“லைலத்துல் கத்ர்”

in 2024 ஏப்ரல்

லைலத்துல் கத்ர்

 (ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்!)

முஹிப்பில் இஸ்லாம்

முன் இறை நெறி நூல்களும், ரமழான் மாத இரவுகளும்:

நமக்கு முன் உள்ள சமுதாயங்களுக்கு அருளப்பட்ட நெறிநூல்கள் தவ்ராத், ஜபூர், இன்ஜில் போன்றவைகளை நாம் அறிந்துள்ளோம். இஃதன்றி, நம்மில் மிகப் பலருக்கு வியப்பூட்டும் தகவல் யாதெனில், முதன் முதலில் நெறிநூல் அருளப்பட்டவர்கள் இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களாவர். அவர்களுக்கு என்ன நெறிநூல்? எந்த மொழியில் அருளப்பட்டது? என்ற குறிப்புகள் காணக்கிடைக்கவில்லை. அறியத்தரப்படவில்லை. தேவை எனில் ரப்பில் ஆலமின் அறியத்  தந்திருப்பான்.

எனினும், இறைத்தூதர் நூஹ்(அலை) அவர்களுக்கு அருளப்பட்ட நெறிநூலின் சாரம்சம்! அல்குர்ஆன் தரும் அவர்கள் வாழ்க்கை குறிப்புகள்! இறைத்தூதர் நூஹ்(அலை) அவர்களின் துணிவான ஓரிறைக் கொள்கைப் பிரகடனம்! அதனால் அவர்கள் பெரும்பான்மை மக்களிடம் சந்தித்த மிகப் பெரும் எதிர்ப்பு! இஸ்லாமிய அழைப்புப் பணியில் மிக நீண்ட 950 ஆண்டு கால அனுபவம்! இருந்தும் எண்ணிக்கையில் மிக குறைவானவர்கள் இஸ்லாத்தை ஏற்றல்! இஸ்லாத்தை ஏற்காத பெரும்பான்மையானவர்களை இறைத் தூதர் நூஹ்(அலை) அவர்கள் அழிக்கக் கோரிய துஆவைஅல்லாஹ் ஏற்றுக்கொண்டான்.

குறிப்பாக  அரிதில் முயன்றும் வெள்ளப் பிரளயத்தின் போது அவர்களின் ஈமான் கொள்ள முற்றாக மறுத்துவிட்ட ஆணவமிக்க ஈன்றெடுத்த மகனின் அழிவை நேரில் கண்டு பதறி, அல்லாஹ்விடம் முறையிட்டு, அதற்காக கண்டிக்கப்பட்டு பின் தன் தவறுக்காக உளம் வருந்தி, திருந்தி, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி பாவமீட்சி பெற்றார்கள் போன்றவைகளை அல்குர்ஆன் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

அல்குர்ஆன் எடுத்துக்காட்டும் 25 நபிமார்களில், அல்லாஹ் மிகவும் ஏற்றி, போற்றும், இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு சுஹ்புகள், நெறிநூல், ஆகமங்களால் ஏடுகளாய் அருளப்பட்டதாய் அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவுபடுத்தியுள்ளான்.

அல்குர்ஆன் காட்டும் இறைத்தூதர் இப்ராஹீம்(அலை) அவர்கள் வரலாற்றை நாம் நன்கறிவோம். பெயர்கள் குறிப்பிடப்படாவிட்டாலும் இன்னும் இதுபோல் பல இறைத் தூதர்களுக்கு நெறிநூல்களும், நெறிநூல் ஏடு(சுஹ்புகளும்) அருளப்பட்டுள்ளன என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் போதுமானது.

இதுபோன்றே, நெறிநூல்களும், சுஹுபுகள், ஆகமங்கள், நெறிநூல் ஏடுகளும், ரமழான் மாத இரவுகளில் ஒரே நேரத்தில் பல்வேறு இறைத்தூதர்களுக்கு முழுமையாக அருளப் பட்டுள்ளன என்பதே நம் ஆழ்ந்த  சிந்தனைக்குரியது.

நபியின் பெயர் அருளப்பட்ட ரமழான் இரவு:

1. இறைத்தூதர் இப்ராஹீம்(அலை), சுஹுபுகள், நெறிநூல் ஏடுகள், ஆரம்ப இரவுகள் ஒன்றில்,

2. இறைத்தூதர் மூஸா(அலை) தவ்றாத் இறுதியில்,

3. இறைத்தூதர் ஈஸா(அலை), இன்ஜீல் 13ல்  அருளப்பட்டது.

4. இறைத்தூதர் முஹம்மது(ஸல்), அல்குர்ஆன், 24ம் இரவு.

தேவைக்கேற்ப சிறுக, சிறுக அருளப்படல்:

புனித ரமழான் மாத லைலத்துல் கத்ரில், படைப்பினங்களின் அறிவிலிருந்து முற்றாக மறைக்கப்பட்டுள்ள, “லெளகுல் மஹ்பூல்எனும் பாதுகாக்கப்பட்ட, இறையறிவு கருவூலத்திலிருந்தும், அதன் இருப்பிடமாகிய பைத்துல் இஜ்ஜாவிலிருந்தும் அல்குர்ஆன் முழுமையும், பூவுலகை மிகவும் சமீபத்துள்ள முதல் வானிற்கு வல்ல அல்லாஹ் இறக்கியருளினான். மேல் குறிப்பிட்ட மற்ற நெறிநூல்களைப் போல், அல்குர்ஆன் முழு மையும் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. அங்கிருந்து தேவை, சந்தர்ப்பம், சூழ்நிலைகளுக்கேற்ப 23 ஆண்டுகளில் சிறுக, சிறுக நபி(ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டு அல்லாஹ்வால் நிறைவு செய்யப்பட்டது என்பதே நம் கவனத்திற் குரியது; அல்ஹம்துலில்லாஹ். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு அஸ்கப் (ரழி), நூல்: அஹமது, (தப்ஸீர்) இப்னு கதீர்)

ஈண்டு அனைத்து நிலைகளிலும் அல்குர்ஆனின் தனித்துவம் நிலைநாட்டப்படுகிறது.

முன் இறைநெறி நூல்களின் நிலையாமை:

முன் அருளப்பட்ட நெறிநூல்கள், சுஹபு (ஆகமங்)கள், வேத ஏடுகள், அனைத்தும் அந்த இறைத்தூதர்களுக்குப் பின் நின்று பாதுகாக்கப்படவில்லைநிலைக்கவில்லை. இறைத்தூதர் ஈஸா(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு முந்தைய இறைத்தூதர்; அவர்களுக்கு அருளப்பட்ட இன்ஜீல் எந்த அளவு சிதைக்கப்பட்டுவிட்டது? என்பதை நாம் மட்டுமல்ல. அந்த நெறிநூலை ஏற்றுள்ள நடுநிலையாளர்களும், அந்த நெறிநூலை அறிய முற்படும் மாற்றார்களும், இன்ஜீலின் இலட்சணத்தைக் கண்டு முகம் சுளிக்கின்றனர்.

இன்று கிருத்துவர்களின் கரங்களில் தவழும் பழைய, புதிய ஏற்பாடுகளின் பல்வேறுபட்ட பதிப்புகள் ஒன்றுக்கொன்று கொள்கைகளில், சித்தாந்தங்களில் முரண்படுவதையும், வேறுபடுவதையும், பைபிள் ஆய்வாளர் அறிஞர் அஹமத் தீதாத் அவர்கள் மிக அருமையாக அகில உலக கிருத்துவ வேத விற்பண்ணர்களுடன் நேருக்கு நேர் எளிய ஆங்கிலத்தில் விவாதித்து வெற்றிவாகை சூடி வந்தது குறிப்பிடத்தக்கது. கிருத்துவ அறிஞர்களின் விதண்டாவாதங்களுக்கெல்லாம் இதுவரை வெளிவந்துள்ள பைபிள் பதிப்புகளிலிருந்தே விடை பகர்ந்து, அவர்களுக்கு வாய்பூட்டு போட்டது, உலகறிந்த உண்மை.

இறை நெறிநூலின் மாறாத் தன்மைக்கு இலக்கணம்:

இந்நிலையில்இறைவாக்குகளின்மாறாத்தன்மைக்குஇலக்கணமாய்இருந்துவருவதுஇறுதிநெறிநூல்அல்குர்ஆன்! நேற்று, இன்று மட்டுமின்றி, நாளை, இவ்வுலகு உள்ளளவும், வாழப் போகும் இறுதி மனிதனுக்கும், அருளப்பட்டதிலிருந்து நிறைவு செய்யப்பட்டது வரை, எந்த நிலையில், அல்குர்ஆன் இருந்ததோ, அதே நிலையில் இருந்து வரும் காரணம் அல்குர் ஆனை அருளிய அந்த ஏக இறைவனே, இறுதி வரை அதனைப் பாதுகாக்கும் பொறுப்பேற்றுள்ளான். அதன் எழுத்துக்கள், வார்த்தைகள், வரி வடிவங்கள் முதல் அது மனித சமுதாயத்திற்கு வழங்கும் வாழ்க்கை நெறி என்று அல்குர்ஆனோடு தொடர்புடைய அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

பழைய, புதிய ஏற்பாடுகளின் அவலட்சணம்:

சொந்ததமிழ்மொழிசெய்யுட்களைப்படித்தவுடன்அவைகளைவிளங்கிக்கொள்ளமுடியவில்லை. பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை தேவைப்படுகிறது. ஆனால் அந்நிய மொழியில் உள்ள அல்குர்ஆனின் தமிழ் மொழியாக்கங்களைப் பாமரரும் படித்தவுடன் புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்காதோரும் அல்குர்ஆனைப் படித்து அதன் கருத்துக்களை எளிதில் புரிகின்றனர். இது அல்குர்ஆனுக்கு மட்டுமே கிடைத்துள்ள தனிச்சிறப்பு அல்குர்ஆனின் தனித்துவத்தில், அதி முக்கியமானது இது.

புதிய, பழைய ஏற்பாடுகளின் தமிழ் பெயர்ப்பைப் படிக்கும்போதே, அது தமிழில்தான் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதா? அல்லது தமிழ் வழி வேறு மொழியில் பெயர்க்கப் பட்டுள்ளதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. வேத பண்டிதர் துணையின்றி பைபிளைப் படித்து புரிவது, கல்லில் நார் உரிப்பதற்கு ஒப்பாகும். சித்தர்கள் பாடல்களைப் புரிவதைக் காட்டிலும் பைபிளைப் புரிவது காரணத்திலும் காரணமாகும். அல்குர்ஆனின் அபூர்வ எளிமை கண்டு ஆய்வாளர்கள் முதல் அனைவரும் வியந்து நிற்கின்றனர். இது அல்குர்ஆனின் தனி சிறப்புக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாகும்.  அது  மட்டுமா?

இன்ஜீல்அருளப்பட்டபோதுஓரிறைக்கொள்கைஅதன்அடிப்படைகொள்கையாகஇருந்தது. மனிதக் கரங்கள் ஊடுருவிய பின், ஓரிறைக் கொள்கை முத்தெய்வ இணைவைத்தலாய் சிதைக்கப்பட்டு விட்டது. இதுபோல் எண்ணற்ற மாற்றங்கள், பைபிளை இன்று கற்பனைக் காவியமாய் காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ்ப் புராணங்களை விஞ்சும் கற்பனைக் கதைகளில் பழைய புதிய ஏற்பாடுகள் காட்டும் இறைத்தூதர் ஈஸா(அலை) அவர்களின் மனிதத் தன்மையுள்ள மனிதரே, இறைத் தூதர் என்ற யதார்த்தம் சமாதியாகி விட்டது. தெய்வமாகவும், தெய்வக் குழந்தையாகவும் ஏசு மாறி, மாறி சித்தரிக்கப்படும் போது, ஏசுவின் யதார்த்தம் நசுக்கப்பட்டு, ஏக கற்பனைக் கதாபாத்திரமாய் உருமாறி விடுகிறார். மனித தன்மையும் தெய்வத் தன்மையும் மோதிக் கொள்கின்றன. ஏசு மனிதரா? தெய்வமா? என்ற குழப்பமே இறுதியில் எஞ்சுகிறது. இதுதான் சிதைக்கப்பட்ட பைபிளில் அவலட்சணம். இது போன்ற அவலட்சணங்கள் எதற்கும் இலக்காகாத  புனித  நெறிநூலே  அல்குர்ஆன்!

முன் இறை நெறிநூல்கள், ஆகமங்கள் அருளப்பட்ட, இரவுகளுக்கு பிரத்யேக சிறப்பு எதுவும் தரப்படவில்லை. இறுதி இறை நெறிநூல் அருளப்பட்ட லைலத்துல் கத்ர், ஆயிரம் மாதங்களைக் காட்டிலும் மேன்மை மிக்கது என்பதன் மூலம் அல்குர்ஆனின்  தனித்தன்மை  பிரகாசிக்கிறது.

முன் இறைநூல் குறிப்பிட்ட காலத்துக்கும் குறிப்பிட்ட நாடுகளுக்கும், அந்நாடுகளில் வாழும் குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்கும் அருளப்பட்டவைகள்! ஆகவே அந்த இறைநூல்கள் பாதுகாக்கப்படவில்லை. ஆனால் அருளப்பட்டதிலிருந்து, இவ்வுலகில் வாழப்போகும் இறுதி மனிதன்  வரை அல்குர்ஆன் ஒன்றே (இறுதி) மாறாத நெறிநூலாகத் திகழ்வதில் வியப்பொன்றும் இல்லை. இப்படி எந்த கோணத்தில் ஆய்வு செய்வதாலும் அல்குர்ஆன் முன் நெறிநூல் அனைத்திலிருந்தும் தனித்துவம் வாய்ந்தது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

முன் நெறிநூல்கள் மட்டுமின்றி, நெறி நூல்கள் என்று யார் யார் கையில் இருந்தாலும் அவைகள் எல்லாம் வேதங்கள் தானா? என்று உரசி பார்க்கும், உரைகல், அல்குர்ஆன், நெறிநூல் என்றால் என்ன? என்பதற்கு இலக்கணம் விடுப்பதும் அல்குர்ஆன்தான். அந்த இலக்கணத்திற்கு மாறாக இலக்கியமாய்த் திகழ்வதும் அல்குர்ஆன் மட்டுமே!

எல்லா வகையிலும் தனித்துவம் வாய்ந்த இறுதி நெறிநூல் இறக்கப்பட்ட இரவையும் தனித்துவமிக்கதாய் வல்ல அல்லாஹ் ஆக்கியுள்ளான்; இதுவே லைலத்துல் கத்ர் தனிச் சிறப்பு  பெற  முக்கிய  காரணமாகும்.

3. லைலத்துல்  கத்ரின்  தனித்துவம் :

நபி(ஸல்) அவர்கள் சமுதாயத்தவர்க்கோர் அல்லாஹ்வின் பிரத்யேக அருட்கொடை.

லைலத்துல் கத்ர்என்ற கண்ணியமிக்க இரவு, எனது சமுதாயத்தவர்(உம்மத்)க்கு வழங்கப்பட்ட (பிரத்யேகஇறை) அருட்கொடையாகும் என்று சமுதாயத்தவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரின் தனித்துவத்தை எடுத்துக் காட்டியுள்ளார்கள். அல்ஹதீது, எடுத்துவைப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரழி), பதிவாளர்கள்: முஸ்னத் இமாம் அஹமது, தைலமி, (தப்ஸீர்), இப்னு கதீர்.

Previous post:

Next post: