என்று தெளியுமோ… மார்க்க அறிஞர்களின் மதிமயக்கம்?

in 2023 ஆகஸ்ட்

என்று தெளியுமோ மார்க்க அறிஞர்களின் மதிமயக்கம்?

K.M.H.

இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கம். அல்லாஹ்வின் அதி காரத்திலுள்ள மார்க்கம். அதில் மனித தலை யீட்டிற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை. 39:3, 5:3, 3:19, 3:85, 42:21, 49:16, 9:31, 7:3, 33:66-68, 30:32, 6:159, 22:78, 41:33, 18:102-106.

இன்னும் இவை போன்ற எண்ணற்ற திருகுர்ஆன் வசனங்கள் இதை உண்மைப் படுத்தும், ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் அதை மனித அறிவு ஏற்றுக் கொண்டாலும் அதைக்கொண்டு அல்லாஹ்வின் ஒரேயயாரு கட்டளையைப் புறக்கணித்தாலும், உதா சீனப்படுத்தினாலும் அது இறை நிராகரிப்பில் கொண்டு சேர்க்கும் என்பதில் உண்மை விசு வாசிகளுக்கு அணு அளவும் சந்தேகமில்லை. இறைத்தூதர்கள் இந்த வி­யத்தில் மிகமிக எச்சரிக்கையாக நடந்து கொண்டார்கள். தங் களின் சுய அறிவை சிறிதும் மார்க்கத்தில் நுழைக்காமல் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைத் தார்கள். அதனால் அவர்கள் மக்கள் மன்றத் தில் புறக்கணிக்கப்பட்டாலும், மக்கள் எண் ணற்ற துன்பங்களைத் தந்தாலும் பொறுமை யுடன் சகித்துக் கொண்டார்களே அல்லாமல் சத்தியத்தில் எதையும் அது சிறிய வி­யமாக இருந்தாலும் பெரிய வி­யமாக இருந்தாலும் மக்களிடமிருந்து மறைக்கத் துணியவில்லை.

இன்னும், எங்கள் கடமை (இறை வனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத் துச் சொல்வதைத் தவிர வேறில்லை‘. அல்குர்ஆன்  36:17

என்ற அல்லாஹ்வின் கட்டளையை சிர மேல் கொண்டு செயல்பட்டார்கள். இன் றைய சூழ்நிலைக்கு இது சாத்தியம், இது சாத்தியமில்லை என்று அவர்களாகச் சுய மதிப்பீடு செய்து மார்க்கப் பிரச்சாரம் செய்ய வில்லை. தங்களின் அறிவு ஆற்றலைக் கொண்டு மார்க்கத்தை மக்களிடையே பரப்பிவிட முடியும் என்று தப்புக் கணக்கும் போடவில்லை. நேர்வழி காட்டும் முழு அதி காரமும் அல்லாஹ்வின் கையில் மட்டுமே இருக்கிறது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள். இப்படிச் செய்தால் மக்கள் நேர்வழிக்கு வந்து விடுவார்கள்; அப்படிச் செய்தால் மக்கள் அதிகமாகச் சத்திய வழியில் இணைந்துவிடுவார்கள் என்று அவர்களாக சுயமதிப்பீடு செய்து செயல்படவில்லை. அல்லாஹ் அறிவித்ததிலி ருந்து சின்னஞ்சிறிய வி­யத்தையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதில் அவர்கள் சிறிதும் குறைவு செய்யவில்லை. அது வி­யத்தில் அல்லாஹ் வின் எச்சரிக்கைகள் மிகமிகக் கடுமையாக இருக்கின்றன. அவை வருமாறு:

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம் மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும். (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றிய வராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன்  தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்…’ அல்குர்ஆன்  5:67

“(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சில வற்றை விட்டுவிட எண்ணவோ, கூடும்; நிச்ச யமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை…’ அல்குர்ஆன் 11:12

(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லா ததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந் தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள். மேலும், நாம் உம்மை (சத்திய பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்கவில்லையயனில் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும். “(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரை யும் நீர் காணமாட்டீர்‘. அல்குர்ஆன் 17:73-75

அன்றியும், நம்மீது சொற்களில் சில வற்றை இட்டுக்கட்டி (இத்தூதர்) கூறியிருப் பாரானால், அவரை நாம் வலக்கரப் பிடியாகப்  பிடித்து அவருடைய நாடி நரம்பைத் தரித்தி ருப்போம்; அன்றியும் உங்களில் எவரும் (நாம்) (வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர் களில்லை. அல்குர்ஆன் 69:44-47

அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே இந்த எச்சரிக்கைகள்; எங்களுக்கில்லை; எனவே நாங்கள் எங்களது சுய விருப்பப்படி கூட்டிக் குறைத்து மார்க்கப் பிரச்சாரம் செய்யலாம்; அதற்குத் தடை இல்லை என்றும் இந்த மார்க்க அறிஞர்கள் கூறமுடியாது. அது குறித்த குர்ஆனின் எச்சரிக்கைகள் வருமாறு:

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ் வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.  அல்குர்ஆன் 33:21

(நபியே!) நீர் கூறும்; “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங் கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங் கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப் பான்…’ அல்குர்ஆன் 3:31

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசம் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண் ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ் வுக்கும் அவனுடைய ரசூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்க மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். அல்குர்ஆன் 33:36

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப் பட்டிருக்க வேண்டுமே! என்று கதறுவார்கள். “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங் கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக் கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்என்று கதறுவார் கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர் களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப் பாயாகஎன்று கதறுவார்கள். அல்குர்ஆன் 33:66-68

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங் கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். அல்குர்ஆன் 7:3

இவ்வளவு தெளிவான, கடுமையான எச் சரிக்கைகள் உள்ளங்கை நெல்லிக்கனி போல், குன்றிலிட்ட தீபம் போல் இருந்தும் இன்றைய மார்க்க அறிஞர்கள் எந்த மயக்கத் தில் மத்ஹபுகளையும், தரீக்காக்களையும், தர்காக்களையும் ஆதரிக்கிறார்கள? பெரும் பான்மையான முஸ்லிம்கள் இந்த மத்ஹபு, தரீக்கா, தர்கா மோகத்தில் சிக்கி இருக்கிறார் கள்; அவற்றை எதிர்த்து சத்தியத்தைச் சொன் னால் பெரும் மேதைகளாக நம்மை மதித்துக் கொண்டிருக்கும் அவர்கள் நம்மைத்  தூக்கி  பொட்டென்று கீழே போட்டு விடுவார்கள் என்ற அச்சத்தால் அறிந்த சத்தியத்தை மறைக்கிறார்களா?

எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக் களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவி னர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண் மையை மறைக்கின்றனர்  அல்குர்ஆன் 2:146

அல்லாஹ் அடையாளம் காட்டுவது மத் ஹபுகளையும், தரீக்காக்களையும், தர்காக்க ளையும் சரிகண்டு நியாயப்படுத்தும் முஸ்லிம் அறிஞர்களுக்கும் ஏன் பொருந்தாது?

மார்க்க அறிஞர்களே! உங்களைப் பீடித்துள்ள மதிமயக்கம் என்று தெளியப் போகிறதோ?

Previous post:

Next post: