அல்லாஹ்வே மிகச் சிறந்த பாதுகாவலன்!

in 2024 ஜனவரி

அல்லாஹ்வே மிகச் சிறந்த பாதுகாவலன்!

அபூ இஸ்ஸத், இலங்கை

டிசம்பர்  மாத  தொடர்ச்சி

வானவர்களுக்கும் அல்லாஹ்வே பாதுகாவலன் :

(இதற்கு மலக்குகள்) “நீ மிகத் தூய்மை யானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் அவர்(களாகிய ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டி ருந்தவர்கள்என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 34:41) இறைவா! நீ தூயவன். அதாவது; உன்னுடன் வேறு இறைவன் இருக்கின்றான் என்ற நிலைக்கு நீ அப்பாற்பட்டவன் தூயவன். நீயே எங்களது பாதுகாப்பாளன் அவர்களுடன் எமக்கு சம்பந்தம் இல்லை. நாங்களோ உன்னுடைய அடியார்கள் இவர்களிடமிருந்து முழுவதுமாக ஒதுங்கி உன்னையே நாங்கள் சார்ந்துள்ளோம். ஆனால் அவர்கள்தாம் ஜின்களையே வழிபட்டு வந்தனர். அவர்கள் மீதே அவர்களில் பெரும் பாலானவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்று வானவர்கள் பதிலளிப்பார்கள். 

எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை. ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப் பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்துவிடு)வதற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்போனாகஇருக்கின்றான். (அல்குர்ஆன் 34:21)

(நினைவு கூறுங்கள்😉  உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது; “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவிபுரிவேன்என்று இறைவன் உங்களுக்கு  பதிலளித்தான். (அல்குர்ஆன் 8:9)

இறைத்தூதர் ஹூத்(அலை) அவர்கள் கூறினார்கள் :

நிச்சயமாக நான் உங்களுடைய இறை வனும் என்னுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். ஒவ்வோர் உயிரினத்தின் முன்நெற்றி ரோமத்தை அவனே பிடித்திருக்கிறான். என் இறைவன் நேரான வழியில் இருக்கின்றான் (11:56) என்றும் இறைத்தூதர் ஹூத்(அலை) அவர்கள் கூறினார்கள். அதாவது; நான் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்கிறேன் (பேரண்டத்தில்) எந்த உயிரினமாக இருந்தாலும் அது அவனது அதிகாரத்திற்கும் ஆளுமைக்கும்  உட்பட்டே  இருக்கும். 

இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களின் பிரார்த்தனை :

இன்னும் மூஸா(அலை) நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ நாடியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக் கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழிக்கிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக் கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர்வழியில் நடத்துகிறாய்; நீதான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக.

மன்னிப்பவர்களிலெல்லாம் நீதான் மிக்க மேன்மையானவன் என்று பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 7:155)

இறைத்தூதர் இப்ராஹீம்(அலை) அவர்கள் கூறியது :

இப்ராஹீம்(அலை) அவர்கள்; “நீங்களும் உங்களுக்கு முன்பிருந்த உங்களின் முன்னோர்களும் வழிபடுகின்றவற்றைக் கவனித்தீர்களா?’ அவை அனைத்தும் என் எதிரிகளே. அனைத்துலகங்களையும் படைத்துப் (பாதுகாத்துப்) பரிபாலிக்கின்ற வனைத் தவிர  என்று  கூறினார்கள். (26:75-77)

அதாவது; இந்தச் சிலைகள் (உண்மை யில் மதிக்கப்படும்) ஒரு பொருளாக இருந்தால் சாதக, பாதக, விளைவை ஏற்படுத்தும் ஆற்றல் இவற்றுக்கு இருக்குமானால் இவை எனக்குத் தீங்கு விளைவிக்க என்னை நோக்கி வரட்டும் (பார்க்கலாம்). நான் இவற்றின் எதிரியாவேன் இவற்றைப் பொருட்படுத்தவோ இவை குறித்துக் கவலைப்படவோ மாட்டேன் என்று கூறினார். (தஃப்சீர் இப்னு கஸீர் 6:564-566) மேலும்;

இப்ராஹீம்(அலை) அவர்கள் தமது தந்தையிடமும் சமுதாயத்தாரிடமும் கூறினார் கள். நீங்கள் வழிபடுகின்றவற்றை விட்டும் நான் ஒதுங்கிக்கொள்வேன். என்னைப் படைத்த (இறை)வனைத் தவிர! அவனே எனக்கு  நல்வழி  காட்டுபவன்.  (43:26,27)

இறைத்தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களின் பிரார்த்தனை :

இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்தார்: இப்ராஹீம்(அலை) அவர்கள் நெருப்பில் எறியப் பட்டபோது, “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்‘ (ஹஸ்பியல்லாஹ் வநிஃமல் வக்கீல்) என்பதே அவர்களின் கடைசி  வார்த்தையாக  இருந்தது. (புகாரி: 4563,4564)

பதினாறு வயதேயான இறைத்தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களை நெருப்பில் தூக்கி வீசுவதற்காக; அவர்கள் எல்லோருமாகப் பெருமளவில் அதிக அளவிலான விறகுகளைச் சேகரித்து நிலத்தில் பெரியதொரு குழி தோண்டி அதில் விறகுகளைப் போட்டுத் தீ மூட்டினார்கள். இதற்கு முன்னர் அப்படியயாரு நெருப்பு மூட்டப்பட்டிருக்காது எனும் அளவுக்குப் பெரிய தீப் பொறிகளும் உயரமான தீப் பிழம்புகளும் அதிலிருந்து வெளிப்பட்டன. அதன் அருகில் கூட செல்லமுடியாது. அதனால்குர்துஇனத்தைச் சேர்ந்த ஒரு பாரசீகக் கிராமவாசியின் யோசனையின் பேரில் இப்ராஹீம் (அலை) அவர்களை ஒரு கவன் பொறியின் தட்டில் அமர வைத்துத் தீக்குழியில் வீசி எறிந்தார்கள். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்களோ! பொறுமையை மேற்கொண்டவர்களாக; “ஹஸ்பியல்லாஹு வநிஃமல் வகீல்எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; பொறுப்பாளர்களில் அவன் மிக்க நல்லவன்என்று சொன்னார்கள்.

அவர்களை தீக்குழியினுள் வீசி எறியப்பட்டபோது மழைக்குப் பொறுப்பாளரான வானவர், மழை பொழிய வேண்டுமென எனக்கு உத்தரவிடப்பட்டால் நான் உடனே மழையை அனுப்பி விடுவேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனாலும் அவரது கட்டளையை விட அல்லாஹ்வின் கட்டளை மிக விரைவாக இருந்தது, “நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு குளிர்ச்சியாகவும், இதமாகவும் ஆகிவிடுஎன்று அல்லாஹ்  உத்தரவிட்டான். (21:69) 

அந்த நேரத்தில் பூமியில் இருந்த எந்த நெருப்பும் அணையாமல் இருக்கவில்லை. அதே நெருப்பானது இப்ராஹீம்(அலை) அவர்களைக் கட்டியிருந்த கயிற்றை மாத்திரமே எரித்தது. (இப்னு அப்பாஸ்(ரழி), அபூ ஹுரைரா(ரழி), கஅபுல் அஹ்பார்(ரஹ்), சுத்தீ(ரஹ்) 21:68,69, தஃப்ஸீர் தபரீ, தஃப் ஸீர் இப்னு கஸீர் பாகம் :5, பக்கம் 883-887)

எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; பொறுப்பாளர்களில்  அவன்  மிக்க  நல்லவன்:

அதே வார்த்தைகளை இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் கூறினார்கள்.

மக்களில் சிலர் உங்களுடன் போரிடுவதற்காகத் திரண்டுவிட்டார்கள். எனவே அப்படையைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள் என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் இறை நம்பிக்கையைப் பெருக்கி வலுப்படச் செய்தது; “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன்; அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்என்று  அவர்கள்  கூறினார்கள்.  (அல்குர்ஆன் 3:173)

 அதாவது; 

ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு நடந்த உஹுதுப் போர் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி யளிக்காத வகையில் முடிந்தது. போர் முடிந்து குறைசியருடன் மக்கா திரும்பிக் கொண்டிருந்த எதிரணித் தலைவர் அபூ சுஃப்யானைமஅபத் அல்குஸாஈ  என்பவர் சந்தித்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைப் பெரும் படையுடன் தாம் பார்த்த தாகவும் உஹுதில் கலந்துகொள்ளாத பலரும் இப்போது நபியவர்களுடன் சேர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித் தார். உஹுதுப் போரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுவிட்ட சரிவைக் கண்டு தைரியம் அடைந்திருந்த அபூசுஃப்யான் திரும்பி வந்து முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதல் தொடுக்க எண்ணியிருந்தார். “மஅபத் அல் குஸாதெரிவித்த தகவலைக் கேட்ட பின் தமது எண்ணத்தை மாற்றிக்கொண்டு மக்கா  திரும்பலானார்.

இதற்கிடையில் வழியில் சந்தித்த சிலர் மூலம்அபூ சுஃப்யானும்அவருடைய ஆட்களும் முஸ்லிம்களைத் தாக்க வருகிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவிக்க அபூசுஃப்யான் தந்திர ஏற்பாடு செய்தார். அவர்கள் வந்து நபியவர்களிடம் இதைத் தெரிவித்தபோதுதான்எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன் அவனே (எங்களைக் காக்கும்) பொறுப்பினை ஏற்பவர்களில் (மிகச்) சிறந்தவன்என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். இதைத்தான் இறைத் தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களை எதிரி கள் தீயில் தூக்கி எறிந்தபோது அன்னாரும் கூறினார்கள். ஆக அபூ சுஃப்யான் விடுத்த அச்சுறுத்தல், மிரட்டல், முஸ்லிம்களுக்கு மேலும் நம்பிக்கையையும், உறுதியையும் அதிகமாக்கியதே தவிர அவர்களை மிரள வைக்க முடியவில்லை. (ஃபத்ஹுல் பாரீ, உம்த்துல் காரீ, புகாரி : 4563ன் சிறு குறிப்பு 23ஆவது, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்:5, பக்கம் : 883-887)  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: