முஸ்லிம்-முஸ்லிமீன்-முஸ்லிமன்-முஸ்லிமத்தின்-

in 2024 பிப்ரவரி

முஸ்லிம்முஸ்லிமீன்முஸ்லிமன்முஸ்லிமத்தின்

முஸ்லிமத்தன்முஸ்லிமைனி என்பது குறித்து 

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

2024  ஜனவரி  தொடர்ச்சி….

இறைத்தூதர் சுலைமான்(அலை) அவர்களும்  அவ்வாறே  கூறினார்கள் :

ஆகவே, அவள் வந்தபொழுது, உன்னுடைய அரியாசனம் இது போன்றதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள், “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறதுஎன்று கூறினாள்; இந்தப் பெண் மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம். நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கி றோம் (என்று சுலைமான் கூறினார்) (அல்குர்ஆன் 27:42) இது சுலைமான்(அலை) அவர்கள் சொன்னதுதான் என்பதாக முஜாஹித்(ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் : 6:680-685)

இறைத்தூதர் சுலைமான்(அலை) அவர்களும் அரசிக்கு அவ்வாறே அழைப்பு விடுத்தார்கள் :

நீங்கள் என்னிடம் பெருமையடிக் காதீர்கள், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (முஸ்லிம்களாக) என்னிடம் வாருங்கள்‘ (என்றும் எழுதப்பட்டிருக்கிறது) (அல்குர்ஆன் 27:31) அடிபணிந்துமுஸ்லிமீன்என்பதற்கு; இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் ஓரிறையை ஏற்றவர்களாக என்று பொருள் சொன்னார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்: 6:667-669)  இதுபோன்றே;

இறைத்தூதர் சுலைமான்(அலை) அவர்கள் தமது  சபையோரிடம்  கேட்டார் :

பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் (முற்றிலும்) வழிபட்டவர்களாக (முஸ்லிம்களாக) வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?’ என்று (சுலைமான் அவர்களிடம்) கேட்டார். (அல்குர்ஆன் 27:38) அதாவது; இறைத் தூதர் சுலைமான் (அலை) அவர்களது அழைப்புக் கடிதம் கிடைத்ததும்ஸபாநாட்டின் பேரரசி பல்கீஸ், வைரம், மரகதம், முத்து ஆகியவைகளால் அலங்கரிக்கப்பட்டு; அதன் கால்கள் முத்துக்களாலும், வைரங்களாலும் செய்யப்பட்டு; மென்பட்டாலும், கெட்டிப்பட்டாலும் அதற்குத் திரையிடப்பட்டு; அதில் ஒன்பது பூட்டுக்களும் போடப்பட்டிருந்த பொன்னாலான; அரச சிம்மாசனத்தை; ஒன்றுக்குள் ஒன்றாக இருந்த ஏழு அறைகளுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுக் கதவுகள் பூட்டப்பட்டுத் தமது அரச நிர்வாகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிகாரியிடம்உமது பொறுப்பிலுள்ள பொருட்களையும் என் அரச சிம்மாசனத்தையும் நன்கு பாதுகாப்பீராக! இறையடியார்களில் யாரும் அதன் பக்கம் சென்று விடக்கூடாது நான் உம்மிடம் திரும்பி வரும் வரை யாரும் அதைக் கண்ணால் கூடப் பார்த்துவிடக்கூடாது  என்று  ஆணையிட்டார்.

பின்னர் அந்த அரியணைக்குச் சொந்தக்காரியான, “ஸபாநாட்டின் பேரரசி பல்கீஸ் பன்னிரண்டாயிரம் பேருடன் அடிபணிந்து இறைத்தூதரும், பேரரசருமான, சுலைமான் (அலை) அவர்களை நோக்கி பிரயாணத்தை ஆரம்பித்தார். சுலைமான்(அலை) அவர் கள் தம்மை நோக்கி பன்னிரண்டாயிரம் பேருடன் வரும்ஸபாநாட்டு அரசிபல்கீஸிற்க்குதமது அரசு மிக வலுவானது என்பதையும், அவரது அதிகார வீச்சை விடத் தமது அதிகார வீச்சும் தமது ஆளுமையின் ஆழமும் மிகப் பெரியது என்பதையும்பல்கீஸிற்குக்காட்டுவதற்காக; சுலைமான் (அலை) அவர்கள் சில வேலைகளைச் செய்தார்கள், சுலை மான்(அலை) அவர்கள் ஜின்களை அனுப்பி ஒவ்வொரு நாளும் பல்கீஸின் பயண நிலை அதன் தொடக்கம் முடிவு ஆகியவற்றை  அறிந்துவரச்  செய்தார்கள்.

ஸபா  நாட்டின்  அரசி  பல்கீஸும்  அவ்வாறே  கூறினார்:

அவளிடம், “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!’ என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம்மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீ ரைத் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற சுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!’ என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல் லாஹ்வுக்கு, சுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகின் றேன் எனக் கூறினாள்.  (அல்குர்ஆன் 27:44)  அதாவது;

அதைப் பற்றி அறியாத எவருமே அது தம்மை முழுமையாக மூழ்கடித்து விடும் தண்ணீர் தடாகம் என்றே எண்ணுவார். ஆனால் நடப்பவருக்கும் தண்ணீருக்கும் இடையே  கண்ணாடி இருந்தது. 

இறைத்தூதர் ஈஸா(அலை) அவர்களின் சீடர்களும்  அவ்வாறே  கூறினார்கள்:

மேலும் (ஈஸாவே! நிச்சயமாக) நான் (உம்முடைய) நெருங்கிய நண்பர்களுக்கு; என்மீதும், என் தூதர் மீதும், நம்பிக்கை கொள்ளுங்கள் என்று (தெய்வீக அகத் தூண்டல் மூலமாக, 28:7, 16:68) அறிவித்தேன். அப்போது அவர்கள் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நாங்கள் (அல்லாஹ் வுக்கு முற்றிலும் அடிபணிந்தவர்கள்) முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சி யாய் இருப்பீராக என்று (உம்மிடம்) கூறியதை எண்ணிப் பார்ப்பீராக. (அல் குர்ஆன் 5:111) என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது; அல்லாஹ்வையும், அவ னுடைய தூதர் ஈஸா(அலை) அவர்களை யும் நம்புமாறு அவர்களுடைய நெருங்கிய நண்பர்களுக்கு முஸ்லிம்களாக ஆகுமாறுதெய்வீக அகத்தூண்டல்ஏற்படுத்தப்பட்டது. அவர்களும் அதற்குக் கட்டுப்பட்டார்கள். இதற்கு; வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ் (முஸ்லிம்களாக ஆக) அவர்களின் உள்ளத்தில் அந்த எண்ணத்தை உருவாக்கினான்என்பதாக ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) அவர்களும், அவர்களின் உள்ளங்களில் (முஸ்லிம்களாக ஆக வேண்டி) அந்த எண்ணம் விதைக்கப்பட்டது என்பதாக சுத்தீ(ரஹ்) அவர்களும், இந்த வசனத்திற்கும், ஈஸாவே! உம்முடைய நெருங்கிய நண்பர்களுக்கு (முஸ்லிம்களாக ஆக வேண்டி) உங்கள் வாயிலாக நான் அறிவித்தேன். 

அதற்கேற்ப அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புமாறு (முஸ்லிம்களாக ஆக) அவர்களுக்கு நீர் அழைப்பு விடுத்தீர் அவர்கள் உமது அழைப்புக்குப் பதில் அளித்தனர். உமக்குக் கட்டுப்பட்டு (முஸ்லிம்களாகி) உம்மைப் பின்பற்றி நடந்தனர். எனவேதான் நாங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்கள். முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சியாய் இருப்பீராக என்று கூறினர் என்றும் பொருள் கொள்ள இடமுண்டு என்பதாக இப்னு கஸீர்(ரஹ்) அவர் களும் கூறியுள்ளார்கள்.  (தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:366-371) 

மேலும், இஸ்ரவேலர்களாகிய, அவர்களிடம் இறை மறுப்பு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?’ என்று அவர் கேட்டார். (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்)உதவியாளர்களாக இருக்கிறோம். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம். திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்எனக் கூறினர். (அல்குர்ஆன் 3:52) அதாவது; “அல்லாஹ்வின் வழியில் செல்லும் என்னைப் பின் பற்றுவோர் யார்?’ என்பதாக சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) அவர்களும் பொருள் கூறினார்கள். இதனாலேயே அவருடைய சில நெருங்கிய நண்பர்கள் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம். திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள் எனக் கூறி னர். (தஃப்சீர் இப்னு கஸீர்: 2:97-101) அது போன்றே;

இதற்கு முன்பு இறைநூல் கொடுக்கப்பட்டவர்களும் அவ்வாறே தம்மை முஸ்லிம்கள்  என்றே  கூறினார்கள் :

மேலும் (இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், “நாங்கள் இதை நம்புகிறோம். நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும். இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்என்று கூறுகின்றார்கள். (அல்குர்ஆன் 28:53) என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான். அதாவது: இந்தக் குர்ஆன் அருளப்படுவதற்கு முன்பே நாங்கள் ஓரிறையை நம்பியோராகவும் அந்த அல்லாஹ்வையே உளப்பூர்வமாக வழிப்படுவோராகவும், அவன் அழைப்புக்குப் பதிலளிப் போராகவும், முஸ்லிம்களாகவும் இருந்தோம் என்று கூறினார்கள்.
(
தஃப்சீர் இப்னு கஸீர் : 6:797-802)

Previous post:

Next post: