பொறுமையாளர்களின் சிறப்புக்கள்!

in 2023 ஜூலை

பொறுமையாளர்களின் சிறப்புக்கள்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 

ஜூன்  மாத  தொடர்ச்சி….

இறுதியில்அல்லாஹ்வைமட்டும்வணங்கிக்கொண்டுநன்மைகளும்புரிந்துகொண்டிருந்தநல்லோர், அல்லது அல் லாஹ்வையும் வணங்கிக் கொண்டு சில பாவங்களும் புரிந்து வந்த தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் மக்கள் அனை வரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால் சென்றார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங் கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் உல கத்தில் நாங்கள் வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்த மக்களிடம் அதிக அளவில் தேவை யுள்ளவர்களாக இருந்தும் அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல்பொறுமையுடன்அவர்களை விட்டுப் பிரிந்திருந் தோம். இப்போது மட்டும் அவர்கள் பின் னால் நாங்கள் செல்வோமா? என்ன? இங்கு ஓர் அழைப்பாளர் ஒவ்வொரு சமுதாயத்தா ரும் உலக வாழ்வில் தாம் வணங்கிக் கொண் டிருந்த அவர்களுடன் சேர்ந்து கொள்ளட் டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறைவ னையே நாங்கள் இத்தருணத்தில் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறுவார்கள். முழுமையாக அறிய பாருங் கள்: (புகாரி: அபூஹுரைரா(ரழி), புகாரி: 554, 573,4851,6573, 6574, 7434, 7435, 7436, 7436, 7437, 7438, 7439, முஸ்லிம்: 299) உண்மையில்,

சுவர்க்கத்தில் அல்லாஹ்வை காண்பதே பேரின்பமாகும் :

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். அவர்கள் தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். (75:22,23, மேலும் பார்க்க: 2:46,223,249, 3:77, 6:31,154, 10:7,11,15,45, 11:29, 13:2, 18:105, 110, 29:5,23,  30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15) நீங்கள் மறுமையில் உங்கள் இறைவனைக் கண் கூடாகக் காண்பீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜரீர்பின் அப்தில் லாஹ் (ரழி), புகாரி: 7435,4919)

அன்று அல்லாஹ்வைக் காண்பதே சுவர்க்கவாசிகளுக்குப் பேரின்பமாக இருக் கும் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பர்.

யார் அல்லாஹ்வின் சந்திப்பை சுவர்க் கத்தில் எதிர்பார்க்கின்றாரோ அவரது எதிர் பார்ப்பு ஒருபோதும் வீண்போகாது. நிச்சய மாக அதற்கான அல்லாஹ்வின் தவணை வந்தே தீரும். (29:5) யார் மறுமை இல்லத் தில் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று ஆசையோடு எதிர்பார்க்கின்றாரோ அவரது எதிர்பார்ப்பை நிச்சயமாக அல்லாஹ் நிறைவேற்றுவான். அதையே பின்வரும்  ஹதீதில், 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பொறுமை கொண்டவராக அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகின்றாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். (அபூமூசா(ரழி), உபாதா பின் அஸ்ஸாமித் (ரழி), புகாரி: 6507,6508)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான். என் அடியான் என்னைச் சந்திக்க விரும்பினால் நானும் அவனைச் சந்திக்க விரும்புகிறேன்.  (அபூஹுரைரா(ரழி) புகாரி: 7504)

சுவர்க்கத்தில் எல்லாவற்றையும் விட அல்லாஹ்வின் அன்பும் அவனது முகத்தைப் பார்ப்பதுமே  மிகவும்  பெரியதாகும்.

இறை நம்பிக்கை கொண்ட ஆண்க ளுக்கும், இறை நம்பிக்கை கொண்ட பெண் களுக்கும் சுவர்க்கச் சோலைகள் கிடைக் கும் என அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றுக்கிடையே சதாவும் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் அவற்றில் அவர்கள் நிரந்த ரமாக இருப்பார்கள். உயர் தரமானஅத்ன்எனும் சுவர்க்கச் சோலைகளில் எழிலான குடியிறுப்புகளையும் வாக்களித்துள்ளான் அவை எல்லாவற்றையும் விட அங்கு அல்லாஹ்வின் அன்பும் அவனது முகத்தைப் பார்ப்பதுமே மிகவும் பெரியது. அதுவே மகத்தான வெற்றியும் ஆகும். (9:72) சுவர்க்க வாசிகளுக்கு அவர்கள் அனுபவிக்கும் எல்லா சுகங்களை விடவும் அவர்கள் மீது அல்லாஹ்வுக்கு ஏற்படும் அன்பும் அவனது அழகிய தரிசனமும் மிகப் பெரியதும் மகத்துவமானதுமாகும்.

சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந் தும் ஒரு பொது அறிவிப்பாளர் சுவர்க்க வாசிகள் அனைவரும் கேட்கும் விதமாகசுவர்க்கவாசிகளே!’ உங்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள வாக்குறுதி ஒன்றுள்ளது. அதை உங்களுக்கு முழுமையாக நிறைவேற்ற அவன் விரும்புகின்றான் என்று கூறுவார். அதற்கு அவர்கள் அல்லாஹ் எங்களுக்குத் தராசில் நன்மையின் தட்டை கணக்கச் செய்யவில்லையா? எங்கள் முகங்களை வெண்மையாக்க வில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்திற்குள் அனுமதிக்க வில்லையா? இன்னும் அல்லாஹ் எங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதி வேறு என்ன இருக்கிறது? என்று கேட்பார்கள். உடனே அல்லாஹ் தனக்கும் அவர்களுக்கு மிடையே இருந்த திரையைத் திறப்பான். அப்போது தங்களின் இறைவனாகிய அல்லாஹ்வை  அவர்கள்  பார்ப்பார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந் நேரம் அல்லாஹ்வை அவர்கள் பார்ப்பதை விட அவர்களுக்கு விருப்பமானதும் கண் குளிர்ச்சி தரக்கூடியதும் வேறு எதுவும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அன்று அவனைப் பார்ப்பதுதான் மிக விருப்பமானது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸுஹைப் பின் சினான்(ரழி), அபூமூஸா அல்அஷ்அரீ(ரழி), முஸ்லிம்: 297, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், ரி.ஸா.1896, தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:11,12 & 494,495) மேலும்,

சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந் ததும் ஒரு பொது அறிவிப்பாளர் சுவர்க்க வாசிகள் ஒருவர் விடாமல் அனைவரும் கேட்கும் விதமாக சுவர்க்கவாசிகளே! அல் லாஹ் உங்களுக்குப் பிரதிபலனையும் அதை விடக் கூடுதலான நன்மையையும் வாக்க ளித்திருக்கின்றான். “பிரதிபலன்என்பது சுவர்க்கமாகவும். கூடுதல் நன்மை என்பது வல்லமையும் மாண்பும் மிக்க அருளாளன் அல்லாஹ்வின் திருமுகத்தைக் காண்பது மாகும் என்று கூறுவார். (அபூமூசா அல் அஷ் அரீ(ரழி), தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்:4:494, 495)

நன்மை புரிந்தோருக்கு அதன் பிரதி பலனும் அதைவிடக் கூடுதல் நன்மையும் கிடைக்கும். (10:26) எனும் இந்த வசனம் குறித்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் பிரதிபலன் என்பது சுவர்க் கமாகவும். கூடுதல் நன்மை என்பது வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ்வின் திருமுகத்தைக் காண்பதுமாகும் என்று கூறினார்கள். (உபைபின் கஅப்(ரழி), தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 4:494,495) உலகிலும்,

நேர்வழி காட்டும் தலைவர்களாக உண்டாக்கப்படும் :

இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நமது வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்டபோது, நம்முடைய கட் டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர் களை, இமாம்களை அவர்களின் நின்றும் உண்டாக்கினோம்.  (32:24) 

அதாவது இறைக்கட்டளைகளை நிறைவேற்றுவதிலும், அவன் விலக்கியவற்றைக் கைவிடுவதிலும், இறைத்தூதர்களை ஏற்று அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தைப் பின்பற்றி நடப்பதிலும் எதுவரை அவர்கள்பொறுமையைக்கடைபிடித்தார்களோ அதுவரை அவர்களிலிருந்தே தலைவர்கள் தோன்றினார்கள். அல்லாஹ்வின் ஆணையின் பேரில் அத்தலைவர்கள் சத்தியத்திற்கு வழிகாட்டினார்கள். நன்மைகளின்பால் மக்களை அழைத்துக் கொண்டும், நன்மை செய்யுமாறு ஏவி தீமையிலிருத்து தடுத்துக் கொண்டும் இருந்தார்கள். இதையே,

அவர்கள் பொறுமை காத்து நமது வசனங்களின் மீது உறுதியாக நம்பிக்கை கொண்டபோது இவ்வாறு செய்தோம் என அல்லாஹ்  குறிப்பிடுகின்றான்.  (32:24)

இங்கேபொறுமை காத்தபோதுஎன்பதற்குஉலக ஆசைகளைத் துறந்து பொறுமை காத்தபோதுஎன்பதாக கத்தாதா(ரஹ்) அவர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்7, பக்கம் 237-240)

ஆக உலக ஆசைகளை ஒதுக்காத வரையில் பிறரால் பின்பற்றப்படும் தலைவனாக ஒரு மனிதன் ஆகமுடியாது என்று சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒருமுறை அவர்களிடம், இறை நம்பிக்கைக்குப் பொறுமை என்பது உடலுக்குத் தலையைப் போன்றதாகும் என அலீ(ரழி) அவர்கள் கூறினார்கள். அதன் விளக்கம் என்ன?  என்று கேட்டபோது,

அவர்களில், சிலர் பொறுமை காத்த போது நமது கட்டளையின் பேரில் நல்வழி காட்டும் தலைவர்களாக ஆக்கினோம் என்ற இந்த (32:24) வசனத்தை நீர் செவியுறவில்லையா? தலையாய வி­யமான  பொறுமையை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டபோது தலைவர்கள் ஆனார்கள் என்று சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) அவர்கள் கூறினார்கள். எனவேதான் அறிஞர்களில் சிலர் பொறுமையினாலும், உறுதியினாலும் விரைவில் தலைமையை அடையலாம் என்றார்கள். இதனாலேயே மற்றுமொரு வசனத்தில்  அல்லாஹ்  கூறுகின்றான்.

நிச்சயமாக நாம் இஸ்ரவேலர்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் வழங்கினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு உணவாக அளித்தோம். அக்கால உலக மக்கள் அனைவரையும் விட அவர்களை மேன்மைப்படுத்தியிருந்தோம். இந்த மார்க்க வி­யத்தில் தெளி வான பல சான்றுகளையும் அவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோம். வேத அறிவு வந்த பின்னரே தவிர அதற்கு முன் அவர்கள் கருத்து முரண்பாடு கொள்ளவில்லை. (45:16,17)

Previous post:

Next post: