அறிந்து கொள்வோம்!

in 2023 டிசம்பர்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

1. ஆச்சரியத்திற்குரியோரின் அத்தாட் சியை அல்லாஹ் எப்படி விவரிக்கிறான்?

குகைவாசிகள்.    அல்குர்ஆன் 18:9

2. நரகத்திற்கு செல்லும் வழிகளில் இதுவும் ஒன்று என்று எதைக் குறிப்பிட்டு நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

உளூவின்போதுகுதிங்கால்கழுவாதது. புகாரி : 60

3. தீய செயல்களை யாருக்கு அலங்கரித்து காட்டுவதாக அல்லாஹ் கூறுகிறான்?

மறுமைமீதுநம்பிக்கைகொள்ளாதவருக்கு.    அல்குர்ஆன்  27:4

4. உயர்ந்த மாளிகையை அமைக்க யாரிடம்  பிர்அவ்ன்  கூறினான்.

ஹாமானிடம்.    அல்குர்ஆன் 28:38

5. யாருக்கு இத்தா காலம் இல்லை என அல்லாஹ்  கூறுகிறான்?

தீண்டுவதற்குமுன்விவாகரத்துபெற்றபெண்.   அல்குர்ஆன் 33:49

6. நடுத்தொழுகை எது என்பதை அல்லாஹ்  கூறுகிறான்?

அஸர்  தொழுகை.   அல்குர்ஆன் 2:238

7. ஸாலிஹ்(அலை) அவர்கள் காலத்தில் குழப்பம் விளைவித்தோர் எத்தனை பேர்  என  அல்லாஹ்  கூறுகிறான்?

9 பேர்.   அல்குர்ஆன் 27:48

8. இரண்டு கடல்களின் தன்மை பற்றி அல்லாஹ்  எப்படி  கூறுகிறான்?

இனிப்பு  சுவை,  உப்பு  உவர்ப்பு.   அல்குர்ஆன் 35:12

9. ஸக்கூம் என்றால் என்ன?

அதுநரகத்தின்அடிமரம்.    அல்குர்ஆன் 37:64

10. வேண்டுமென்றே கொலை செய்தவ னுக்கு என்ன கூலி என்று அல்லாஹ் கூறுகிறான்? 

நரகம்.   அல்குர்ஆன் 4:93

11. சந்திரனின் படிநிலைகளை அல்லாஹ் எதற்கு ஒப்பிடுகிறான்?

பழையபேரீத்தம்பாளை.    அல்குர்ஆன் 36:39

12. சுலைமான்(அலை) அவர்களுக்கு மாலை நேரத்தில் அல்லாஹ் எதனை காண்பித்தான்?

அதிவேகமாகசெல்லும்உயர்ரககுதிரைகள். அல்குர்ஆன் 38:31

13. இறை நம்பிக்கையில் தூய்மை பற்றி நபி (ஸல்) அவர்கள் எப்படி கூறினார்கள்?

தூய்மைஇறைநம்பிக்கையில்பாதிஎன்றுகூறினார்கள்.    முஸ்லிம்:381, அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரழி)

14. அய்யூப்(அலை) அவர்கள் பிராத்தித்த போது அல்லாஹ் என்ன கூறினான்?

உமதுகாலால்நிலத்தில்அடிப்பீராக.    அல்குர்ஆன் 38:42

15. கிரகணங்களை கண்டால் என்ன செய்ய வேண்டும் என நபி(ஸல்) கூறினார்கள்?

தொழவேண்டும்.  அபூபக்ரா(ரழி), புகாரி: 1040

16. உமர்(ரழி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் யாரிடம் ஜிஸ்யா வரி வசூலிக்கவில்லை?

மஜுஸிகளிடம்.      அம்ர் இப்நு தீனார் (ரஹ்) புகாரி: 3156

17. அல்முர்சலாத் அத்தியாயத்தில் அல்லாஹ் எத்தனை முறை சத்தியமிடுகிறான்?

ஐந்து  முறை.    அல்குர்ஆன் 77:1-5

18. விலை என்பதை அரபியில் சொல்லப் படும்  வார்த்தைகள் என்ன?

கீமத்அல்லதுஸமன். இப்னு உமர்(ரழி) அவர்கள் முஸ்லிம் : 3483

19. ஜின்களுக்கு கர்வம் அதிகமானது எதனால் என்று  அல்லாஹ்  கூறுகிறான்? 

மனிதர்களில்உள்ளசிலஆண்கள். ஜின் களில் உள்ள சில ஆண்களிடம் பாதுகாப்பு தேடியதால்.  அல்குர்ஆன் 72:6

20. ஸகர் நகரில் நுழைபவர்கள் யார் என அல்லாஹ்  கூறுகிறான்?

தொழாதவர்கள், ஏழைக்கு உணவளிக்காதவர்கள்.   அல்குர்ஆன் 74:42-44

Previous post:

Next post: