ஆய்வு செய்வோமா?

in 2023 நவம்பர்

ஆய்வு செய்வோமா?

எம். சையத் முபாரக், நாகை

இஸ்லாத்தில்  ஆய்வு  உண்டா?

மத வேதநூல்கள் எல்லாம் மக்களை சிந்திக்கவோ, ஆராயவோ தூண்டியதில்லை. அல்குர்ஆன் மட்டுமே சிந்தனைச் செய்! ஆராய்ந்து பார்!! என்று  மக்களைத் தூண்டு கிறது. அறிவுக்கு வேலை கொடு என்று சொன்னது இஸ்லாம் மட்டுமே. “அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் உள்ளங்களில் பூட்டுகளா (பூட்டி) இருக்கின்றன?  (அல்குர் ஆன் 47:24) 

மேலும் பார்க்க : 3:191, 4:82, 7:185, 12:105, 13:3, 16:10-17, 32:4, 38:29, 45:13.

அல்லாஹ்வின் பேச்சான அல்குர்ஆன் மூலம் நம்மை சிந்திக்க, ஆராயச் சொன்னதால் உலகில் ஒரு மாற்றம், மாபெரும் புரட்சி ஏற்பட்டது. மற்ற மதங்கள் எல்லாம் ஆன்மீகத்திற்கு அறிவியல் முரணானது என்றது. ஆன்மீகத்தையும், அறிவியலையும் ஒன்றிணைத்தது  இஸ்லாம்  மட்டுமே.

எழுதுகோல் (பேனா) கொண்டு (கல்வியைக்) கற்பித்தவன் அவன் (அல்லாஹ்) மனிதன் அறியாதவற்றையயல்லாம் அவனுக்கு  கற்றுத்தந்தான்.  (அல்குர்ன் 96:4,5)

அறிந்தோரும், அறியாதோரும் சமம் ஆவார்களா? நல்லுபதேசம் பெறுபவர் அறிவுடைய வர்களே! (அல்குர்ஆன் 39:9)

இந்த வசனங்களும், இதற்கு மேலுள்ள வசனங்களும், மேலும் பல வசனங்களும் மனிதர்களின் சிந்தனைகளைத் தூண்டி வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை  ஏற்படுத்தியது. நவீன அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. முஸ்லிம்களின் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் என்று ஐரோப்பிய கல்வியாளர்கள் கூறியிருக் கின்றார்கள். 

ஆய்வுக்காக முஸ்லிம்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் கண்டு இந்த உலகு வியப்பில் மூழ்கியுள்ளது.ம் .லூப்பன், ஐரோப்பிய ஆய்வாளர்.

நமது சிந்தனைகளும், ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை உணர்த்தி, அல்லாஹ்வின் வல்லமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.  இவைகள் மேலும் நம்மை அல்லாஹ்வின் பக்கம் நெருங்க வைக்கிறது. அல்குர்ஆன் கல்வியின் ஊற்றுக்கண் அல்லவா? அறிவியல் அத்தட்சிகளையயல்லாம் நாம் உணராமல் குருடராகவும், செவிடராகவும் அல்லவா இருக்கிறோம். (பார்க்க:12:105, 11:24)

இருளடைந்த வீட்டின் வாசலும் ஜன் னல்களும் திறக்கப்பட்டால் சூரிய வெளிச்சம், தூய்மையான காற்று உட்புகுந்து வீட்டிற்கு அழகை, கம்பீரத்தைத் தரும். அதுபோல அல்குர்ஆன் சிந்தனையைத் தூண்டி, ஆராய்ச்சியைத் தூண்டியதால் மனித உள்ளத்தின் இருள் எனும் அறியாமை விலகி, அறிவெனும்  வெளிச்சம்  பரவியது.

புதுப்புது இலக்குகளை அடைய புறப் பார்வையிலிருந்து அகப்பார்வை நோக்கி நகர வேண்டும். இது உலக முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகளாகும். அதனை ஆன்மீக வழியில் அறிவியல் புரட்சி செய்து அடைந்தார்கள் அன்றைய முஸ்லிம்கள். இன்றைய முஸ்லிம்கள் அறிவியல் ஆராய்ச்சி செய்வதில்லை. ஆனால் அறிவியல் கண்டுபிடிப்பு களின் ஆணி வேர் நாங்கள்தான் என்று வெட்டிப் பெறுமை பேசுகின்றனர். அல்குர்ஆன் காட்டிய வழியில் நிரூபிக்கப்பட்ட சில அறிவியல் ஆய்வுகளை நாங்கள் புறந் தள்ளுவோம். அல்லாஹ்வின் அத்தாட்சி என்றாலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள். இதற்குக் காரணம் ஆராயும் திறனற்ற மார்க்க அறிஞர்களின் ஊதுகுழ லாக இவர்கள் இருப்பதுதான் முஸ்லிம்கள் தானும் சிந்தித்து, மார்க்க அறிஞர்களை ஆராயத்  தூண்ட வேண்டாமா?

அகீதாவில்  ஆய்வு  உண்டா?

அகீதாவில், அடிப்படைச் சட்டங்களில், கொள்கையில் நாம் ஆய்வு செய்ய முடியாது, கூடாது. அது ஆழ்ந்த நம்பிக்கையின் பாற்பட்டது. நமது சிந்தனைக்கெல்லாம் அப்பாற் பட்டது. அதற்கான அறிவை அல்லாஹ் (ஜல்) நமக்கு வழங்கவில்லை. (உம்.) மறுமை, விதி.

பிக்ஹ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளில் ஆய்வு  உண்டா?

நமது கடமையல்லாத செயல்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பது நம் அறிவுக்கு வேலை கொடுத்து, சிந்தித்து, ஆராய்ந்து வணக்க வழிபாட்டைச் செம்மையாக, ஈடுபாட்டோடு செய்வதற்கு வழி கோலுகிறது. ஆக்கப்பூர்வமான கருத்து வேறுபாடுகள் நமது அறிவு வளர்ச்சிக்கான, அறிவு தேடலுக்கான படிக்கட்டுகளே தவிர தடைக்கற்கள் அல்ல. அது நமது சிந்தனைத் திறனை மேம்படுத்தி, அல்லாஹ்வின் நெருக்கத்தை ஏற்படுத்தித் தரும். இதனை நாம் புரிந்து கொள்ளாமல் கருத்து வேறுபாடுகளால் பகைமை கொள்கிறோம். பிரிந்து நிற் கின்றோம். கருத்து வேறுபாடுகளின் முக்கி யத்துவத்தை நாம் உணர்ந்து கொண்டால் நமக்குள் பகைமை, பிரிவினை உண்டாகாது.

சுனன் அபூதாவூத் 286வது ஹதீதில், இருவர் பயணம் செய்தபோது தண்ணீர் கிடைக்காததால் தயம்மும் செய்து தொழுதுவிட்டனர். அந்தத் தொழுகை நேரம் முடிவதற்குள் தண்ணீர் கிடைத்துவிட்டதால் ஒருவர் உளூ செய்து மீண்டும் தொழுதார். மற்றவர் மீண் டும் தொழவில்லை. இதை நபி(ஸல்) அவர்களிடம் வந்து சொன்னபோது தயம்மும் மட்டும் செய்து தொழுதவரிடம், நீ சுன்னத்தை அடைந்துவிட்டீர், நீர் தொழுத தொழுகையே போதும் என்றும், உளூ செய்து திரும்பத் தொழுதவரிடம் உமக்கு இரு கூலி உண்டு என்றும் கூறினார்கள். இதில் இரு கருத்துகள் இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் இரண்டையும்  சரிகண்டார்கள்.

1. தொழுகையில் பிஸ்மில்லாஹ் ஓதுவது  மெதுவாகவா?  சப்தமிட்டா?

2. இமாம் சப்தமாக ஸூராக்களை ஓதும் தொழுகைகளில் மட்டும் (பின் தொடர்வர்) அல்ஹம்து ஸூரா ஓதவேண்டுமா? வேண்டாமா?

3. தொழுகையில் இரண்டாவது ஸுஜூதிற்குப் பின் (முதல் மூன்றாம் ரக்அத்தில்) சிறு இருப்பு உண்டா? இல்லையா?

இப்படி இன்னும் பல கருத்து வேறுபாடுகள் சுன்னத்தான செயல்களில் இருக்கவே  செய்கின்றன.

எந்த ஆத்மாவிற்கும் அதன் சக்திக்கேற்பவேயன்றி அல்லாஹ் சிரமம் தரமாட்டான். (2:286)

பிக்ஹுவில் நாம் இறையச்சத்தோடு ஆராயும்போது, அவன் அதற்காக அதிகமாக கூலி கொடுப்பான். அல்லாஹ் மிக அறிந்தவன். 

நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் இரு நன்மை அவருக்கு உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்கு ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் ஒரு நன்மை அவருக்கு உண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புகாரி :7352, முஸ்லிம் 3538)

வாதி அல்லது பிரதிவாதியின் வாக்குச் சாதுரியத்தால், பேச்சுத்திறமையால் நீதிபதி தனது ஆய்வில் சரியான அல்லது தவறான முடிவு எடுத்துவிடலாம். அவரின் ஆய்வு மூலம் தீர்ப்பு சரியாக இருந்தால் 2 நன்மை, தீர்ப்பு தவறாக இருந்தால் 1 நன்மை. இது நீதிபதி தெளிந்த அறிவுடன், நுண்ணோக்குப் பார்வையுடன், ஆழ்ந்த ஆய்வுடன் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைப் போன்ற பல பிரச்சனைகளில் விசாரித்து ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குவதற்காக சொல்லப்பட்டதே தவிர அமல்களுக்கான பிக்ஹ் சட்டங்களுக்குச் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லாஹ்(ஜல்) மிக அறிந்தவன்.

ஆகவே, நாம் அல்லாஹ்வின் பேச்சை (அல்குர்ஆனை) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறையை (ஹதீதுகளை) ஆராய்ந்து, தெளிந்து அல்லாஹ் சொன்ன சரியான அமல்களைப் பேணிச் செயல்படுத்துவோமாக! அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக!  அல்ஹம்துலில்லாஹ்.

Previous post:

Next post: