங்களில் சத்தியத்தை மக்க ளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மனிதர்கள் அனைவருக்கும் உண்மையான வழி பாட்டு நாள் எது? உண்மையான மார்க்கம் எது? சத்தியத்தில் இருந்து யார்? மக்களை வழிகெடுக்கிறார்கள? போன்றவற்றை நன்கு அறிந்து பின்னர் தெளிவுபடுத்த வேண்டும். அல்லாஹ் சத்தியத்தை அறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் நன்மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக..

Previous post:

Next post: