திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்… 

in 2023 நவம்பர்

திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள் 

அபூ இஸ்ஸத், இலங்கை

அக்டோபர் மாத தொடர்ச்சி….

கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விசயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். “மறுமை நாளைப்  பற்றிய  ஞானம்  அல்லாஹ்விடமே  உள்ளது.    (திருக்குர்ஆன் 31:34) 

பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார்.  அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, இவர் தான் ஜிப்ரீல் மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக்கொடுக்க வந்திருக்கிறார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரழி) அறிவித்தர். ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் (மறைவான) நம்பிக்கையைச் சேர்ந்தது என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.  (புகாரி:  50)

சூரியன் தனக்குரிய நிலை நோக்கி செல்கிறது. இது வல்லமை மிக்கோனும் நன்கறிந் தோனுமான (இறை)வனின் ஏற்பாடாகும். (36:38) என்று கூறுகின்றது. இதில் நிலை என்பதைக் குறிக்க முஸ்த்தகரு எனும் சொல் மூலத்தில் கூறப்பட்டுள்ளது. இது எதைக் குறிக்கிறது என்பது தொடர்பாக இரு வேறு கருத்துக்கள்  காணப்படுகின்றன.

1. சூரியன் போய் நிலை கொள்ளும் இடத்தைக்  குறிக்கிறது. 

உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக அது மறுமை நாளுக்கு நெருக்கமான ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போக விருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும். அதற்கு அனிமதியளிக் கப்படமாட்டாது.  மாறாக, “வந்த வழியே திரும்பி விடுஎன்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும் என்றார்கள். இதைத்தான், சூரியன், தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறி வாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும் என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது என்றார்கள். புகாரி : 3199,4208,4802,4803,7424, திர்மிதி: 2112, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 7:646-654)

மற்றொரு  பொருள் :

2. சூரியனின் நிலை என்பது அதன் ஓட் டம் முடியும் காலமாகும். அது மறுமை நாள்தான் அப்போது அதன் ஓட்டம் சீர் குலைந்து அசைவு அடங்கி சுருட்டப்பட்டு விடும். இந்த உலகம் தன் இறுதிக் கட்டத்தை அடைந்துவிடும். இது சூரியனின் கால நிலையாகும். கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறியதாவது: சூரியனுக்குரிய நிலை என்பது அதற்கான நேரத்தையும் மீறவியலாத குறிப்பிட்ட தவணையையும் குறிக்கும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 7:646-654)

சூரியன் அல்லாஹ்வின் ஆணைக்கேற்பவே கிழக்கே தோன்றி மேற்கில் மறைகிறது. உலக அழிவுக்கான இறுதி நாளில் அது மேற்கே  உதயமாகும்.

கண்ணால் கண்டபின் கொள்ளும் நம்பிக்கையில்  பிரயோஜனம்  இல்லை :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறை நம்பிக்கை கொள்வார்கள். ஆனால், முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறை நம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது. இரண்டு பேர் (விற்பனைக்காகத்) துணிகளை விரித்து (ப் பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவு மாட்டார்கள். சுருட்டிக் கூட வைத்திருக்க மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். மேலும், ஒருவர் மடிகனத்த தம் ஒட்டகத்தி(ல் பால் கறந்து அப்போதுதா(ன் பாலுடன் (வீடு)  திரும்பியிருப்பார். 

இன்னும் அதைப் பருகிக் கூட இருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். ஒருவர் தம் நீர் தொட்டியை (அப்போதுதான்) கல் வைத்துப் பூசியிருப்பார். இன்னும் அதில் நீர் இறைத்திருக்க மாட்டார்.  அதற்குள் மறுமை சம்பவித்து விடும். உங்களில் ஒருவர் தம் உணவை (அப்போது தான்) வாயருகில் கொண்டு சென்றிருப்பார். அதை உண்டிருக்க மாட்டார். அதற்குல் மறுமை சம்பவித்து விடும். என அபூ ஹுரைரா(ரழி)அறிவித்தார். புகாரி:6506.

மறுமை நிகழ்வு என்பது மறைவான இறை நம்பிக்கையைச்  சேர்ந்ததாகும் :

அவர்கள் எத்தகையோரென்றால், மறைவானவற்றை (உறுதியாக) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிறை வேற்றுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கி யவற்றிலிருந்து செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன் : 2:3) இறைவன், வானவர்கள், மண்ணறை வாழ்க்கை, மறுமை, சொர்க்கம், நரகம் போன்ற கண்ணுக்குத் தெரியாத, ஆனால் மறைவான உண்மைகளை நம்புதல் என்பது இறைநம்பிக்கை சார்ந்த சிறந்த பண்பாகும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 1:72-79) எனவே, நம்மையும் அத்தகைய மறைவானவற்றை உறுதியாக நம்பிக்கை கொள்ளக்கூடிய  நன்மக்களாக  அல்லாஹ்  ஆக்கியருள்வானாக.

Previous post:

Next post: