மார்க்க அறிஞர்களால் பூதகரமாக்கப்படும் “பிறை‘
எம். சையத் முபாரக், நாகை
முஸ்லிம் சமுதாயத்தினர் சிறுசிறு குழுக்களாக, குடும்பங்களாக பல்வேறு பகுதியில் முன்பு வசித்து வந்தனர். அதன் காரணமாக ஆங்காங்கே தென்படும் பிறையை பார்த்து ரமலான் மாத நோன்பையும், பெருநாளையும் தீர்மாணித்தனர். அதனை மார்க்க அறிஞர்களும் சரியயன கூறினர்.
பின்பு மக்கள் தொகை பெருகி பல்வேறு ஊர்களும் பெருகி மற்றும் விஞ்ஞான வளர்ச்சியும் அடைந்துள்ளது. அதன் காரணமாக எந்தவொரு செய்தியையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகின்றது.
இத்தகைய வளர்ச்சியின் காரணமாக சர்வதேசப் பிறை என்ற கருத்தின் பக்கமும், கணக்கீடும் தெரியவந்தால் மக்களிடம் வெகுவாக பிறை விசயத்தில் மாற்றம் உண்டாகியது. அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் இந்த மாற்றத்தையும், வளர்ச்சியையும் தாங்கிகொள்ள முடியாத சில மவ்லவிகள் பிறையை கண்ணால் காணவேணடும் என்பதே நபிவழி. கணக்கீட்டை ஏற்றுக்கொள்வது என்பது நபிவழிக்கு மாற்றமானது என மக்களை குழப்புகிறார்கள். அதாவது பிறையை கண்ணால் பார்க்க வேண்டும் என்பதில் பிடிவாதமாகயிருந்த மார்க்க அறிஞர்கள் தடம் புரண்டு ஒற்றுமையைக் கடைபிடிக்கவேண்டும் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். அதற்கு ஆதாரமாக கீழ்கண்ட ஹதீதை முன்னிறுத்துகின்றனர்.
“நீங்கள் நோன்பு என்று முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நீங்கள் பெருநாள் ஆகும்‘ என்ற ஹதீதை இப்போது கூறுகின்றனர்.
மேலும் ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கு மற்றொரு ஹதீதைதும் சுட்டிக் காட்டுகின்றனர்.
நாங்கள் உம்ராவிற்காக (மக்கா விற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் பத்னுல் நக்லா எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, பிறையைப் பார்க்க ஒன்று கூடினோம். அப்போது மக்களில் சிலர் “அது மூன்றாம் பிறை‘ என்று கூறினர். வேறு சிலர் “அது இரண்டாவது பிறை‘ என்றனர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைச் சந்தித்தபோது, “நாங்கள் பிறை பார்த்தோம். சிலர் இரண்டாம் பிறை என்றனர். வேறு சிலர் “மூன்றாம் பிறை‘ என்றனர் என்று சொன்னோம். அதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் “எந்த இரவில் நீங்கள் பிறையைக் காண்பீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு “இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்‘ என்று பதிலளித்தோம். அப்போது, “பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிது நேரம் தென்படச் செய்கிறான்‘ ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குறியதே ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். (முஸ்லிம் 1984)
அந்த இரவுக்குறியதே அந்தப் பிறை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதை மாற்றி இந்த மவ்லவிகள் நாம் பார்க்கும்போது தெரிகின்ற பிறையை (2வது அல்லது 3வது பிறையாக இருந்தாலும்) முதல் பிறை என்று விளங்கி டவுன் காஜி சொல்லும் நாளில் நோன்பு பிடிக்கலாம். பெருநாள் கொண்டாடலாம் என்கின்றனர்.
சர்வதேசப் பிறை என்ற கருத்து முன் வைக்கப்பட்டு பெருநாள் கொண்டாடிய ஆரம்ப காலத்திலாவது குடும்பத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். ஒரே குடும்பத்தில் இரண்டு பெருநாளா? என்ற கேள்விகள் எழுந்தன. இப்போது இது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. முதல் நாள் உங்களுக்குப் பெருநாள், அடுத்த நாள் எங்களுக்கு பெருநாள் என்று மக்கள் சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டு விட்டனர். இன்று பெருநாள் தொழுகை தொழுத ஒருவர், தன்னுடன் அன்று தொழுத உறவினர்களை தன்னுடன் காலை உணவுச் சாப்பிடச் சொல்கிறார். அடுத்த நாள் அவர் பெருநாள் உடையை அணிந்து கொண்டு அன்று பெருநாள் கொண்டாடும் உறவினர் வீடுகளுக்குச் சென்று காலை உணவு சாப்பிடுவதுடன், பிள்ளைகளுக்குப் பணமும் கொடுப்பார். உங்களுக்கு இரண்டு பெருநாளா? என்று கேலியாகக் கேட்பவர்களுக்குப் பதிலாகப் புன்னகை புரிவார். இப்போது இது பிரச்சனையாக மாறாமல் ஏற்றுக்கொண்ட ஒன்றாக மாறிவிட்டது.
ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறும் மார்க்க அறிஞர்கள் பணி என்னவாக இருக்கவேண்டும் என்றால் முஸ்லிம் சமுதாயம் இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி பெற வழி காணவேண்டும்.
அல்லாஹ்விற்கு மட்டும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய என்ன என்ன செய்யவேண்டும் மற்றும் மனித சமுதாயத்திற்கு செய்யவேண்டிய கடமைகள் என்னவெல்லாம் உள்ளன என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
அதாவது “நன்மையை ஏவி, தீமையை தடுக்கும் பணியை‘ உணர்ச்சிவசப்படாத அழைப்பு பணியை எவ்வாறு செய்யவேண்டும் என்று சொல்பவராக இருக்க வேண்டும்.
மாறாக சின்ன, சின்ன விசயங்களில் மஸாயில்கள் மத்ஹபு என்ற பெயரில் பிளவுப் படுத்துகினறனர் அவர்களை மக்களும் நம்புகிறார்கள்.
மார்க்க அறிஞர்களுக்கு நன்றாகவே தெரியும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் உலகெங்கும் “பிறை‘ தெரியாது என்பது.
பிறையைக் கண்ணால் காண வேண்டுமாம்; பிறைக் கணக்கீட்டை கணக்கிலேயே எடுக்க முடியாதாம். அதற்கான முகாந்திரம் இஸ்லாத்தில் இல்லவே இல்லையாம் என்ற மவ்லவிகளின் இந்த அடிமுட்டாள்தனமான (கூமுட்டை) வாதத்தை என்னவென்பது? தொழுகை நேரத்தைக் கணக்கிட சூரியன் கருவி என்பதால் இப்போது கடிகாரத்தை கருவியாக ஏற்றுக் கொள்வார்களாம் ஹஜ்ஜிற்கு ஒட்டகத்தில், கால்நடையாக, நடந்து வருவார்கள் என்பதில் ஒட்டகம், நடந்து வருதல் சாதனம் என்பதால் இப்போது விமானத்தில், பஸ்ஸில் வருவதை சாதனமாக ஏற்றுக்கொள்வார்களாம். ஆனால், எந்த நாள் என்பதை, மாதத்தை, வருடத்தைத் தீர்மானிக்கும் பிறையை (சந்திரனை) கருவி என்று இந்த மவ்லவிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்களாம். ஏனெனில் அது (பிறை) இபாதத் தாம்; சாதனம் இல்லையாம். அதனால் கணக்கீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம். கண்ணால் பார்க்க வேண்டும் பிறையை என்ற (கான்செப்டே) கருத்தே இருப்பதால் இந்த துல்லியமான கணக்கீட்டை தூக்கி எறிந்து விடுவார்களாம் இந்த மவ்லவிகள். இவர்களின் இந்த நிலையை என்னவென்பது?
அந்தந்தப் பகுதிகளில் பிறைப் பார்த்து, நோன்பு பிடித்து, பெருநாள் கொண்டாடிய மக்களிடம், உலகில் எங்கு பிறைப் பார்த்தாலும், சாட்சியுடன் பிறை பார்த்த தகவல் எங்கிருந்து வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளலாம், கடைபிடிக்கலாம் என்று இந்த மவ்லவிகள் பிரச்சாரம் செய்து மக்களைப் பிரித்தனர்; ஒற்றுமையைக் குலைத்தனர். ஆனால், இப்போது முஸ்லிம்கள் எல்லோரும் ஒற்றுமையாக, சேர்ந்து நோன்பு பிடிக்க வேண்டும்; ஒற்றுமையாக சேர்ந்து பெருநாள் கொண்டாடவேண்டும் என்று இந்த மவ்லவிகள் குட்டையைக் குழப்புகின்றனர். அதற்குக் காரணமாக, பிறை எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் தெரிவதில்லை; எங்காவது சூரிய, சந்திர கிரகணம் தோன்றும்போது உலகம் முழுவதும் கிரகண தொழுகை தொழுவதில்லை; தேதிக்கோடு அருகில் வெவ் வேறு தினம் என்கின்றனர் இந்த மவ்லவி கள். இந்த மவ்லவிகளின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் சூப்பரோ சூப்பர். உலகில் அனைவரும் ஒரே நாளில் நோன்பு பிடிக்கலாம்; பெருநாள் கொண் டாடலாம் என்பதை ஒரே நேரத்தில் கொண்டாட முடியாது என்று பேச்சு சாதுர்யத்தால் மக்களை திசை திருப்பு கின்றனர் இந்த மவ்லவிகள்.