தியாகம் (குர்பானி) ஏன்?

in 2024 ஜூன்

தலையங்கம் :

தியாகம் (குர்பானி) ஏன்?

எனது தொழுகையும், எனது தியாகமும், என் வாழ்வும், என் மரணமும் அல்லாஹ்வுக்கே  உரியன    (அல்குர்ஆன் 6:162)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறை நூலின் வசனம் நம்முடைய செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்யக்கூடியவையாக இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்துவதாகும். அப்பொழுதுதான் அல்லாஹ்வின் பொருத்தத்தைப்  பெறமுடியும்.

மேற்கண்ட இறைநூலின் வாசகத்திற்கு ஏற்ப பல தியாகங்களை செயலின் மூலம் செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றவர்கள்தான் நபி இப்ராஹீம்(அலை) அவர்களது துணைவியார், மற்றும் அவர்களது மகன் நபி இஸ்மாயில்(அலை) ஆகிய மூவரும்  ஆவார்கள்.

எனவே நாமும் பல தியாகங்களை அல்லாஹ்வுக்காக செய்யவேண்டும் என்ற அடிப்படையில் கடமையாக்கப்பட்டது  தான்  ஹஜ்  கடமை  ஆகும். 

ஆனால் இப்போது ஹஜ்ஜிக்கு செல்பவர்கள் பல நவீன கண்டுப்பிடிப்புகளால் சிரமத்தை அடையாமல் ஹஜ் கடமையை செய்யக்கூடிய பாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.

ஆயினும் நமது ஹஜ் அல்லாஹ்வால் பொருத்திக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருப்பது மிக முக்கியம். அதாவது தன்னுடைய கட்டளைக்கு மனிதன் எந்த அளவு வழிபட்டு நடக்கிறான்? என்பதை அறிய கடமையாக்கப்பட்டவைதான் ஹஜ்ஜின் நோக்கமாகும். அதுவல்லாமல் மனிதனை வேதனையில் ஆழ்த்த வேண்டும் என்பது இறைவனின்  விருப்பம்  அல்ல.

எப்படி பல தடங்கல்களை நபி இப்ராஹிம்(அலை) அவர்களது மனைவி மற்றும் நபி இஸ்மாயில் (அலை) ஆகிய மூவரும் பல தியாகங்களை செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றார்களோ அதுபோல் நாமும் ஆகவேண்டும்.

ரமழான் மாதம் நோன்பு நோற்பதால் உள்ளத்திற்கு பயிற்சியையும், இறை வழிகாட்டி நூல் அருளியதற்காக நன்றி செலுத்தும் பண்பையும், இல்லாத வருக்கு ஈந்து மகிழ்ந்து தர்மம் செயவதால் நாமும், நமது சொத்துக்களும் தூய்மை அடைவது கடமை ஆக்கியது போல் ஹஜ்ஜையும் கடமையாக்கினான்.

அதாவது பல சிரமங்களை கடந்து ஹஜ்ஜை நிறைவேற்ற தியாகம் செய்வதால் நமது உள்ளமும் பண்படும்.

எவ்வாறு என்றால் :

நாம் அல்லாஹ்வின் அடிமைகள், அல்லாஹ் மட்டுமே நமது எஜமான், நாம் அவனுக்காகவே வாழ்ந்து அவனுக்காகவே மரணிப்பது தான் நாம் ஹஜ்ஜின் மூலம் பெரும் படிப்பினையாக இருக்கவேண்டும்.

இந்த வருடம் ஹஜ் செய்யும் பாக்கியம் பெற்ற அனைவரின் தியாகமும் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்க துஆச் செய்வோம். ஆமின்!

*******************************************

முக்கிய  அறிவிப்பு :

அன்பான  சகோதரகளே! 

இந்த வருட குர்பானிக்கு பணம் கட்டுபவர்கள் 9488711888 ABC 123 என்ற G.PAY எண்ணில் கட்டவும். அந்நஜாத் வங்கி கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதில் யாரும் பணம் கட்டவேண்டாம்.

Previous post: