நாம் யாரை பின்பற்றுவது? 

in 2024 ஜனவரி

நாம் யாரை பின்பற்றுவது? 

A.N. திருச்சி

நாம் யாரை பின்பற்றுவது என்பது முஸ்லிம் சமுதாயத்தினர்களிடம் இருக்கின்ற மிகவும் முக்கியமான கேள்வி. இந்த கேள்வியானது தமிழக முஸ்லிம்களிடையே சுமார் 1985ஆம் ஆண்டுக்கு முன்பு வரை எழவில்லை. அதற்கு காரணம் அன்று இரண்டே இரண்டு பிரிவுகள் மட்டுமே இருந்தன.

ஒன்று : ஆலிம்கள் (மதரஸாவில் படித்தவர்கள்) பிரிவு. என்று தங்களைக் கூறிக் கொள்கி றார்கள்.

இரண்டாவது : அவ்வாம்கள் (மதரஸாவில் படிக்காதவர்கள்) பிரிவு. முதல் பிரிவால் கூறப்பட்டவர்கள்.

1. மேற்கண்ட இரண்டு பிரிவுகள் இருந்தவரை பள்ளிவாசலுக்கு போய் தொழுதவர்களும் இருந்தார்கள், தொழாதவர்களும் இருந்தார்கள். 

2. தர்காக்களுக்கு போனவர் களும் இருந்தார்கள், போகாதவர்களும் இருந்தார்கள்.

3. இஸ்லாமிய புத்தகம் என்ற பெயரில் எது வந்தாலும் அதை படித்தவர்களும் இருந்தார்கள், படிக்காதவர்களும் இருந்தார்கள். 

4. அன்றைய கால மார்க்க மேடை பேச்சாளர்களின் கவர்ச்சி பேச்சில் மயங்கிய வர்களும் இருந்தார்கள், மயங்காதவர்களும்  இருந்தார்கள்.

5. பச்சை, வெள்ளை ஜிப்பா ஆடைகளை அணிந்து உலா வந்த பலரை தோற்றத்தின் காரணமாக மயங்கி பின்பற்றியவர்களும் இருந்தார்கள். பின்பற்றாதவர்களும் இருந்தார்கள்.

6. நாடு நாடாக, ஊர் ஊராக மார்க்கப் பணி செய்வதை, தலையான கடமை என நினைத்து தப்லீக் ஜமாஅத் என்ற அமைப்பில் இணைந்தவர்களும் இருந்தார்கள், இணை யாதவர்களும்  இருந்தார்கள்.

7. எல்லாவற்றுக்கும் மேலாக இதுவரை என்ன செய்துவந்தோமோ அதையே அப்படியே மவுத் வரை செய்துவிட்டு போவோம் என்ற மனநிலையில் இருந்தவர் களும் உண்டு, இல்லாதவர்களும் உண்டு.

மேற்கண்டவாறு (அப்படியும், இப்படியும்) இருப்பதெல்லாம் தவறு. நாம் இஸ்லாத்தை  அதன் தூய வடிவில் பின்பற்ற வேண்டும் என்று சிலர் புது முழக்கத்தை 1985ஆம் ஆண்டுக்கு பின்பு வைத்தார்கள்.  அது சிந்திக்க வேண்டிய ஒன்றாகவும் இருந்தது. அதன் காரணமாக சிந்திக்க தொடங்கி னார்கள். அதுவரை அவரவர்கள் எதில் இருந்தார்களோ அதை விட்டுவிட்டு புது முழக்கத்தின் பக்கம் பலர் திரும்பினார்கள். அதற்காக பல இன்னல்களையும், அவமா னங்களையும் சந்தித்து சொந்தபந்தங்களை யும், சொத்துக்களையும் இழந்தார்கள். 

அன்றைய நாட்களில் இதுவே பேசு பொருளாக இருந்தது. புது முழக்கத்தை ஏற் றுக் கொள்ள விரும்பாதவர்களால் கேள்வி கள் பல கேட்கப்பட்டன. அதில் அறிவுக்கு உட்பட்டும் இருந்தன. அறிவுக்கு உட்படாத  பல  கேள்விகளும்  இருந்தன.

புது முழக்கத்தின் பக்கம் கூட்டம் சிறுக சிறுக சேர்ந்தது. மூத்த தலைவர்களும், பல இளைய தலைவர்களும் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். நன்றாக போய் கொண் டிருந்த நிலையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியது. காரணம் அல்லாஹ்விடம் வாக்குறுதி வாங்கி வந்தவன் சும்மா இருப்பானா? வேறு யாரு? “இப்லீஸ்தான்‘. வந்தது வினை, முதலில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு மட்டும் தோன்றியது. பின்பு பல தனி நபர் குற்றச்சாட்டுகளும் எழுந்தது. அதில் உண் மையும் இருந்தது, பொய்யும் இருந்தது. தனி நபர் குற்றச்சாட்டுகள் பல உண்மை யான கருத்துக்களைக் கூட மறுக்க வைத்தது. அவ்வாறு தோன்றியதால் வந்ததுதான் பல பிரிவுகள். அதாவது நாம் யாரை பின்பற்றுவது?  என்ற கேள்வியாகும்.

அதற்கு காரணம் கீழ்க்கண்ட பிரிவுகள் இருப்பதே!

அவைகள் :

1. குர்ஆன்  மட்டுமா?

2. குர்ஆனையும்,  ஹதீத்களையுமா?

3. நபி தோழர்களின் அறிவிப்புக்களை யுமா?

4. நான்கு  இமாம்களையா?

5. காதியானிகளையா?

6. மார்க்க நூல்கள் என்ற பெயரில் வெளிவரும்  இஸ்லாமிய  நூல்களையா?

7. குழப்பம் மேல் குழப்பமாக பல கருத்துக்களை கூறி பல்வேறு பிரிவுகளாக பிரிந்த  தவ்ஹீத்வாதிகளையா?

8. ஜமாத்தே  இஸ்லாமிய ஹிந்த் என்ற அமைப்பின்  கருத்துக்களையா?

9. அஹ்லே  ஹதீத்களையா?

10. 19 என்ற கணிதத்தின் கணக்குப்படி நடப்பவை தான் எல்லாம் என கூறும் கணித பத்தொன்பதையா?

11. யஹல்த் டைம்ஸ் பத்திரிக்கையின் கருத்துக்களையா?

12. ஹிஜ்ரா கமிட்டியின் கருத்துக்களையா?

13. அரபு  நாடுகளையா?

14. தப்லீக்  ஜமாஅத்தையா?

(இவைகள் ஆன்மீகத்தில் உள்ள பிரிவுகள் மட்டுமே அரசியல் என்னும் சாக்கடை யில்  நாம்  நுழையவில்லை)

மேற்கண்ட பிரிவுகளில் அவரவர்களுக்கு எது சரியயனப் படுகிறதோ அவைகளை ஏற்றுக்கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து கடந்து போய்க் கொண்டிருக்கிறது முஸ்லிம்  சமுதாயம்.

அல்லாஹ் மனிதனை படைத்து, நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆனையும், ஞானத்தையும் அருளியிருந்தும் அவரவர் களுக்கு எது சரியயனப்படுகிறதோ அவை களை பின்பற்றுங்கள் என்று விட்டு விட்டது போல்  இது  நிலவுகிறது.

இது  சரியா?

நிச்சயமாக இல்லை! எவ்வாறெனில் மனிதனுக்கு நேர்வழி எது? யாரை பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டுவதை தன்னுடைய கடமைகளில் ஒன்றாக இறைவன் ஆக்கி கொண்டு தன் அடியார்களுக்கு நான்கு  வழிமுறையை  கூறுகிறான்.

நம்பிக்கை  கொண்டவர்களே!

A அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள்.

B அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.

C உங்களில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு  கட்டுப்படுங்கள்.

D உங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வின் வழிகாட்டு தலான குர்ஆனின் பக்கமும், தூதரின் வழிமுறையின்  பக்கமும்  திரும்பி  விடுங்கள்.

இதுவே சரியான வழிமுறையாகும். எந்த கோணத்தில் பார்த்தாலும் இதுவே சரியானது என்று அல்லாஹ்  கூறிவிட்டான்.  அல்குர்ஆன் 4:59

இஸ்லாத்தின் அடிப்படை விதிகள் இந்த நான்கும் தான். இதை தவிர வேறுயில்லை.

A. விளக்கம் : மனிதன் அல்லாஹ்வின் அடிமை; அவன் தேவை உள்ளவன். மனிதன் தன் தேவைகளை இறைவனிடம் மட்டுமே கேட்கவேண்டும். மேலும் இறை வன் கட்டளையை பின்பற்றவேண்டும்.

ஆனால் உலக முஸ்லிம்கள் பலர் இறந்த வர்களிடமும் கேட்கின்றார்கள். 

ஒரேயயாரு  வி­யத்தில் மட்டுமே உலக முஸ்லிம்கள் அனைவரும் இறைவனின் கட்டளைக்கு  கட்டுப்படுகிறார்கள்.

அதுகிப்லாவை பின்பற்றுவது: இதை தவிர மற்ற பல விசயங்களில் 100 சதவிகிதம்  எதையும் ஒன்றாக பின்பற்றுவதில்லை.

B விளக்கம் : இறைத்தூதரின் கட்டளைக்கு கட்டுப்படுகிறேன் என்று சொல்லும் உலக முஸ்லிம்கள் ஒரேயயாரு வி­யத்தை தவிர வேறு எதிலும் 100 சதவிகிதம் கட்டுப்படு வதில்லை. அது, தொழுகைக்காக அழைக் கப்படும்பாங்கு ஓசைஇதில் மட்டுமே ஒற்றுமையாக  இருக்கிறார்கள்.

C. விளக்கம் : மேற்கூறப்பட்ட முதல் இரண் டுக்கு பிறகு மூன்றாவதாக (உலுல் அம்ர்) கூறப்பட்டுள்ள அதிகாரம் உடையவருக்கு கீழ்ப்படிதல் என்று இதிலும் ஒரேயயாரு விசயத்தை தவிர மற்ற எல்லா வி­யங்களிலும் கருத்து  வேறுபாடுகள்.

அது: அதிகாரத்தில் இருந்த உமர்(ரழி) அவர்களால் செயலுக்கு கொண்டுவந்த இஸ்லாமிய காலண்டரானஹிஜ்ரா வருடம் ஆரம்பித்து பின்பற்றி வருவது. 

மேற்கண்ட ஒன்றைத் தவிர அதிகாரம் படைத்தவர்களின் கட்டளைகளை 100 சதவீதம் பின்பற்றுவதில்லை. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் பல பிரிவு களுக்கு காரணமாக இருப்பது அதிகாரம் படைத்தவர்களின் கட்டளையை பின்பற் றாமல்  இருப்பதே.

அதாவது அதிகாரம் படைத்தவருக்கு கட்டுப்பட வேண்டும் என்றால் அவர் யார்?

நாட்டின் மன்னரா? நீதிபதியா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரா? முதல்வரா? அல்லது மார்க்க அறிஞரா?

அடுத்து கட்டுப்படுதல் என்பது மார்க்க வி­யத்திலா? பொது வாழ்க்கை முறையிலா? என்று பல கருத்துகள் ஏற்பட்டு எண்ணிக்கையில் அடங்காத பிரிவுகள் இருக்கின்றன.

எனவேதான்  அல்லாஹ் நான்காவதாக ஒரு வழிமுறையையும் சொல்லி உள்ளான்.

அது : ஒருவர் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் சரியே; அவர் கூறுவது அல்லாஹ்வின் வழிகாட்டுதலான குர்ஆனுக்கும், அவனது தூதரான நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் முரணில்லாமல் இருந்தால் அவருக்கு மார்க்க விசயத்திலும், உலக வாழ்க்கை முறையிலும் நாம் கட்டுப் படலாம். அதுவே முரணாகயிருந்தால் அத்தகைய அதிகாரம் படைத்தவருக்கு நாம் கட்டுப்பட தேவையில்லை.

எனவே நமக்குள்ள பிரிவுகளை நீக்கி ஒன்றுபட்டு ஒரே அமீரின் கீழ் வருவோமானால் ஒருபோதும் எவராலும் நம்மை வழிகெடுக்க முடியாது. யாரை பின்பற்றுவது  என்ற  குழப்பமும்  வராது.

Previous post:

Next post: