அடையாள அட்டை….
N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு.
இன்றைய நவீன உலகில் உலகிலுள்ள 95 சதவீத மக்களுக்கு அடையாள அட்டை உள்ளது. நமது இந்திய நாட்டிலும் ஆதார் கார்டு, பான்கார்டு, வோட்டர் கார்டு, ரேன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் கார்டு, மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டு போன்ற பல அடையாள அட்டை சுமார் 90 சதவீத மக்களுக்கு உள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களை கொண்டு அவர் பெயர் என்ன, அவர் பிறந்த தேதி என்ன, அவருடைய முகவரி என்ன, அவருடைய மொபைல் நம்பர் என்ன என்பது போன்ற சில விபரங்கள் அதில் உள்ளன.
இவை அல்லாமல் சிறு பள்ளி குழந்தைகள் முதல் பெரும் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் வரை அனைவருக்கும் அடையாள அட்டை ஒரு சில முக்கிய விபரங்களுடன் குறிப்பிட்டு கழுத்தில் தொங்கவிடப்படுகிறது. மேலும் ஒருசில பெரிய நிறுவனங்களில் தற்காலிகமாக கூட பணி நியமித்தமாக வருபவர்களுக்கு அடையாள அட்டை கழுத்தில் தொங்கவிடப் படுகிறது.
நவீன உலகில் இது அவசியமான ஒன்றாக வும் ஆகிவிட்டது. அதில் சில நன்மைகளும் உண்டு.
இத்தகைய அடையாள அட்டைகள் எல்லாம் மனித அறிவைக் கொண்டு கண்டுபிடிக்கப் பட்டதாகும். அதனால் அதில் பல தவறுகளும் உள்ளன. அவ்வப்பொழுது சரி செய்யவும் படுகின்றன.
மனிதனுக்கு அறிவை கொடுத்து படைத்த இறைவன் மனிதனை விட மிகப்பெரிய வல்லமையும், அனைத்தையும் அறிந்தவன் அல்லவா?
எனவே மனிதனைப் போன்று தவறுகள் இல்லாத திருத்தங்கள் செய்யமுடியாத ஒரு அனைத்து மனிதர்களுக்கும் அடையாள அட்டையை இறைவனும் ஏற்பாடு செய்துள்ளான். அந்த அடையாள அட்டை யில் ஒவ்வொரு மனிதனுடைய சொல், செயல், எண்ணம் அனைத்தும் தவறின்றி உடனுக்குடன் உடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இதுவரை நாங்கள் யாரும் அதை பார்த்ததே இல்லையே!
ஆம் உண்மைதான். யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனால் நிச்சயமாக உண்டு. இதை நாமாக சொல்லவில்லை. இறைநூலில் (அல்குர்ஆனில்) இரண்டு விதத்தில் பதிவாகி உள்ளதா இறைவன் கூறுகிறான்.
அதை யார் பதிவு செய்கிறார்கள்? அதில் என்னவெல்லாம் இருக்கும் என்பதையும் இறைவன் கூறியுள்ளான்.
அவர்கள் யார்?
“உங்கள் மீது எழுத்தாளர்களான கண்ணி யத்திற்குரிய வானவர்கள் உள்ளனர். அவர்கள் பதிவாளர் ஆவார்கள்” (அ.கு.82:10,11,12)
“அவர்களுடைய இரகசியத்தையும், அவர் களின் சதித்திட்டங்களையும் (தவறான செயல்களையும்) நாம் கேட்கவில்லை என எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறில்லை! அவர்களுடன் உள்ள நமது தூதர்கள்(வான வர்கள்) அவற்றை பதிவு செய்து கொண்டு இருக்கின்றார்கள்.” (அ.கு. 43:80)
மற்றொரு வசனத்தில்;
“மறுமை நாளில் அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சி அளிக் கும்” என்று இறைவன் கூறியுள்ளான். அ.கு. 24:25
மேற்படி வசனத்திலிருந்து வானவர்கள் பதிவு செய்வதை மட்டுமல்லாமல் மனிதனின் உடலில் ஒவ்வொரு செயலுக்கும் பதிவாகும் அடையாளத்தை இறைவன் ஏற்படுத்தி வைத் துள்ளான் என்றும் தெரிகிறது. அந்த அடை யாளம் மறுமை நாளில் அனைத்தையும் (நன்மை– தீமை) வெளிப்படுத்தும்.
(அறிவியல் ரீதியாகவும் இதை நாம் அறிய லாம். அதாவது மனிதனுடைய விந்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் முந்தைய தலைமுறை யினரின் ஒருசில பண்புகளைத் தன்னிடத்தில் பாதுகாத்துக் கொண்டிருப்பதாக ம்ஹிபு (ம்eலிமுதீrஷ்ணுலிஐற்உயிe புளீணூம்) எனும் மருத்துவ ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சில அடையாளங் கள் மேலோங்கும்போது அதில் சில பண்புகள் வாரிசுகளுக்கு உண்டாகிறது. ஆக ஒவ்வொரு மனிதனின் செயலும் பாதுகாக்கப்படுகின்றன என்பது மட்டுமின்றி, பல தலைமுறைகளின் செயல்களும் பாதுகாக்கப்படுகின்றன. இத்த கைய பாதுகாப்பான ஏற்பாடுகளின் ஏதோ ஓன்றின் மூலம்தான் இறைவனும் பாதுகாத்து அதை மறுமையில் உறுப்புக்கள் மூலம் வெளிப்படுத்த செய்கின்றான்)
மற்றொரு வசனத்தில்;
“மனிதப் படைத்தோம், அவனது மனம் (உள்ளம்) எதை (நல்லதையா–தீமையையா) எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். அ.கு. 50:16
மேலும் இறைவன் கூறுகிறான்;
“வானவர்களில் ஒருவர் வலதுபுறமும், மற் றொருவர் இடதுபுறமும் பதிவு செய்கின்றனர். அவன் எந்த வார்த்தையைக் கூறினாலும் பதிவு செய்து பாதுகாக்கும் வானவர்கள், அதனைப் பதிவு செய்யபடாமல் இருப்பதில்ல” (அ.கு.50:17,18)
மேலும் இறைவன் கூறுகிறான்;
“ஒவ்வொருவர் மீதும் கண்காணிப்பாளர் கள் இல்லாமல் இல்லை”. (அ.கு. 86:4)
நாம் முன்பே குறிப்பிட்டது போல் அவ் வப்பொழுது நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் வானவர்கள் பதிவு செய்கிறார்கள்.
இது ஏன் என்றால்?
நாம் செய்யும் செயல்களின் விளைவுகளிலி ருந்து ஒருபோதும் தப்பமுடியாது.
மேலும் இறைவன் கூறுவதாவது;
“ஸுர் ஊதப்படும் இது எச்சரிக்கப்பட்ட மறுமை நாள்.” (அ.கு. 50:20)
“ஒட்டிக்கொண்டு சாட்சி கூறும் வானவரு டன் ஒவ்வொரு உயிரும் வரும்” (அ.கு.50:21)
பின்னர் யாரெல்லாம் நம்பிக்கை இல்லா மல் அல்லது கவனமற்று இருந்தார்களோ அவர்களைப் பார்த்து இதைக் குறித்து இறைவன் அன்று கூறுவான்;
“நீ இந்த நாள் குறித்துக் கவனமற்றிருந்தாய். இப்பொழுது நாம் உன் திரையை உன்னை விட்டு அகற்றிவிட்டோம். இன்று உன் பார்வை கூர்மையாக உள்ளது.” (அ.கு. 50:22)
“(அதுசமயம்) இதோ எழுதப்பட்ட ஏடு அடையாள அட்டை இருக்கிறது” என்பார். (அ.கு. 50:23)
அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் வானவர் சொல்லுவார். நீங்கள் செய்த செயல் கள், பேசிய சொற்கள் எலலாவற்றையும் பற்றிய குறிப்பு இந்த அடையாள அட்டையில் உள்ளது.
இதை ஒருபோதும் நிராகரிக்க இயலாது இதோ நாங்கள் பதிவு செய்திருக்கும் குறிப்பை (அடையாள அட்டை) பாருங்கள்.
மனிதர்களுக்காக நியமித்திருக்கும் வான வர்கள், என் முன்னிலையில் எதுவொன்றை யும் மாற்றி கூறுவதற்கு சிறிதும் துணியமாட் டார்கள் என்று கூறுவான்.
இதில் எல்லாம் தெளிவாக உள்ளது. யாரெல்லாம் ஏக இறைவனை மறுத்து, நல்லதையும் தடுத்து, வரம்பு மீறியும், சந்தேகம் கொண்டு வேறு கடவுள்களையும், ஏற்படுத்தி கொண்டார்களே அனைத்தும் அதில் இருக்கும்.
இத்தகைய மனிதனை அவனுக்குரிய தண்டனையை வழங்க இறைவன் வானவர் களுக்கு கட்டளை இடுவான். (அ.கு. 50:24-26)
அது சமயம் (மறுமையில்) மனிதனும், ஷைத்தானும் என்ன கூறுவான் என்பதையும் இறைவன் கூறியுள்ளான்.
“எங்கள் இறைவா! நான் (ஷைத்தான்) இவனை வழிகெடுக்கவில்லை, மாறாக அவனாக வழிகேட்டில் இருந்தான்” அ.கு.50:27
அதற்கு இறைவன் கூறுவான்;
“என் முன்னிலையில் நீங்கள் தர்க்கம் செய்யாதீர்கள்! உங்களிடம் முன்னரே எச்சரிக்கை செய்து விட்டேன். என் வாக்கு மாறாதது, நான் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்ல” என்று இறைவன் கூறு வான். (அ.கு. 50:28,29)
அதுவே அந்த அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டது நன்மை மிகுதியாக இருந்தால் அவர் களின் நிலை என்ன என்பதை காண காஃப் அத்தியாயம் (50)ல் வசனம் 31 முதல் 35 வரை காணலாம்.
குறிப்பு : நாம் இந்த கட்டுரையில் பதிவேடை அடையாள அட்டை என குறிப்பிட காரணம் கீழ்கண்ட வசனம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
“ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத் தில் அவனது பதிவேடு இணைப்போம், அந் நாளில் அது படிக்க கூடியதாக அவன் காண் பான். உனது பதிவேடை அடையாள அட்டையை நீயே படித்துப் பாரும். இது உன்னைப் பற்றி அறிய போதுமானது.” என்று அவனிடம் கூறப்படும். (அ.கு. 17:13)
அதாவது கழுத்தில் இணைப்போம் என்று இறைவன் கூறுவதற்கு காரணம் அவன் செய்த செயலில் இருந்தும், அதற்குரிய கூலியிலிருந் தும் அவன் தப்பவும் முடியாது. அறிந்து கொள்ளவும் முடியும் என்பதாகும்.அந்த அடையாள அட்டை என்ன வடிவத்தில் இருக்கும். என்ன மொழியில் இருக்கும் என்பதையயல்லாம் அல்லாஹ்வே அறிவான்.