அன்றும்! இன்றும்!! என்றும்!!! பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

in 2024 ஜூன்

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை

வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2024  மே மாத  தொடர்ச்சி

பன்னிரெண்டு நீர் ஊற்றுக்கள் கொடுக்கப்பட்டவர்களான இஸ்ரவேலர்கள் எனும் யூதர்கள்:

மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடிதண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கிவந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம் (நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மண்ணு, ஸவ்வாவையும் (மேலான உணவாக) இறக்கி வைத்து; “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்) அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 7:160) 

அது ஒரு சதுர வடிவிலான கல் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், அந்தக் கல் தூர்சினா மலையிலிருந்து எடுக்கப்பட்ட கல்லாகும் என்பதாக கத்தாதா (ரஹ்) அவர்களும், அந்தக் கல்தான் மூஸா(அலை) அவர்கள் ஒருமுறை குளிக்கும்போது தமது ஆடையை(க் களைந்து) வைத்துவிட்டுக் குளிக்கப் பயன்பட்ட கல்லாகும் என்பதாக வேறு சிலரும் கூறியுள்ளனர். (புகாரி: 278, அபூஹுரைரா(ரழி), கத்தாதா(ரஹ்), ஸமக்ஷரீ(ரஹ்), ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்), ளஹ்ஹாக்(ரஹ்), ஸவ்ரி(ரஹ்), தஃப்சீர் இப்னு கஸீர்: 1:225-227) மேலும்,

மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்தபோது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியயழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடிநீர்த் துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள், பூமியில் குழப்பஞ் செய்துகொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள். (அல்குர்ஆன் 2:60) மேலும், இது குறித்து;

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: இஸ்ரவேலர்கள் (எனும் யூதர்கள்) “தீஹ்எனும் பாலைவனத்தில் தங்கியிருந்தபோது இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களான யூதர்களுக்காக இறைவனிடம் தண்ணீர் தேடினார்கள். நபியவர்களது வேண்டுதலை ஏற்ற அல்லாஹ் ஒரு கல்லில் அடிக் கும்படி உத்தரவிட்டான் அதன்படி மூஸா (அலை) அவர்கள்; இறை உத்தரவின் பேரில் தமது கைத்தடியால் குறிப்பிட்ட கல்லில் அடித்தார்கள். உடனே அதிலிருந்து பன்னிரெண்டு நீர் ஊற்றுகள் பீறிட்டன. அந்தக் கல்லின் ஒவ்வொரு மூலையிலும் மூன்று ஊற்றுகள் பீறிட்டன. அவர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் அவரவருக்கான நீரூற்று எதுவென அறிவித்துக் கொடுக்கப்பட்டது. அதிலிருந்து அவர்கள் நீரருந்தினர். (மேலும் இதுகுறித்து அறிவிப்பவர்கள்: கத்தாதா(ரஹ்), ஸமக்ஷரீ(ரஹ்), ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்), ளஹ்ஹாக் (ரஹ்), ஸவ்ரி(ரஹ்), தஃப்சீர் இப்னு கஸீர்: 1:225-227) மேலும்;

செங்கடலில் பனிரெண்டு பாதைகள் பிளக்கப்பட்டுப் பாதுகாப்பாகக் கடந்து சென்றவர்களான  இஸ்ரவேலர்கள்  எனும்  யூதர்கள்:

செங்கடலைப் பிளந்து ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு வழி என்ற வகையில் திடமான பன்னிரெண்டு பாதைகள் அமைக்கப்பட்டு; ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வகையில் ஒவ்வொரு பிளவுக்கும் இடையே கண்ணாடி ஜன்னல்கள் போன்று அமைத்துக் கொடுத்துக் கடலைக் கடக்கச் செய்து கொடியவன் ஃபிர்அவ்னிடமிருந்து பாதுகாக்கப்பட்டவர்களான யூதர்கள் (2:50,7:138,141, 20:77,80, 26:63, இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு மஸ்ஊத்(ரழி), ளஹ்ஹாக், கத்தாதா, அல்குராசானி, சுத்தீ, தஃப்ஸீர் இப்னு கஸீர்: 1:179, 3:879, 6:559-563, விவிலியம் பழைய ஏற்பாடு யாத்திராகமம் : 14:14,21-23,27)

வெண்ணிற மேகங்களினால் குளிர்ந்த நிழலிடச்  செய்யப்பட்டவர்களான  யூதர்கள்:

தீஹ்எனும் பாலைவனத்தில் சுட்டுப் பொசுக்கும் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்புத் தருவதற்காக போகுமிடமெல்லாம் வானத்தை மூடி மறைக்கக்கூடிய வெண்ணிற மேகங்களினால் குளிர்ந்த நிழலிடச் செய்தவர்களான (3:57-61, 5:21-26, 10:93. 20:80, இப்னு அப்பாஸ்(ரழி), ஹஸன்(ரஹ்), கத்தாதா(ரஹ்), முஜாஹித்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர்: 1:215,216) மேலும்,

சூரிய வெப்பத்தையும், கடுங்குளிரையும் தாங்கக்கூடியதாகவும், இற்றுப் போகாததும், அழுக்கடையாததுமான ஆடைகள் வழங்கப்பட்டவர்களான  யூதர்கள்:

தீஹ்எனும் பாலைவனத்தில் சுட்டுப் பொசுக்கும் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காகவும் கடுங்குளிரைத் தாங்கக் கூடியதாகவுமுள்ள இற்றுப் போகாததும், அழுக்கடையாததுமான, ஆளும் வளர, வளர அதற்கு ஏற்பவும், அவரவர் உயரத்திற்கு ஏற்பவும் வளரும் ஆடைகள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டவர்களான (இப்னு அப்பாஸ்(ரழி), தஃப்ஸீர் இப்னு கஸீர் : 1:219)

வானத்திலிருந்து பாலை விட அதிக வெண்மையானதாகவும் தேனை விட அதிக இனிப் பாகவும் உள்ளமன்னு  ஸல்வாகொடுக்கப்பட்டவர்களான  யூதர்கள் :

வானத்திலிருந்து பாலை விட அதிக வெண்மையானதாகவும், தேனை விட அதிக இனிப்பாகவும் நீருடன் கலந்தால் தரமான குளிர்பானமாகவும் வேறு பொருளுடன் சேர்த்தால் புதிய வகை கண்ணுக்கு நிவாரண உணவாகவுமுள்ளமன்னுஎனும் சிறப்பு உணவும், சிவப்பு நிறச் சாயலுள்ள காடையைப் போன்ற ஒருவகைப் பறவையின் இறைச்சியைப் போன்றஸல்வாஎனும் அதிஅற்புத உணவு அவரவர்களின் இருப்பிடங்களிலேயே பனிப் பொழிவைப் போன்று இறக்கி கொடுக்கப்பட்டவர்களான (2:5761, 5:2126, 10:93, 20:80, சயீத் பின் ஸைத்(ரழி), புகாரி: 4478,4639,5708, திர்மிதி, இப்னு அப்பாஸ்(ரழி), கத்தாதா(ரஹ்), சுத்தீ(ரஹ்), அப்துர் ரஹ்மான் பின் அஸ்லம்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர்:1:216-219)

எவ்விதமான உடலுழைப்புமின்றி அதிஅற்புதமான விதங்களில் பலவிதமான வசதி வாய்ப்புகள்  கொடுக்கப்பட்டவர்களான  யூதர்கள்:

இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும்மன்னு ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங் கள்” (என்றோம்) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்து விடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக்கொண்டார்கள்.     (அல்குர்ஆன் 2:57)

இஸ்ராயீலின் சந்ததியினரே! நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம்; மேலும், தூர்(ஸினாய் மலையின்) வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் வேதத்தை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம்; இன்னும்மன்னு ஸல்வாவை”(உணவாக) உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம். (அல்குர் ஆன் 20:80) மேலும்;

ஆரம்பத்தில் அனைத்து உணவு வகைகளும் ஹலாலாக்கப்பட்டவர்களான  யூதர்கள்:

இஸ்ராயீல்(என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்க(ளான யூதர்க)ளுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டுவந்து அதை ஓதிக் காண்பியுங்கள்என்று (அல்குர்ஆன் 3:93, தஃப்சீர் இப்னு கஸீர்: 2:155-159) இஸ்ராயீல் எனும் யஃஅகூப்(அலை) அவர்கள் ஒருமுறை கடுமையான நோய்வாய்ப்பட்டார்கள். (கீழ்வாத  நோய் ஏற்பட்டது) அந்த நோய் நீண்ட நாள் நீடிக்கவே இந்த நோயிலிருந்து அல்லாஹ் எனக்கு நிவாரணம் அளித்தால் எனக்கு விருப்பமான உணவையும் பானத்தையும் விலக்கிக் கொள்வேன் என அவர் அல்லாஹ்வுக்காக நேர்ந்து கொண்டார் அவருக்கு ஒட்டக இறைச்சியும், அதன் பாலுமே விருப்ப மான உணவாகவும், பானமாகவும் இருந் தன. (முஸ்னது அஹ்மத், தஃப்சீர்  இப்னு  கஸீர்: 1:309-320)

இஸ்ராயீல்என்னும் சொல்லுக்குஅல்லாஹ்வின் அடியார்என்ற பொருள்படசிறப்புப் பெயர்கிடைக்கப் பெற்றவர்களான யூதர்கள்:

இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக. (அல்குர்ஆன் 2:40,122,211, 3:49, 5:12,32,70,72, 78,110) “இஸ்ராயீல்என்பது நபி யஃஅகூப்(அலை) அவர்களைக் குறிக்கும் இதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ள இந்தச் செய்தி ஆதாரம் ஆகும். அதாவது; ஒருமுறை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் யூதர்களின் குழு ஒன்று வந்தது அவர்களிடம்இஸ்ராயீல்என்பவர் யஃஅகூப்(அலை) அவர்கள் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று நபி(ஸல்) அவர்கள் வினவினார்கள். அதற்குஆம்! சத்தியமாக!” (அறிவோம்) என அவர்கள் பதில் அளித்தார்கள். அப்போது இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று நபியவர்கள் கூறினார்கள். மேலும்; “இஸ்ராயீல்என்னும் சொல்லுக்குஅல்லாஹ்வின்  அடியார்என்ற பொருள்பட சிறப்புப் பெயர், எனவும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர்: 1:177-184) மேலும்;

யஹூத்எனும் சிறப்புப் பெயர் வந்ததற்குக் காரணமானவர்களான  யூதர்கள்:

நாங்கள் உன்னிடமே பாவமன்னிப் புக் கோருகின்றோம்என்ற பொருள்படஹுத்னாஎன்று இறைவனிடம் பிரார்த்தித்ததனால் யூதர்களுக்குயஹூத்எனும் சிறப்புப் பெயர் வந்ததற்குக் காரணமானவர்களான யூதர்கள் (இப்னு அப்பாஸ்(ரழி), அலி(ரழி), சயீத் பின் ஜுபைர், முஜாஹித், அபுல் ஆலியா, ளஹ்ஹாக், சுத்தீ, கத்தாதா(ரஹ்), தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர்: 3:911)

Previous post:

Next post: