எளிமையான சொற்கள்! வலிமையான பலன்கள்!!

in 2025 ஜுலை

எளிமையான சொற்கள்! வலிமையான பலன்கள்!!

M. சையத் முபாரக்,  நாகை.

அல்லாஹ்விற்கு ஏற்ற, அவன் விரும்புகின்ற, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தச் சொற்களை (திக்ர்களை) நாம் சொல்லும்போது அதற்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் அறிவோம்.

அவைகளைப் பற்றித் தெரிந்தும் நாம் அவைகளைக் கூறாமல் தவிர்த்து விடுகிறோம். அதற்குக் காரணம், அதன் மதிப்பு இம்மையில் தெரியாததே.

நாளை ஃபஜ்ர் தொழுகைக்கு பள்ளிவாச லுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 தரப்படும் என்று அறிவிப்புச் செய்தால், அந்தப் பள்ளிவாசலை இரவு பூட்டக்கூடத் தேவை இருக்காது. இரவில் இருந்தே பள்ளி வாசலில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போடுவர். இந்த உலகில் சிறிதளவு பயன் தரக் கூடிய இந்தப் பணத்தை அடைய முயற்சிக்கும் மக்கள் ஃபஜ்ர் தொழுகையை அந்த நேரத்திலேயே தொழாமல் அலட்சியம் செய்கின்றனர்.

சுப்ஹ்ன் சுன்னத் தொழுகைக்கான சிறப் பைப் பற்றி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள் கூறுவதைக் கவனியுங்கள். 

சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்கள் இவ்வுலகம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும்  விடச்  சிறந்ததாகும்.”   (முஸ்லிம் 1314)

இவ்வுலகிலுள்ள மண், பொன், பொருள், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், உயர் ரக வாகனங்கள் மற்றும் அனைத்துச் செல்வங் களை விடவும் சிறந்தது, எனது விருப்பத்திற் குரியது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியும் நாம் இதனையும், இதனைப் போன்றவை களையும் தவிர்த்து வருகிறோம். இவைகளின் அருமை, பெருமைகளை நாம் புரிந்து கொள் வதில்லை. அந்த அளவு அலட்சியம் நம்மிடம் உழன்று கொண்டிருக்கிறது.

உற்றார், உறவினரோ, செல்வமோ உதவி செய்ய முடியாத மறுமை நாளில் நமக்கு உதவிட பல வகையான எளிய அமல்கள் இருக் கின்றன. அவைகளைச் செய்து மறுமையின் பொக்கி­ங்களை நாம் அடைந்து கொள்ள வேண்டும். அவைகளைச் செய்யாவிடில் மறுமையில் மிகுந்த கைசேதம் அடைவோம்.

ஆகவே, நமக்கு  மறுமையில் அதிக நன்மை களை, புதையல்களைப் பெற்றுத் தருகின்ற நாம் அறிந்த சில சொற்களை, திக்ர்களை மட்டும் நாம் இங்கு பார்ப்போம்.

Previous post:

Next post: