அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1 எதை நாம் மீறமாட்டேன் என்று அல்லாஹ் கூறுகிறான்?
வாக்குறுதி. அல்குர்ஆன் 3:9
2. அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களின் சித்தப்பா யார்?
அபூலஹப். அல்குர்ஆன் 111:1-5
3. இன்று மீலாது விழா கொண்டாடுவோர் யாரைப் பின்பற்றி கொண்டாடுகிறார்கள்?
அபூலஹபை.
4. நபி(ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய முதல் பெண் யார்?
அபூலஹபின் அடிமைப் பெண். ஸுவைபிய்யா ஆதாரம் நூல் முஹம்மத் பக்கம் 75
5. பிலால்(ரழி) அவர்கள் யாருடைய அடிமையாக இருந்தார்கள்?
உமய்யா இப்னு கலஃபுடைய அடிமை. நூல் : முஹம்மத் பக்கம் 113
6. இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு மறுமையில் என்ன கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
நன்மை. அல்குர்ஆன் 39:10
7. வஹீ மூலம் யாரை நேர்வழிப்படுத்த முடியாது என அல்லாஹ் கூறுகிறான்?
நபி(ஸல்) விரும்பியவரை எல்லாம். அல்குர்ஆன் 28:56
8. நபி(ஸல்) அவர்களையும், அபூபக்கர்(ரழி) அவர்களை பிடித்து வருபவர்களுக்கு பரிசாக எதை தருவதாக குறைசிகள் கூறினர்?
தலைக்கு 100 ஒட்டகங்கள். நூல் முஹம்மது பக்கம் 208
9. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ரோம் நாட்டின் மன்னர் யார்?
ஹிர்கல்(யஹர்குலஸ்) ஆதாரம் நூல் முஹம்மத் பக்கம் 434
10. ஹஜ்ஜத்துல் விதா உரை எப்போது நடந்தது?
துல்ஹத் பிறை 9, 10ல் நடந்தது. ஆதாரம் நூல் முஹம்மத் பக்கம் 559
11. நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தை எப்படி அழைப்பார்கள்?
ஹா´மி குடும்பம். ஆதாரம் நூல் முஹம்மத் பக்கம் 68
12. நபி(ஸல்) அவர்களின் தொழுகை நேரத்தை குறைத்து கேட்கச் சொன்ன நபி யார்?
மூஸா(அலை) ஆதாரம் நூல் முஹம்மத் பக்கம் 180,181
13. இணை வைத்து கொண்டு வணங்குபவர் களை என்ன செய்ய அல்லாஹ் கூறினான்?
புறக்கணித்திட கூறினான். அ.கு. 15:94
14. நம்பிக்கையாளர்களுக்கு செய்து வரும் குழப்பம் எதை விட மிகக் கொடியது என்று அல்லாஹ் கூறினான்?
கொலையை விட மிகக் கொடியது. அ.கு.2:217
15. உம்மு சலமா(ரழி) அவர்களின் இரண்டாவது கணவர் யார்?
முஹம்மது நபி(ஸல்) அவர்கள். முஸ்லிம் 1675
16. நேர்த்தி செய்வதாக கூறி இறந்து போய் விட்டவரின் வாரிசுகள் அதனை நிறைவேற்ற லாமா?
நிறைவேற்றலாம். முஸ்லிம் : 3367
17. எந்த நேர்த்திக்கடனை நிறைவேற்ற கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மாறு செய்வதிலும் உடமையில்லாத ஒன்றிலும். முஸ்லிம்: பாடம் 3
18. எது பெருத்துவிட்டால் நல்லவர்கள் இருக்கும்போதே அழிவு ஏற்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
தீமை பெருத்துவிட்டால். முஸ்லிம் 5520
19. எந்த அளவு திருடியவனின் கை வெட்டப்படமாட்டாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கால் தீனார் மற்றும் அதற்கு குறைவாக திருடியவனின் கையை. முஸ்லிம் 3481
20. தந்தையின் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் தடுத்த நபிமொழி எது?
முஸ்லிம் 3380