மனிதர்களை வேதனை செய்வதில்….இறைவனுக்கு என்ன லாபம்?

in 2024 பிப்ரவரி

மனிதர்களை வேதனை செய்வதில்….இறைவனுக்கு என்ன லாபம்?

N. மர்யம், ஒரத்தநாடு

மனித வாழ்க்கை என்பது தொடர் பயணமாகும். ஒவ்வொரு மனிதனின் அவன் செய்த நற்செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் ஏற்ப பலனை அனுபவிக்கும் காலம் பயணத்தின் இறுதியில் நிச்சயம்  உண்டு. அதாவது இறைவனின் ஏற்பாட்டின்படி மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் சந்தேகம் இருந்தால் மனித படைப்பைப் பற்றி  சற்று  சிந்தித்து  பாருங்கள்.

ஆரம்ப மனிதன் மண்ணிலிருந்தும், அடுத்த கட்டமாக மனித படைப்பு ஆண், பெண் சேர்க்கையிலிருந்தும் பெருகி  உருவாகியதே! குழந்தையாக பிறந்து, படிப்படியாக வாலிப வயதை அடைந்து பின்பு இறைவன் நாடிய காலம் வரை உயிர் வாழ்கி றார்கள். இவ்வாறாக பிறந்து வளர்ந்த மனிதர்களுக்கு, “சிலருக்கு குழந்தையாக இருக்கும் போதே மரணம், சிலருக்கு வாலிப வய தில் மரணம், சிலருக்கு வயதான காலத்தில் ஏதும் அறியாத நிலையில் மரணம்.”

இப்படியான வாழ்க்கை பயணம் பிறப்புஇறப்பு என நிகழ்ந்த வண்ணம் தொடர்ந்து  நடைபெற்று  வருகிறது. அது போல் நாம் வாழும் பூமியும் சில காலம் வறண்டும், சில காலம் செழிப்புட னும் மாறி மாறி இருக்கிறது. ஆயினும் மனித வாழ்க்கை பயணம் சில கால வாழ்வுடன் முடிந்து விடுகிறது என்று தவறான எண்ணத்தில் இறைவனிடம் தர்க்கம் செய்வோர் மனிதர்களில் இருக்கிறார்கள். அதாவது நம் செயல்களுக்கு யாருக்கும் (இறைவனுக்கு) பதிலளிக்க வேண் டியதில்லை என நினைத்து மனோ இச்சைப்படி பலர் வாழ்கிறார்கள். உலகில் இவ்வாறாக வாழக்கூடியவர்களே பெரும்பாலோர்  இருக்கிறார்கள். 

எனவேதான் இவர்களை குறித்து இறைவன் தன் இறைநூலில் (குர்ஆனில்) கீழ்கண்டவாறு  கூறுகிறான். “மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஞானமோ வழிகாட்டுதலோ, ஒளியூட்டும் இறை வழிக்காட்டும் நூலைப் பற்றியோ எந்தவிதமான அறிவுமின்றி (பிடரியை நிமிர்த்திக் கொண்டு) இறைவனைப் பற்றி தர்க்கம் செய்கிறார்கள். மக்களை இறை நம்பிக்கையிலிருந்து பிறழச் செய்ய வேண்டும் என்பதற்காக!”  அல்குர்ஆன்22:8.9

இத்தகையவர்கள் இறை வழிகாட்டி நூலை (குர்ஆனை) படித்து அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் ஆணவத்துடன் முகத்தை திருப்பி நாங்களே அறிவாளிகள் என கூறி தாமும் வழிகெட்டு மற்றவர்களையும் இறைவனின் வழிகாட்டுதலின்படி செயல்படாதவாறு தடுத்தும், வழிகெடுத்தும் வாழ்கிறார்கள். இத்தகை யவர்களின் உலக வாழ்வு நன்றாக இருப்பது போல் அல்லது நன்றாக இருந்தது போல் பிறருக்கு தோன்றும். ஆனால் அவர்களுக்கு இவ்வுலகிலும்  இழிவு, மறுமையிலும் இழிவு, நரக வேதனை  நிச்சயம்  உண்டு.

இறைவனின் நியதிப்படி யாருக்கும் ஓர் அணு அளவும் அநியாயம் செய்யப்படமாட்டாது.

மேற்கண்டவர்களை தவிர மனிதர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இறை வழிகாட்டுதலை தேவைக்கேற்ப  பின்பற்றி  வருவார்கள். அதாவது தனிப்பட்ட முறையில் நன்மை இருப்பதாக இருந்தால் இறை வழிகாட்டுதலை பின்பற்றுவது. அதுவே நஷ்டம் ஏற்படும் என்றால் அவற்றை விட்டுவிடுவது. இத்தகையவர்களைப் பற்றி இறைவன் கீழ்கண்டவாறு கூறுகிறான். “இத்தகையவர்கள் நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள்), இறைவனை ஏமாற்ற நினைக்கிறார்கள். உண்மையில் இவர்களே ஏமாற்றுக்குள்ளாகுகிறார்கள். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின் றால் சோம்பல்பட்டுக் கொண்டே நிற்கிறார்கள். மற்றும் பிற மக்களுக்கு காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள். மேலும் இறைவனின் வல்லமையை குறைவா கவே  கருதுகிறார்கள்.

இறை நம்பிக்கைக்கும், நிராகரிப்புக்கும் இடையே தடுமாறுகிறார்கள். இத்தகைய நயவஞ்சகர்கள் நரகத்தில் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கமாட்டார்கள்.       அல்குர்ஆன் 4:143,144,145

இத்தகையவர்களை நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள் என்பது இறை கட்டளை.

மேற்கண்ட இரு வகுப்பாரைத் தவிர மனிதர்களில் இன்னும் சிலர் உண்டு. இவர்கள் இறை நம்பிக்கையிலும், வழிகாட்டுதல் படியும் நற்காரியங்கள் செய்வதில் உறுதியாக இருந்து மார்க்கத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தம்மை தூய்மையாக்கிக் கொள்வார்கள். இவர்களே நல்லடியார்களின் (முஃமின்களின்) பட்டியலில் இடம் பெறுவார்கள்.  இத்தகையவர்களை வேதனை செய்வதில் இறைவனுக்கு  என்ன  இலாபம்? அல்குர்ஆன் 4:146

நம்பிக்கை கொண்டு நன்றி செலுத்தினால் உங்களை இறைவன் ஏன் தண்டிக்கப் போகிறான். இதில் இறைவனுக்கு என்ன  இலாபம்!   

காலத்தின்  மீது  சத்தியமாக!

நிச்சயமாக  மனிதன்  நஷ்டத்தில்  இருக்கின்றான். 

ஆயினும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக் கொருவர்  உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). அல்அஸர் அத்தியாயம் : (103)

இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட சமுதாயம்!!

நபிகால இஸ்லாமிய ஒற்றுமை!

முஹிப்புல் இஸ்லாம்

மறு பதிப்பு :

இஸ்லாம்  அல்லாஹ்  அருளிய  வாழ்க்கை  நெறி :

1. (மனித சமுதாயமே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றவர்களைப்) பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றாதீர்கள். உங்களில் குறைவானவர்களே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (சிந்தனைக்கும், படிப்பினைக்கு முரிய  இறைவாக்கு.  அல் அஃராஃப் : 7:3)

2. (நபியே!) நீர் கூறும்: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இருக்கிறான். (சிந்தனைக்கும், படிப்பினைக்குமுரிய இறைவாக்கு; ஆல இம்ரான்: 3:31)

படிப்பினை  பெறவில்லையே!

வெளிப்படுத்தப்படும் உணர்வுகள் கூடஅல்லாஹ் அருளியதைப் பின்பற்றியதாய் இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ்(ஜல்) நபி(ஸல்) அவர்கள் வாழ்வு மூலம் மனித சமுதாயத்திற்கு உணர்த்துகிறான். அல்லாஹ்(ஜல்)  தன் மார்க்கத்தைத் துல்லியமாய் நிர் ணயம் செய்துள்ளான் என்பதற்கோர், தலைசிறந்த எடுத்துக்காட்டுதான் உஹது யுத்தத்தில் நபி(ஸல்) அவர்கள் பல்லுடைந்த நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்த சம்பவத்தின் மூலம் உணர்த்தப்படும் படிப்பினையும்! ஆனால் அதிலிருந்து படிப்பினை பெற வேண்டிய முஸ்லிம் சமுதாயம் படிப்பினை பெறவில்லையே!  ஏன்…?

இறை அருளியதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற திடமான முடிவுக்கு முஸ்லிம் சமுதாயம் இன்னும் வரவில்லை. இந்த அவல நிலை சுமார் 1445 வருடங்களாய் முற்றுப் பெறாத, முடிவுக்கு கொண்டு வரப்படாத தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

அல்லாஹ்  அருளியது  சிதைக்கப்படல் :

மனித சமுதாயம் வாழ்வு முழுவதிலும் இறையருளியதையே பின்பற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ வேண் டியவர்கள்! முஸ்லிம்களே! அதைப் பின் பற்றாமல், அவரவர் சரிகண்டதை அல்லது சிலர் சரிகண்டதை, அல்லது பலர் சரிகண்ட தைச் சிலர் அல்லாஹ் அருளிய வாழ்க்கை நெறியைச் சிதைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்றிருக்கும் வாழ்க்கை நெறியை ஏற்றம் பெறச் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. இழுக் கையல்லவா தேடித்தந்து கொண்டிருக்கிறார்கள்  இன்றைய  பெயர்  தாங்கிகள்!

இன்று இஸ்லாத்தின் உண்மையான எதிரிகள் வெளியில் உளளவர்கள் அல்லர். இஸ்லாத்தை ஏற்று இறையருளியதைப் பின்பற்றாமல், அதை முற்றாக உதாசீனம் செய்பவர்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. அகில உலக அளவில் கணக்கிலடங்கா பிரிவினராய் முஸ்லிம்கள் பிளவுபட்டிருப்பதற்கும் இதுவே பிரதான காரணம். அகில உலக அளவில் முஸ்லிம்கள் அடைந்து கொண்டிருக்கும் வீழ்ச்சிகளுக்குக் காரணமும் இதுதான். ஆனால் அகில உலக அளவில் முஸ்லிம்கள் என்றைக்கு இதை உணரப் போகிறார்களோ? வேதனைக்கு மேல் வேதனையாய் உள்ளது. யா அல்லாஹ்! வாழ்வின் அனைத்து பரப்பிலும் இறையருளி யதைப்  பின்பற்றக்கூடியவர்களாய்  முஸ்லிம்களை  மாற்றுவாயாக!  ஆமீன்.

ஏன் அகில உலக அளவில் முஸ்லிம்களால் இறையருளியது  பின்பற்றப்படவில்லை?

இஸ்லாம் என்ற பெயரால் இஸ்லாத்தில் வலிந்து திணிக்கப்பட்டுள்ள வழிகேடுகளை இன்றைய முஸ்லிம்கள் பின்பற்றி வருகிறார்கள். அசல் இஸ்லாத்திலிருந்து முற்றிலும் கலப்படமாக்கப்பட்டுள்ளபோலிகளைஇஸ்லாம்என்றலேபிளில்மிகத் தந்திரமாய் முஸ்லிம்கள் பின்பற்றும்படி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மோடி வித்தைக்காரர் களின் மோசடியில் ஏமாறும்ஒன்றுமறியா குழந்தைகள் போல்இன்று முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் விசயம் தெரிந்த குழந்தைகள் மோடி வித்தைக்காரர்கள் தோற்றம், பேச்சுகளால்இவர்கள் ஏமாற்று பேர்வழிகள் என்று விளங்கிக் கொள்கிறார்கள்; விலகியும் விடுகிறார்கள்.  ஆனால்

அகில உலக அளவில் நடந்து கொண்டிருக்கும் மார்க்க மோசடிகள், மார்க்க அறிஞர்கள் என்ற பசுத்தோல் போர்த்தியதக்லீத்வாதிகளால் அரங்கேற்றப்படுகிறது.

அறிவு, சிந்தனை, ஆய்வு முதலியவை களுக்கு முதலிடம் தரும் அல்லாஹ் அருளிய வாழ்க்கை நெறி இஸ்லாம். எந்த வகைகளிலும், எக்காரணத்தை முன்னிட்டும் மனிதனோ அல்லது மனிதர்களோ கண்டுபிடித்த, சரிகண்ட தத்துவங்கள், சித்தாந்தங்கள் அல்லது அவைகள் போன்றவைகளோடு ஒப்பிடமுடியாத உயர் மார்க்கம் இஸ்லாம். இன்று இந்த மார்க்கம் தக்லீத் தத்துவம் என்ற வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இஸ்லாம் அல்லாஹ் அருளிய வாழ்க்கை நெறி!

அல்லாஹ் அருளியதற்கு சமாதி கட்டப்பட்டு, மனித கருத்துகளுக்கு முஸ்லிம்களால் மகுடம் சூட்டப்பட்டுக்  கொண்டிருக்கிறது.

மத வி­யங்களுக்கு மாற்றார்கள்அவர்கள் மதகுருமார்களை சார்ந்து நிற்கும் நிர்பந்த நிலை! இது மனிதர்கள் கண்ட மதங்களின் இழிநிலை! அவர்களுக்கு அதைவிட்டால் வேறு புகலிடமில்லை. இஸ்லாம் மதமுமல்ல, மாற்றார்களால் வர்ணிக்கப்படும் சமயமுமல்ல. மாறாக, இஸ்லாம்அல்லாஹ்  அருளிய  வாழ்க்கை  நெறி! 

இதை எந்த நிலையிலும் முஸ்லிம்கள் மறந்திடலாகாது. முஸ்லிம்களும் தங்கள் மார்க்கத்தை மற்ற மதங்களைப் போல் ஒரு மதமாக பாலித்துவரும் விபரீத சூழ்நிலை. அதற்கு இந்ததக்லீத்தத்துவமும், மாற்றா ரின் தவறான பிரச்சாரமும் உறுதுணையா கின்றன.

இந்த சத்திய மார்க்கத்தில் அல்லாஹ் (ஜல்) எந்த நிலையிலும் மனித கருத்துக்கள் ஊடுருவ அனுமதிக்கவும் இல்லை. அந்த அவசியத்தை ஏற்படுத்தவுமில்லை. அல்லது அல்லாஹ் அருளியதோடு மனித கருத்துக்கள் கலப்படமாவதையும் அல்லாஹ்(ஜல்) அனுமதிக்கவு மில்லை. அல்லாஹ்வின் கட்டளைப்படி, அல்லாஹ்வின் மார்க்கம் எந்த நபிமார்கள். (இறைத்தூதர்கள்) வழி மனித சமுதாயத்திற்கு அருளப்பட்டதோ அந்த நபிமார்க(இறைதூதர்) களின் சுயக்கருத் துக்களைக் கூட அல்லாஹ்(ஜல்) அனுமதிக்கவுமில்லை, ஏற்கவுமில்லை.

நபிமார்களும், இறைத்தூதர்களும் அவர்களையுமறியாமல், மனித இயல்பின் அடிப்படையில் எப்போதாவது வெளிப்படுத்தும் சொந்த கருத்துக்கள், அவைகள் எந்த நிலையில் வெளிப்படுத்தப்பட்டாலும் அவைகளையும் கடுமையாக கண்டித்து தடுத்து நிறுத்தினான். அதற்காக அல்லாஹ்வால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அல்லாஹ்(ஜல்) தான் மனித சமுதாயத்திற்கருளிய வாழ்க்கை நெறி (இஸ்லாம்), எவ்வித மனிதக் கருத்துக் களின் கலப்படமில்லாதது என்பதற்கு உத்தரவாதமளித்துள்ளான். அல்ஹம்துலில் லாஹ். அவ்வாறு அருளியதோடு எந்த நிலையிலேனும், வலிந்து திணிக்கப் படாலும், ஊடுருவினா லும் அவைகள் உடனுக்குடன் களைந் தெறியப்பட வேண்டும் என்பதை யும் அல்லாஹ் மனித சமுதாயத்துக்கு உணர்த்துகிறான். அதற்கோர் மிக சிறந்த எடுத்துக்காட்டுதான், நாம் ஏற்கனவே எடுத்துக்காட்டிய, உஹது யுத்தத்தில் நபி (ஸல்) அவர்கள் பல்லுடைந்த நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்த சம்பவமும்! அல்லாஹ் அருளிய வாழ்க்கை நெறியின் தனித்தன்மை இங்குதான்  நிலைநாட்டப்படுகிறது.

மனித கருத்துக்களின் ஊடுருவல் தடை செய்யப்படல் :

இதை நபி ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் உட்பட அனைவருக்கும் அல்லாஹ் உணர்த்திவிட்டான். அவர்கள் அனைவரும் வாழ்வின்  அனைத்து பரப்பிலும் இறையருளியதைப் பின்பற்றி வாழ்வதையே இலட்சியமாக்கிக் கொண்டிருந்தார்கள். பிறந்தது முதல் இறக்கும் வரை, இம்மைக்குரியவைகள், மறுமைக்குரிய வைகள், நன்மைகள், சேவைகள் என்று மனித வாழ்வோடு தொடர்புடைய எதைத் தொட்டாலும், அவைகளுக்கிடையே எந்த பாகுபாட்டையும் உண்டாக்காமல், அனைத்திலும் அல்லாஹ் அருளியதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் உத்தரவிட்டான்.

இறைத்தூதர்கள், நபிமார்கள் அனை வரும் இறைவன் அருளியதையே பின்பற்றினார்கள். இதை அல்லாஹ்(ஜல்), நபி ஆதம் (அலை) அவர்களை பூமிக்கு இறக்கிவிடும்போது, இப்படி தெளிவுபடுத்தினான்: (பின் னர்) நாம் கூறினோம். இதிலிருந்து அனைவ ரும் இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும். அப்பொழுது எனது நேர்வழியை எவர் பின்பற்றுகிறாரோ, அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் (சிந்தனைக்கும், படிப்பி னைக்குமுரிய இறைவாக்கு.   (அல்பகரா:2:38)

இதன் அடிப்படையில் அல்லாஹ் அருளிய நேர்வழியை வாழ்வின் அனைத்து பரப்பிலும் பின்பற்றவேண்டும் என்று அனைத்து நபிமார்களும், இறைத்தூதர்களும் கட்டளையிடப் பட்டார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுவதற்கு மற்ற மனிதர்களுக்கும் மனித சமுதா யத்துக்கும் முன்மாதிரியானார்கள். எந்த நிலையிலும் அவர்கள் அனைவரும் அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கவில்லை. அதற்காக, அவர்கள் இம்மையில் எத்தகைய இழப்பையும், கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளவும் தயங்கிய தில்லை. எப்படிப்பட்ட எதிர்ப்பாயிருந்தாலும் சரி, துணிவுடன் எதிர் கொண்டார்கள். தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் துச்சமாய் மதித்து போராடினார்கள்.

மனித இயல்பின் அடிப்படையில் அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுவதிலிருந்து அவர்களுக்கு ஏதேனும் தடங்கள் ஏற்படும் போது அல்லாஹ் அதை சுட்டிக்காட்டி திருத்தினான். அவர்களும் அதை உளப்பூர்வமாய் ஏற்று தங்களைத் திருத்திக் கொண் டார்கள். அதனால்தான் இன்றளவும் நாம், அவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் எல்லா மேன்மைகளையும் அருள்வானாக.

நபிமார்களும், இறைத்தூதர்களும் அல்லாஹ் அருளியதை தங்கள் வாழ்வில் பின் பற்றுவதோடு நின்றுவிடவில்லை. எப்படி அல்லாஹ் அருளியதை மட்டுமே பின்பற் றக்கூடிய, மனித சமுதாயத்தை, ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பும், கடமையும் அவர்கள் மீது சாட்டப்பட்டிருந்தது. நபி ஆதம்(அலை) அவர்கள் முதல் அனைத்து நபிமார்களுக்கும், இறைத் தூதர்களுக்கும் இவ்வாறே அல்லாஹ் கட்டளையிட்டிருந் தான்.

நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்(ஜல்) உத்தரவிட்டதென்ன?

நபி(ஸல்) அவர்கள் இறுதி இறைத் தூத ராகவும், யுக முடிவு நாள் வரை வரும் இறுதி மனிதர் வரை, அனைத்துலக மக்களுக்கும், ஜின் வர்க்கத்துக்கும் நபியாக தேர்வு செய் யப்பட்டதால், நபி ஆதம்(அலை) அவர் களுக்கும், மற்ற நபிமார்களுக்கும், இறைத் தூதர்களுக்கும் கட்டளையிட்ட அதே வி­யத்தைச் சற்று கூடுதல் அழுத்தத்துடன் அல் லாஹ், நபி(ஸல்)அவர்களுக்கு எடுத்துக் காட்டுகிறான்.

1. …எனக்கு (வஹியாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர(வேறு எதையும்)நான் (நபி (ஸல்) அவர்கள்) பின்பற்றவில்லை. (சிந்தனைக்கும் படிப்பினைக்குமுரிய இறைவாக்கு: அல்அன்ஆம்: 6:50)

2. …(நபியே, நீர் கூறும்🙂 நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு (வஹியாக)அறிவிக்கப்படுவதைத் (குர்ஆனைத்)தான், (சிந்தனைக்கும் படிப்பி னைக்குமுரிய இறைவாக்கு:  அல்அஃராப்:7:203)

3. …இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றி விடும் என்று கூறினார்கள். அதற்கு “”என் மனப்போக்கின்படி அதை நான் மாற்றிவிட எனக்கு  உரிமையில்லை. என்மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர, வேறெதையும்  நான்  பின்பற்றுவதில்லை

என் இறைவனுக்கு நான் (அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுவதிலிருந்து) மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு நான் நிச்சயமாகப் பயப்படுகிறேன்என்று (நபியே!) நீர் பிரகடனப்படுத்தி விடுவீராக. (படிப்பினைக்கும் சிந்தனைக்குரிய இறைவாக்கு : யூனுஸ்:10:15)

4. அல்லது “”இதனை அவர் இட்டுக்கட் டிக் கொண்டார்  என்று அவர்கள் கூறுகிறார்கள்?” (நபியே! நீர்) கூறுவீராக:  நான் இதை இட்டுக்கட்டியிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்.

நீங்கள் இதைப்பற்றி என்னென்ன கூறு கிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்.

எனக்கும்  உங்களுக்குமிடையே (அதுபற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கிறான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; கிருபையுடையவன் என்றும், இறைத்தூதர் களில் நான் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப்பற்றியோ, உங்களைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன். எனக்கு என்ன வஹீயாக அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும், நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சிப்பவனேயன்றி நான் வேறில்லை என்றும் (நபியே!) நீர் கூறும் (சிந்தனைக்கும் படிப்பினைக்குரிய இறைவாக்குகள்:  அல்அஹ் காஃப்: 46:8,9)

மேலே எடுத்துக்காட்டியுள்ள இறைவாக்குகளை, ஒருமுறை, இரண்டுமுறை, மூன்று முறை, என்று ஒன்றிற்கு பன்முறை நிதானமாய் படியுங்கள். மிக, மிக நிதானமாய், அவைகள் தரும் கருத்துக்கள், கொள்கைகள், படிப்பினைகள், நம் சிந்தனையோ டும், உயிரோடும், வாழ்வோடும் ஐக்கியமாகும் வரை படியுங்கள்; படியுங்கள்; படிப்பினை  பெறுங்கள்.

ஒன்றுபட்ட  இஸ்லாமிய  இலட்சிய  சமுதாயம் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தங்களுக்கு நபித்துவம் அருளப்பட்டதிலிருந்து, இறுதிமூச்சு பிரியும் வரை அல்லாஹ் அருளியதைப் பின்பற்றினார்கள். அது மட்டுமா? அல்லாஹ் அருளியதைப் பின்பற் றிய நபித்தோழர் (சஹாபி)களையும் உருவாக்கினார்கள். அல்லாஹ் அருளியதைப் பின்பற்றியதால், நபி(ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இயல்பிலேயே ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய சமுதாயமாய் உருவானார்கள். அன்றும், இன்றும், இனி இவ் வுலகு உள்ளவரை, ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய சமுதாயத்திற்கு உதாரணங்களாய்  உயர்ந்து  நிற்கிறார்கள்.

அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல் லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூ லுல்லாஹ் என்ற கொள்கை பிரகண்டனத்தோடு இஸ்லாம் துவக்கமானது. அதிலி ருந்துஇன்றைய தினம் இஸ்லாம் நிறைவடைந்தது‘ (5:3) என்ற இறைவாக்கு அருளப்படும் வரை, நிகழ்ந்தவைகள், நிகழ்த்திக் காட்டப்பட்டவைகள், மனித சமுதாய வரலாற்றில், உலகு உள்ளவரை, யாரும், எந்த இயக்கமும் நிகழ்த்திக்காட்டாத, நிகழ்த்திக் காட்ட முடியாத ஒப்பற்ற சாதனை, இன்ஷா அல்லாஹ்! மீண்டும் சந்திப்போம்! சிந்திப்போம்! சீர்பெறுவோம்!

கொஞ்சம் மனித நேயம், நிறைய மருத்துவம்!

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

நாகரிக மோகம் உணவு சம்பந்தப்பட்ட கண்ணோட்டத்தை மாற்றியிருக்கிறது. உடல் நலனுக்காக உணவு உண்ட காலம் போய் விளம்பர மோகத்தில் மயங்கி உணவு உண்பதை காணமுடிகிறது. அதாவது சினிமா கலைஞர்களின் ஒப்பனையைப் பார்த்து (னிழிவற்ஸ்ரீ)ல் மயங்குவது போல் அலோபதி மருத்துவ கம்பெனிகளின் விளம்பரங்களைப் பார்த்தும், மற்றும் மருத்துவ துறை யில் கையாளும் ஆடம்பரங்களையும்  பார்த்தும் மக்கள் மயங்குகிறார்கள். அதன் விளைவு:

கொஞ்சம்  மனித நேயம், நிறைய மருத்துவம்என்று ஆகிவிட்டது. (இதற்கு விதிவிலக்காக இருப்பது பெரும்பாலான கேரளா  மக்களே)

நமது உடலின் நிறுவன அமைப்பு (நுrஆழிஐஷ்விழிமிஷ்லிஐ) எவ்வளவு விந்தையானது என் பதையும்,  அதன் செயலாக்கத்தையும் ஒரு மனிதன் சிந்தித்துப் பார்ப்பானேயானால் நிச்சயமாக படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தாமல்  இருக்கமாட்டான்.

மேலும் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதையும் நோய் தாக்கிய பிறகுதான் அதன் அவசியத்தையும்  மனிதன்  உணர்கிறான்.

நோயற்ற வாழ்வே பெரும் பாக்கிய மாகும். ஆனால் மிகவும் வலிமையானதுபணம்தான் என்று நினைத்து அதை சம்பாதிப்பதற்காக தன் ஆரோக்கியத்தை மனிதன் இழக்கிறான். அதே மனிதன் ஆரோக்கியத்தை அடைய அவன் சம்பாதித் ததை மருத்துவர்களிடமும், மதகுருமார் களிடமும்  இழக்கிறான்.

மனிதர்களின்  விசித்திரமான  செயலில்  இதுவும்  ஒன்று.

ஆடிகளில் வழக்கமாக போவது தவறு இல்லை. மருத்துவமனைக்கு போவது வழக்கமாக இருப்பது தான் தவறு

எனவே நம் ஆரோக்கியத்திற்காக உடல்நலனைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டும். அதாவது உடல் சீராக இயங்க அடிப்படையாக இருப்பது செல்களே. (கையில் வைத்திருக்கும் ளீeயியி அல்ல) 

அந்த  செல்கள்  நான்கு  வகையாக  உள்ளது.

1. நரம்பு செல்,  2. தோல் செல்,  3.இரத்த செல்,  4. எலும்பு செல்.

மேற்கண்ட இந்த செல்களின் தொகுப்பு தான் திசு எனப்படுவது. பல்வேறு திசுக்களின் தொகுப்புதான் உறுப்பு (நுrஆழிஐ) எனப்படுவது. பல்வேறு உறுப்புக்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவதுதான்உடல்  என்பதாகும்.

இன்றைய நவீன உலகில் நோயில்லா வாழ்க்கை என்பது கனவாகி வருகிறது. புதிது புதிதாய் பல நோய்கள் தோன்றுகின்றன. தோற்றுவிக்கவும்  படுகின்றன.

முன்பு எல்லாம் மருத்துவர்கள் கை நாடியைப் பார்த்து நோயை கண்டுபிடிப்பார்கள். ஆனால் இன்று கம்ப்யூட்டரை வைத்து நோயை கண்டுபிடிக்கிறார்கள் கைநாடி மருத்துவத்தில், “மனிதநேயம் நிறைய இருந்தது; இப்போது கம்ப்யூட்டர் மருத்துவத்தில் நோய்கள்தான் நிறைய இருக்கிறது.

எனவே உடலைப் பராமரிக்க சில குறிப்பிட்ட உணவுகளை நாம் தினமும் உண்ணவேண்டி யுள்ளது. ஆனாலும் எப்போதும் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதில்லை. அதற்கு காரணம் செல்களுக்கு தேவையான சத்துக்கள் வைட்டமின்கள் குறைய நேரிடுகிறது. அதனால் உடலில் பாதிப்பும் ஏற்படுகிறது. (உணவு உற்பத்தியி லும்  கலப்படம்  அதிகரித்துள்ளது)

நாம் உணவிலுள்ள சத்துக்களைப் பற்றி (வைட்டமின்கள்) அக்கறை காட்டினால்தான் உடல்நலத்தை பேணமுடியும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் பலவகையான சத்துப் பொருட்கள் இறைவனின் ஏற்பாட்டால் இயற்கையாகவே அடங்கியுள்ளன. அவை: தானிய வகைகள், பருப்பு வகைகள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள், பால் மற்றும் பாலிலி ருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், மாமிச வகைகள், மீன், முட்டை, மசாலா பொருட் கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை நாம் உண்டு வந்தாலும் அவைகளில் அடங்கி யிருப்பது  ஐந்து(5)  வகையான  சத்துக்கள்  மட்டுமே.

அவை : 1. புரதம்  

2. தரசம்  ) 

3. கொழுப்பு 

4. தாது பொருட்கள்  

5. ஜீவசத்து  

மேற்கண்டவை தவிர நம் உடல் சீராக இயங்குவதற்குநீர்மிகவும் அவசியமாகும். நமது உடலின் மொத்த எடையில் சுமார் 70 சதவீதம்நீர்தான் உள்ளது. 

எனவேதான் இறைவன் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில் மனித படைப்பைப் பற்றி கூறும்பொழுது  இவ்வாறு  கூறுகிறான்.

தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான். மனிதப் படைப்பை களிமண்ணிலிருந்து தொடங்கி னான்‘.   அல்குர்ஆன் 32:7

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அவன் கவனிக்கட்டும். குதித்து வெளியேறும் ஒரு நீரிலிருந்து படைக்கப்பட்டான்முதுகு தண்டிற்கும், முன் பகுதிக்கும் இடையிலிருந்து அது (நீர்) வெளிப்படுகிறது.  (அல்குர்ஆன் 86:5,6,7)

அந்த  விந்துத்  துளியைச்  (நீரை) சூல் கொண்ட கருமுட்டையாக்கினோம். அதன் பின் அந்தச் சூல் கொண்ட கருமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். பிறகு அச்சதைத் துண்டை எலும்புகளாக உருவாக்கினோம். அவ்வெலும்புகளுக்கு தோலைப் போர்த்தினோம்.  பின்னர் அதை வேறொரு படைப்பாகத் (மனிதனாக) தோற்றுவித்தோம். படைப்பாளர்களின் சிறந்தவனான அல்லாஹ்வே பாக்கியமிக்கவன். அல்குர்ஆன் 23:14

மேலும் பார்க்க வசனங்கள் : 22:5, 40:69, 30:20, 70:2, 35:11, 16:4, 6:2.

வாசகர்களே! இது மருத்துவ குறிப்பு கட்டுரை  அல்ல. விழிப்புணர்வு கட்டுரை. எனவே எல்லாவகையான உணவுகளில் நன்மைகளைப் பற்றி முழுமையாக விவரிக்க  இயலாது.

இறைவன் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) பிரத்தியேகமாக சில பழங்களைப் பற்றியும்,  பால், மாமிசம், தானிய வகைகள் பற்றியும் கூறியுள்ளான் பார்க்கவும்.

அவை   வருமாறு :

பால் = 16:66

மாமிசம் = 5:3

தானிய  வகைகள் = 2:61

16:11 ஆலிவ் எண்ணெய்

பழங்கள் : 55:68 மாதுளை பழம்

95:1 அத்தி பழம்

6:141 பேரீச்சம்பழம்

2:266 திராட்சை    

56:29 வாழைப்பழம்

தண்ணீர் : 2:60

Previous post:

Next post: