மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்! 

in 2023 ஆகஸ்ட்

மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்! 

அஹமது இப்ராஹிம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வுடன் சேர்ந்து நாகூர், ஏர்வாடி, பொட்டல் புதூர் போன்று லாத் உஸ்ஸா இவை போன்ற கற்பனை மண்ணறைகளையும், கற்பனை தெய்வங்களையும் இணைத்து இணை வைத்து வணங்கியதால்தான் இப்ராஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளும், முஸ்லிம்கள் என தங்க ளைத் தாங்களே நினைத்துக் கொண்டி ருந்த குறை´கள், காஃபிர்கள் எனும் நிராகரிப்பாளர்கள் ஆனார்கள். நிரந்தர நரகவாதியானார்கள்.

அதேபோன்று இஸ்லாமிய மார்க்கத் திற்கு அணுவின் முனையளவு கூட சம் பந்தமே இல்லாத ஏர்வாடி நாகூர் போன்ற தர்காக்களில் பறக்க விடும் இந்த கற்பனைக் கொடியின் மீதும் கற்பனை கப்ரின் மீதும் நம்பிக்கை வைப்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வினிடத்தில் மன்னிக்க முடியாத மாபெரும் குற்ற மாகும்.

கீழ்க்காணும் அல்குர்ஆன் வசனங்களை பார்வையிடுக:

மேலும், அவர்கள் இணை வைப்ப வர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ் வின்  மீது  நம்பிக்கை  கொள்வதில்லை. (அலகுர்ஆன் 12:106)

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுப்படுத்துவீராக).  (அல்குர்ஆன் 31:13)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கமாட் டான்; இதைத் தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கி றார்களோ அவர்கள் நிச்சயமாக பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார் கள். (அல்குர்ஆன் 4:48)

தங்களுக்கு(யாதொரு) நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங் குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட் டும் செய்பவைஎன்றும் கூறுகிறார்கள். அதற்கு நீர், “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவ னுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிக வும் பரிசுத்தமானவன். அவர்கள் இணை வைப்பவற்றை விட மிகவும் உயர்ந்த வன்  என்று  கூறும்.   (அல்குர்ஆன் 10:18)

எனது அன்பான இஸ்லாமிய அப் பாவி சகோதர சகோதரிகளே! பாவங் களிலே மிகமிக மோசமான பாவமான தும் எல்லாம் வல்ல அல்லாஹ்வினி டத்தில் மன்னிப்பே இல்லாத பெரும் பாவமான மேற்கண்ட தர்கா மற்றும் கப்ர் வழிபாட்டை  விட்டு முற்றிலும் நீங்கி எல்லாம் வல்ல அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடும் உண்மை முஸ்லிம்களாக ஆகிவிடுங்கள் உங்க ளுடைய மரணத்திற்கு முன்பாக.  இன்ஷா அல்லாஹ்!

Previous post:

Next post: