சொற்பமானோர்தான் நல்லுணர்வு பெறுவர்! 

in 2024 ஜனவரி

சொற்பமானோர்தான் நல்லுணர்வு பெறுவர்! 

அஹமது இப்ராஹிம்

புரோகிதர்களின் பிடியில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை மீட்டெடுக்க கடும் பாடு படுவோர்க்கான  பதிவு:

உங்கள் முயற்சிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வினிடத்தில் நற்கூலி உண்டு.

ஆனால் தாஃகூத் என்ற புரோகித மனித ஷைத்தான்கள் இருக்கும் வரை உங்கள் முயற்சி அல்லாஹ் நாடிய ஒரு சிலர்களைத் தவிர பெரும்பாலான முஸ்லிம்களுக்கு எவ்வித பலனுமளிக்காது!

(மனிதர்களே!) உங்கள் இறைவனிட மிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெ வரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர் கள். அல்குர்ஆன் 7:3

பூமியில் உள்ளவர்களில் பெரும்பா லோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின் பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.
அல்குர்ஆன் 6:116

மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களில் மிக மிக சொற்பமானோர்தான் நல்லுணர்வு பெறுவர் என வல்ல அல்லாஹ்வே கூறுகின்றான்!

பெரும்பான்மை முஸ்லிம்கள் மத்ஹபு மற்றும் தவ்ஹீத் புரோகிதர்களால் வழி கெடுக்கப்பட்டுத்தான்  போகிறார்கள்!

இந்த நிலை இமாம் மஹ்தி(அலை) அவர்கள் வரும் வரை இப்படியே தான் நீடிக்கும்.

ஏனெனில் இந்தப் பெரும்பான்மை முஸ்லிம் இளைஞர்களைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்.

உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்க வில்லை) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.  அல்குர்ஆன் : 11:118

(அவர்களில்) உம்முடைய இறைவன் அருள்புரிந்தவர்களைத் தவிர; இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான். “நிச்சயமாக ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக் கொண்டும் நரகத்தை நிரப்புவேன்என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகி விடும். அல்குர்ஆன் 11:119

எனவே பெரும்பான்மை முஸ்லிம்கள் மத்ஹபு மற்றும் தவ்ஹீத் புரோகிதர்களால் வழிகெடுக்கப்படும் மத்ஹபு மற்றும் பிரிவினை தவ்ஹீது இயக்கங்களாகவும், பிரிவுகளாகவும் செயல்படுவது என்பது அல்லாஹ்  விதித்த  விதி  போலும்.

ஏனெனில் மார்க்கத்தை கூறுபோடுவது இணைவைப்பாகும் என எல்லாம் வல்ல அல்லாஹ்  அல்குர்ஆனில்  கூறுகின்றான்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே நபியே நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்ததும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்த தும் என்னவென்றால், “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். நீங்கள் அதில் பிரிந்துவிடாதீர்கள்என்பதே இணைவைப் போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது. தான் நாடியவர்களை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (அவனை) முன்னோக்குப வரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். அல்குர்ஆன் 42:13

இணைவைத்த பாவத்திற்கு ஒரு போதும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு என்பதே கிடையாது.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத் தவிர, (மற்ற எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.  அல்குர்ஆன் 4:48

என்றாலும் அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்தி சுவனத்திற்குள்  நுழையச்  செய்வான்.

(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யயல் லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.    அல்குர்ஆன் 28:56

எனவே அப்பாவி முஸ்லிம் பொதுமக்களை சுயமாக மார்க்கத்தைக் கற்று சுய சிந்தனையாளர்களாக மாற்ற குர்ஆன், ஹதீஃதோடு நேரடித் தொடர்பு ஏற்படுத்தி வேற்றுமை ஏதுமில்லாத ஒன்றுபட்ட ஒரே சமுதாயமாக (ஆதாரம்: அல்குர்ஆன் 21:92, 22:78, புகாரி: 3606) மாற நாம் அனைவரும் ஒன்றிணைந்து  பாடுபடுவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனை வருக்கும்  அருள் புரிவானாக.  ஆமீன்.

Previous post:

Next post: