இஸ்லாமிய மார்க்கத்தை விளங்க நபி(ஸல்)
அவர்களின் வழிகாட்டல் மட்டும் போதுமா?
மார்க்கத்த முழுமையாக விளங்க எங்களுக்கு முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மட்டும் போதாது!
குலாம் அஹ்மது காதியானி என்பவரால் தான் நாங்கள் மார்க்கத்தை முழுமை யாக விளங்க முடியும் என்று கூறி காதியானிகள் அல்குர்ஆன் 5:3, 16:44,64 போன்ற வசனங்களை நிராகரித்து இதன்மூலம் நபி(ஸல்) அவர்களையும் நிராகரிக்கின்றனர்.
அதேபோல் ஹனஃபியாக்கள் நபி (ஸல்) அவர்கள் மட்டும் போதாது! இமாம் அபூஹனீஃபாவும் வேண்டும் என அன் னாரை முன்னிலைப்படுத்தி அல்குர்ஆன் 5:3, 16:44, 64 வசனங்களை நிராகரித்து இதன்மூலம் நபி(ஸல்) அவர்களையும் நிராகரிக்கின்றனர்.
இப்படியே ஷாஃபி ஹன்பலி மாலிகி போன்ற மத்ஹபினரும் அதேபோல் இஸ்லாமிய பிரிவு இயக்கத்தினர் பீஜையையும் இவ்வாறு அந்தந்த பிரிவு இயக்கத்தினர் அவரவர்களின் தலைவரை முன்னிலைப்படுத்தி மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களை நிராகரித்து இதன்மூலம் நபி(ஸல்) அவர்களையும் புறக்கணிக்கின்றனர்.
ஆனால் உச்சகட்டமாக நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவதானது, அவர்களுக்கு கட்டுப்படுவதானது தனக்கே கட்டுப்படுவதாக எல்லாம் வல்ல அல்லாஹ் குறிப் பிடுகின்றான். எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார். யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை; ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்ப வராக அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4:80)
இவ்வாறான புறக்கணிப்பின் காரண மாக பல பிரிவுகளாகப் பிரிந்து சிதறிக் கிடக்கும் நமது சமுதாயத்தினருக்கு கிடைக்க வேண்டிய அல்லாஹ்வின் உதவி தூரமாகி இந்துத்துவா பயங்கரவாதிகளின் கொடுமைகளுக்கு நமது சமுதாயம் பலியாகிக் கொண்டிருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்! இந்த இழிவு நீங்க வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழி நமது சமுதாயம் அனைத்துப் பிரிவு இயக்கங்களின் தலைவர்களை கண்டிப்பாக புறக்கணித்து விட்டு அல்குர்ஆன் 22:78 வசனத்தின்படியும் புகாரி 7084 நபிமொழியின்படியும் ஒரே அமீரின் கீழ் ஒரே அல்முஸ்லிமீன் சமுதாய மாக ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்திய மாகும். இல்லைய என்றால் காவிப் பயங்கரவாதி அமித்ஷா கூறியபடி இன்னும் நாற்பது ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சி தான் நீடிக்கும் என்பது மட்டுமல்ல நானூறு ஆண்டுகள் கூட நீடிக்கலாம்.
அவ்வாறு நீடிக்கும் காலமெல்லாம் நமது சமுதாயம் தொடர்ந்து இந்துத்துவாவினரின் பயங்கரவாதத்தை அதன் கொடுமைகளை அனுபவித்துதான் ஆகவேண்டும். எனவே எனது அருமை இஸ்லாமிய சமுதாயமே விரைவாக சிந்தித்து உடனடியாக முடிவெடுத்து ஒரே சமுதாயமாக ஒன்றிணையுங்கள்! பின்பு பாருங்கள். நமக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவி வரு வதில் எந்தத் தடையும் இருக்காது! தடை என்பதே இல்லை!
மேற்குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனங் கள் வருமாறு :
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டோம்.
மேலும் என்னுடைய அருட்கொடையையும் உங்களுக்கு நிறைவு செய்து விட்டோம்.
இன்னும் இஸ்லாமிய மார்க்கத்தையே உங்களுக்காக நாம் தேர்வு செய்து விட்டோம்… (அல்குர்ஆன் 5:3)
தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப் பினோம். நபியே! மனிதர்களுக்கு அருளப்பட்டதை (முஹம்மது நபியாகிய) நீங்கள் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளி னோம். (அல்குர்ஆன் 16:44)
அல்குர்ஆன் சம்பந்தமாக மனிதர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அல்குர்ஆனை தெளிவுபடுத்தும் அதி காரம் நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியது.
(நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ்வியத்)தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார் களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம்மீது இவ்வேதத்தை இறக்கினோம். இன்னும், ஈமான் கொண்டுள்ள மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், ரஹ்மத்தாகவும் (அருளாகவும்) இருக்கிறது. (அல்குர்ஆன் : 16:64)
இஸ்லாமிய மார்க்கத்தை தெளிவாக்கி நம்மை வழிநடத்திச் செல்லக்கூடிய ஒரே நிரந்தரத் தலைவர் ஒரே இமாம் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டும்தானே தவிர குலாம் அஹ்மது காதியானியோ அல்லது இமாம் அபூஹனீஃபாவோ அல்லது புரோகிதரோ அல்லது வேறு எந்த மனிதரும் கிடையவே கிடையாது.