மன அழுத்தத்திற்கு மாற்று வழி உண்டா? 

in 2024 பிப்ரவரி

மன அழுத்தத்திற்கு மாற்று வழி உண்டா? 

AN திருச்சி

இன்றைய காலகட்டத்தில்மன அழுத்தம்என்பது அனைவரின் வாழ்விலும் விரும் பியோ, விரும்பாமலோ ஒன்றாக கலந்துள்ளது. உடலில் காயங்களால் ஏற்படும் வியாதிகளை கூட ஒருசில நாட்களில் கட்டு படுத்திவிடலாம். அவரவர்களுக்கு உள்ள உடல் வலிமையைப் பொறுத்து நாட்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ ஆகலாம். ஆனால்மன அழுத்தம்என்றால் என்ன? என்று தெரிந்திருந்தால்தான் அதிலிருந்து விடுபட  முடியும்.

பெரும்பாலோர்மன அழுத்தம்என்பது இதயத்தினால் மற்றும் மூளையினால் ஏற்படுகிறது என எண்ணம் கொண்டுள்ளனர். நிச்சயமாக இந்த இரண்டும் அல்ல, உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் கலந்திருப்பதுஉள்ளம்என்பதே மனமாகும். உள்ளம் (மனம்) பாதிக்கப்படும் பொழுது உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களும் பாதிக்கப் படுகின்றன.

எனவேதான் இறைவன் மனத்தைப் பற்றி தன் வழிகாட்டும் நூலில்(குர்ஆனில்) கீழ்கண்டவாறு  கூறுகிறான்.

மனிதனைப் படைத்தோம் அவனது மனம் எதை நினைக்கிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாகயிருக்கிறோம்  அல்குர்ஆன் 50:16

(இந்த வசனத்திற்கு கழுத்துப் பகுதியில் கை வைத்துக் காண்பித்து இறைவன் அங்கு இருக்கிறான் என்று விளக்கம் அளிப்பவர்களும் இருக்கிறார்கள். இறைவன் சொல்வது என்னவென்றால் பிடரி நரம்பு என்பதன் பொருள் உயிர் நரம்பு என்பதாகும். அதாவது ஒவ்வொருவருடைய உயிரை விடவும் நெருக்கமாக இறைவன் இருக்கின்றான் என்பதே பொருளாகும்)

நெருக்கமாக இருக்கிறோம் என்பதை மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள இறைவன் மற்றொரு வசனத்தில், 

உயிர் ஒருவனது தொண்டைக் குழியை அடையும்போது அந்நேரத்தில் அவனை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். (ஆனால்) உங்களை விட நாமே அவருக்கு மிகவும் அருகில் இருக்கிறோம். எனினும் உங்களுக்கு தெரியாதுஅல்குர்ஆன் 56:83-85

மேற்கண்ட இரண்டு வசனத்திலிருந்து உள்ளமும், உயிரும் இரண்டர கலந்தது தான்மனம்என்பதையும் இதயமும், மூளையும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

எனவே உள்ளத்தினால் ஏற்படுவதேமன அழுத்தம்என்னும் நோயாகும். இதற்கு தீர்வு காண நீங்கள் மருத்துவரிடம் செல்ல தேவை இல்லை. அவ்வாறு சென்றால் அலோபதி மருத்துவர்கள், காலம் முழுவதும் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டால்மன அழுத்தம்குறையும் என்று கூறி உங்களை மனநோயாளியாக மாற்றி விடுவார்கள். அதாவது மருந்து, மாத்திரைகளுக்கு அடிமையாக்கிவிடுவார்கள். ஏனென்றால் நீங்கள் அலோபதி மருந்து, மாத்திரைகளுக்கு அடிமையானால் தான் அவர்களின் மருத்துவ தொழில் செழிக்கும். மேலும் சில பக்க விளைவுகள் ஏற்பட்டு பலவகையான கிளினிக்குகள்  பணத்தில்  கொழிக்கும்.

மன அழுத்தம்  என்பது  இரண்டு  வகைப் படும். ஒன்று இறைவன் புறத்திலிருந்து சோதனையாக வருவது, மற்றொன்று நாமாக தேடிக் கொள்வது. எதுவாக இருந்தாலும் சமாளிக்க (விடுபட) முடியும். அதே வேளையில் இறைவன் புறத்திலிருந்து வருவதை தடுக்கமுடியாது. ஆனால் விடுபடலாம். அவ்வாறான நேரங்களில் நாம் என்ன  செய்யவேண்டும்?

ஒன்று : அதை அப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும். 

மற்றொன்று : அந்த பிரச்சனைகளோடு வாழ்வது எப்படி என்பதை சிந்திக்க வேண்டும்.

இறைவன் புறத்திலிருந்து வருவது:

உதாரணமாக: நமக்கு நெருக்கமானவர் களின் மரணம் அல்லது இறைவனின் சோதனைகளால் ஏற்படும் பொருள் இழப்பு.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்களாலும், உயிர்களாலும், பொருள் இழப்புக்களா லும் சேதப்படுத்தி நாம் உங்களை சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக.  அல்குர்ஆன் 2:155

நமக்கு நெருக்கமானவர்களின் மரணம், அல்லது பொருள் இழப்பு, ஏமாற்றம் இவை களில் எது நடந்தாலும், நடந்த பின்பு அதை பற்றியே சிந்தித்துக் கொண்டு நடைமுறை வாழ்க்கை யிலிருந்து விலகி வழி தெரியாமல் இருப்பதே மன அழுத்தத்திற்கு முதலாவது காரணம்.

இறைவன் புறத்திலிருந்து வரும் நிகழ்வு களை அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நிகழ்காலத் துடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு வாழ்வதற்கு இறைவன் தன் வழிகாட்டும்  நூலில் (குர்ஆனில்) சில வழிமுறைகளை சொல்லி உள்ளான். அது  என்னவென்றால்;

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

அதாவது ஏதேனும் துன்பம் ஏற்படும் பொழுது பதற்றப்படாமல் (மன அமைதியை  இழந்துவிடாமல்)

நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; மேலும் நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்”(அல்குர்ஆன் 2:156)என்று மனதை பக்குவப்படுத்திக்  கொள்ளவேண்டும். 

மேற்கண்ட வசனம் இறப்பு செய்தி கேட்கும்பொழுது மட்டும் சொல்வது என பலரும் தவறான எண்ணம் கொண்டுள்ளனர்;  அவ்வாறு  இல்லை.

இழப்பு ஏற்பட்டாலும், ஏமாற்றம் அடைந்தாலும்அல்லாஹ் நாடியதே நடக்கும்என்று உணர்ந்து கொண்டால் சிறு துயரமாக இருந்தாலும், பெரும் துயரமாக இருந்தாலும் மனஅழுத்தத்திலிருந்து விடு படலாம். 

எனவே, நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்கள்  தாம்  மிக்க  மேலானவர்கள்.   அல்குர்ஆன் 3:139 

(நம்பிக்கையாளர்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள், அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.     அல்குர்ஆன் 10:62

நிச்சயமாக எவர்கள், “எங்கள் இறைவன் அல்லாஹ்வேஎன்றுகூறி பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்குப் பயமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.       அல்குர்ஆன் 46:13

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்) கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.    அல்குர்ஆன் 57:23

மன அழுத்தத்திற்கு இரண்டாவது காரணம்:

நம்மால் மாற்ற முடியாத பல விசயங்களும் நம் வாழ்வோடு  பின்னிப் பிணைந்துள்ளன.  அவை :

நம்மோடு பழகுகிறவர்களின் சுபாவம், மனோபாவம். இதைப்பற்றி ஓரளவுதான் நம்மால் கணிக்கமுடியும். அதாவது அவர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி நம்மால் முழுமையாக கணிக்க முடியாது.

அவரை நம்மால் ஓரளவுக்கு மேல் மாற்றவும் இயலாது. அவ்வாறான நேரங்களில் நாம் என்ன செய்யவேண்டும். நம்மோடு பழகுகிறவர்களுடைய (மனைவி, கணவர், பிள்ளைகள், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, நண்பர்கள், உறவினர்கள் தொழில் சம்பந்தப்பட்ட உறவுகள், சுபாவங்களையோ, பழக்க வழக்கங்களையோ மாற்ற முயற்சிப்பதை விட, நாம் மகிழ்ச்சியாக வாழ என்ன செய்யலாம் என்பதைப் பற்றி  சிந்திப்பதுதான்  நல்லது. 

மன அழுத்தத்திலிருந்து விடுபட இரண்டாவது  வழிமுறை:

இரண்டாவது வழிமுறையை ஏற்றுக்கொள்ள இறைவன் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) சிறந்த வழிமுறையை கூறியுள்ளான்.

பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் இறைவனிடம் உதவி தேடுங்கள்! நிச்சயமாக இது இறைவனை முழுமையாக நம்பக்கூடியவர்ளை தவிர மற்றவர்களுக்கு (இதை ஏற்றுக் கொள்வது) கடினமாகத்தான் இருக்கும். அல்குர்ஆன் 2:45

ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைத்தே தீரும். உங்களுடைய பிரதிபலன்கள் (முழுமையாக) வழங்கப்படுவதெல்லாம் மறுமை நாளில் தான்; எவர் நரகத்தை விட்டு, சுவர்க்கம் புகுகிறாரோ அவரே வெற்றி அடைந்துவிட்டார். இவ்வுலக இன்பங்கள்  ஏமாற்றக்  கூடியது,  அற்பமானது  அல்குர்ஆன் 3:186

“(முஸ்லிம்களே!) உங்கள் உடமைகளிலும், உயிர்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மேலும் வழிகேட்டிலும், கோபத்திலும் ஆளானவர்கள் மற்றும் இணை வைப்போரிடமிருந்தும்மன வேதனைதரும் பல வார்த்தைகளை நிச்சயமாக நீங்கள் கேட்பீர்கள். இத்தகைய நிலைமைகளில் நீங்கள் பொறுமையையும், இறைவனின் வழிகாட்டுதலை கொண்ட நடத்தையை நீங்கள் கடைபிடித்தால் அது மன  வலிமைக்குரிய  செயலாகும்.”  அல்குர்ஆன் 3:187

மேலும், “பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நன்மை செய்தோரின் (பொறுமையாக இருந்தவரின்) கூலியை இறைவன் வீணாக்கமாட்டான்”.   அல்குர்ஆன் 11:115

மேலும் இறைவன் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) அத்தியாயம் 13 (அர் ரஃது) வசனம் 18 முதல் 24 வரை மிக தெளிவாக  கூறியுள்ளான்.

மேற்கண்ட வசனங்கள்படி பொறுமையை மேற்கொள்வதே மன அழுத்தத்திலிருந்து  விடுபட  மிக  சிறந்த  வழி.

 பொறுமையாக இருந்தார்களே அவர்களைத் தவிர (மற்ற) எவரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான பாக்கியத்தையுடையோரைத் தவிர; மற்ற எவரும் அதை  அடையமாட்டார்கள்.   அல்குர்ஆன் 41:35

மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்து சாதனை புரிய இறை வழிகாட்டி நூலை (குர்ஆனை) பின்பற்றினால் இம்மையிலும், மறுமையிலும்  மன  மகிழ்ச்சி  கிட்டும்.

Previous post:

Next post: