வாசிப்பவருக்கு ஏற்பட வழிகாட்டும் இறைநூல்! 

in 2024 ஏப்ரல்

வாசிப்பவருக்கு ஏற்பட வழிகாட்டும் இறைநூல்! 

M. சையது முபாரக், நாகை

ஹிஜ்ரிமுதல்நூற்றாண்டில்வரலாற்றில்நிகழ்ந்தமகத்தானபுரட்சிக்கு, மாற்றங்களுக்குக் காரணமாகத் திகழ்ந்தது அல்குர்ஆன் ஆகும். அந்த அற்புதம் வாய்ந்த இறைநூல் இன்று நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தாதற்குக் காரணம் அல்குர்ஆன்  அல்ல,  நாமே தான். 

வளமானவாழ்விற்கும், நேர்வழி காட்டி நன்னெறிப்படுத்துவதற்கும், வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சனைகளின் தீர்வுக்கும், இம்மை மறுமை வெற்றிக்கும் நமக்கு இறக்கப்பட்ட ஒரே ஒரு நூல் அல்குர்ஆன். ஆனால், அதை நாம் மறந்துவிட்டு குர்ஆனை ஓதுவதன் மூலம் கிடைக்கும் சிறிதளவு நன்மையே நமக்குப் போதும் என்று மார்க்கத்தை, வாழ்வியல் முறையைத் தனித்தனியாகப் பிரித்து குறுகிய மனப்பான்மையுடன், குறுகிய வட்டத்தில் நாம் சுழன்று வருவதால் நமக்குள்  மாற்றம்  ஏற்படவில்லை.

எப்படிவாழவேண்டும்என்பதைநமக்குக்கொடுக்கவந்தஅற்புதத்திடம், அல்குர்ஆனிடம், நாம் எப்படி நடந்துகொள்கிறோம்? அதை மனப்பூர்வமாக ஏற்று ஆர்வத்துடன் கற்றுத் தெளிவு பெறுவதுடன், கடைபிடித்துத் தொடர்ந்து செயலாற்றுகிறோமா? இல்லை, அது சொன்னதைச் செய்யாது அதனைப் புறக்கணித்துவிட்டு நம் மனம் போன போக்கில் வாழ்கிறோமா? நாமே நம் உள்ளத்தைக் கேட்டுக்கொள்வோம். மறுமையில் நம்மீது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறும் குற்றச்சாட்டை அல்லாஹ் இறைநூலில் கூறுகின்றான் பாருங்கள்.

(அந்நாளில் நம்முடைய) தூதர், “என் இறைவனே! நிச்சயமாக என் சமூகத்தினர் இந்தக் குர்ஆனை (ஏற்றுப் பின்பற்றாமல் தங்களுக்குத்) தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டார்கள்என்று  கூறுவார்.  (அல்குர்ஆன் 25:30)

ஒவ்வொருநபிக்கும்வழங்கப்பட்டஅற்புதங்கள்அவர்களின்காலத்திலேயேமுடிந்துவிட்டது. ஆனால், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட உலக இறுதி நாள் வரை நிலைத்து நிற்கக்கூடிய அற்புதம் அல்குர்ஆன். நமக்கு எந்த மாற்றத்தையும் தராமல்சும்மாஇருக்கிறது என்றால் அது எவ்வளவு வருத்தத்திற்குரிய, கைசேதப்படக் கூடிய  செய்தி?

ஒருமுதலாளிதன்னிடம்வேலைசெய்யும்பணியாளரிடம், கலைந்து கிடக்கும் பொருட்களைச் சரிப்படுத்தி வை; தூசிப் படிந்திருக்கும் பொருட்களை சுத்தம் செய்துவை என்று சில வேலைகளைச் சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டார். காலையில் சென்ற முதலாளி மாலையில் கடைக்கு வருகிறார். கடையில் சாமான்கள் போட்டது போட்டபடியே இருந்தது. சீர்(சரி) செய்யப்படவே இல்லை. சொல்லிச் சென்ற எந்த வேலை யையும் பணியாள் செய்யவில்லை. அவர் கோபத்துடன் பணியாளனிடம் கேட்கிறார். “சொன்ன வேலைகளை ஏன் செய்யவில்லை?” என்று. அதற்குநீங்கள் சொன்னதை அப்படியே தாளில் எழுதி அதனைப் படித்துப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது முதல் இப்போது வரை அதனைத் திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் மனப் பாடமே ஆகிவிட்டது. சொல்லவா?” என்று  பணியாளன்  பதில்  கூறினான்.

ஒருவீட்டின்எஜமானிக்குஃபஜ்ர்தொழுதவுடன்வெளியில்செல்லவேண்டியஅவசியம் (தேவை) ஏற்பட்டது. அதனால் வேலைக்காரி வந்ததும் செய்யவேண்டிய சில வேலைகளை ஒரு தாளில் எழுதி வைத்துவிட்டு வெளியில் சென்று விடுகிறார். சில மணி நேரம் கழித்து எஜமானி வீட்டுக்கு வருகிறார். எந்த வேலையும் நடைபெறாமல் எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. அவர் கோபத்துடன் வேலைக்காரியிடம் ஏன் எந்த வேலையும் நடைபெறாமல் எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. அவர் கோபத்துடன் வேலைக்காரியிடம்ஏன் எந்த வேலையையும் செய்வயில்லை? என்று கேட்கிறார். அதற்கு அந்த வேலைக்காரி, “அம்மா! தாங்கள் தாளில் எழுதி வைத்த அனைத்தையும், வீட்டைச் சுத்தம் செய்; துணி துவைத்து வை, காலை பசியாற இட்லி சுட்டு வை, என்று எழுதி வைத்திருந்த எல்லாவற்றையும் எழுத்துக்கு எழுத்து, வார்த்தை, வரிக்கு வரி கவனம் கொண்டு படித்தேன்; எழுத்துக்களின் அழகை ரசித்து முகர்ந்து முத்தம் இட்டேன்; திரும்பத் திரும்பப் படித்தால் மனப்பாடமே ஆகிவிட்டது; அதனைத் தங்களிடம்  ஒப்புவிக்கவா?”  என்று  சொன்னார்.

இந்தஇருநிகழ்வுகளிலும்வேலைக்காரனின்நிலையைமுதலாளியும், வேலைக்காரி யின் நிலையை எஜமானியும் ஏற்றுக்கொள்வார்களா? ஏன் நாமாவது ஏற்றுக்கொள்வோமா?

நாம்அல்குர்ஆனோடுகொண்டுள்ளதொடர்புமேலேசொன்னநிகழ்ச்சிகளுக்குஒப்பாகத்தானேஇருக்கிறது. இனியாவது நாம் சிந்தித்து சீர்பட வேண்டும். அல்குர்ஆனைத் தொடர்ந்து ஓதி, புரிந்து, சிந்தித்து செயல்பட வேண்டும்.

அவர்கள் இந்த குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்களில் பூட்டுகளா(பூட்டி) இருக்கின்றன?”  அல்குர்ஆன் 47:24

மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக அனைத்து வகையான உவமைகளையும் நாம் இந்த குர்ஆனில் எடுத்துரைக்கிறோம்.” (அல்குர்ஆன் 39:27) பார்க்க : 23:68, 29:43, 45:20, 54:22, 38:29.

அல்குர்ஆனைஓதி, அதனைக் கற்று அதன்படி நடந்தவரின் பெற்றோர்க்கு மறுமையில் ஒளியிலான கிரீடம் அணிவிக்கப்படும். அதன் பிரகாசம் சூரியனின் பிரகாசத்தைப் போன்றதாகும். அவர்களுக்கு இரு ஆடைகள் அணிவிக்கப்படும். அவ்விரண்டிற்கும் இவ்வுலகில் ஈடாகாது. “இது எதற்காக?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்குஉங்கள் பிள்ளை குர்ஆனை கற்றதினால்என்று பதில் கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹாகிம்) அல்குர்ஆனை நாம் ஓதி, படித்து, உணர்ந்து, சிந்தித்துப் பின்பற்றினால் அது ஒளியாக உள்ளத்தில் ஊடுருவி, மன இருளை அகற்றி, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புரட்சியை ஏற்படுத்தி புது மனிதனாக மாற்றிவிடும்; புது வாழ்விற்கு வழியமைத்துக்  கொடுக்கும்.

இருளில்மூழ்கிஇருந்தமனிதகுலத்தின்விடியலுக்குஒளியாக, வெளிச்சமாக அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கியருளினான். இந்த ஒளியானது உள்ளத்தில் படிப்படியாக வளர்ந்து, உணர்வில் கலந்து, நம்மைச் சீர்படுத்தும். “மனிதர்களே! உங்களைப் படைத்தாள்பவனிட மிருந்து உங்களுக்கு ஆதாரம் வந்துவிட்டது. உங்களுக்கு நாம் தெளிவான ஒளியை இறக்கி யிருக்கிறோம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, அவனை இறுகப் பற்றிக் கொள்பவர்களை (அல்லாஹ்) விரைவில் தனது அருளிலும், தயாளத்திலும் நுழையச் செய்வான். மேலும் அவர்களுக்கு நேரான  வழியைக்  காட்டுவான்” (அல்குர்ஆன் 4:174,175)

எவருடைய இதயத்தை அல்லாஹ் இஸ்லாத்திற்காகத் தெளிவடையச் செய்தானோ அவர் தன்னைப் படைத்து ஆள்பவனின் ஒளியின் மீது இருக்கிறார். அல்லாஹ்வின் சிந்தனையை விட்டும் உள்ளங்கள் இறுகிப் போனவர்களுக்கு நாசம் விளையட்டும். அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.”   (அல்குர்ஆன் 39:22)

இந்தஅல்குர்ஆன்தான்மிருகத்தைவிடக்கீழானநிலையில்இருந்தமக்களைசஹாபாக்கள் (நபித்தோழர்கள்) என்ற நிலைக்கு உயர்த்தி அவர்கள் வாழ்வில் அதிசயத்தக்க வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒழுங்கீனமாக இருந்தவர்களை ஒழுக்கசீலர்களாக மாற்றியது. பகைமைப் பாராட்டிக் கொலை செய்தவர்களை அரவணைத்து அன்பு செலுத்துபவர்களாக மாற்றியது. அதுபோன்று நமது வாழ்விலும் மாற்றம் வரும். அல்குர்ஆனை நாம் நாவால் மட்டுமே மொழிவதால் மாற்றம் ஏதும்  நிகழாது.

நமக்குஉலகஆசைஅதிகமாகிவிட்டதாலும், மரணமாகிவிடுவோமோ என்ற பயம் (மரணத்தைக் கண்டு வெறுப்பு) அதிகமாகிவிட்டதாலும் நாம் அல்குர்ஆன் பால் கவனத்தைச் செலுத்தாமல்  இருக்கின்றோம். நாம் அல்குர்ஆனை உள்வாங்கிப் படிப்பது நமது அறிவிற்கு புது வடிவத்தை ஏற்படுத்தும். உள்ளத்தில் புது ஆன்மாவைப் புகுத்திவிடும். அல்லாஹ்வின் பண்புகளை புரிந்து கொள்வதால் தூய உள்ளம் கொண்டவர்களாக மாறுவோம். விளக்கம் பெறுவதன் மூலம் வணக்க வழிபாடுகளில் மனம் ஒன்றி ஈடுபடுவோம். அல்லாஹ்வின் சட்டங்களை, கட்டளைகளை மனம் ஒப்பி ஏற்றுக்கொள்வோம்; நடைமுறைப்படுத்துவோம். இந்த மாற்றத்தை நாம் அடைய வேண்டுமானால் அல்குர்ஆனை சாதாரணமாக ஓதுவது மட்டும் போதாது. அல்குர்ஆனை ஓதி, புரிந்து, சிந்தித்து அதனை வாழ்வில் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். அப்போது தான் அல்லாஹ் நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்துவான்.

நபித்தோழர்களுக்குமாற்றத்தைத்தந்தஅல்குர்ஆன்நமக்குஏன்மாற்றத்தைத்தரவில்லை? அதற்குக் காரணம், நாம் அல்குர்ஆனோடு கொள்ளும் தொடர்பும், அணுகுமுறையும்தான். அல்குர்ஆனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு, அணுகுமுறை தவறாக இருக்கிறது. நாம் அல்குர்ஆனை புரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை; அதில் கவனம் செலுத்துவதில்லை; அதன்படிச் செயல்படுவதுமில்லை. ஆகவே, நம்மிடம் மாற்றம் வரவில்லை.

நிச்சயமாக அல்லாஹ் எந்த சமுதாயத்தின் நிலையையும் மாற்றுவதில்லை. தங்களைத் தாங்களே அவர்கள் மாற்றிக் கொள்ளாதவரை.   (அல்குர்ஆன் 13:11)

அல்குர்ஆன்ஓதினால்மட்டும்போதும்என்றகண்ணோட்டத்தை, அணுகுமுறையை நாம் கடைபிடிக்கிறோம். அதை மாற்றினால்தான் நமக்கு மாற்றம் வரும். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: