ஐயமும்! தெளிவும்!!

in 2025 ஜுலை

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : சொர்க்கத்தில் ஆண்களுக்கு துணையிருப்பது போல் பெண்களுக்கு துணை உண்டா?     N.ஆயிஷா மர்யம், தஞ்சாவூர்.

தெளிவு : இறைவனைத் தவிர மற்ற எல்லா உயிர்களுக்கும் இணைகள்/துணைகள் தேவை. இந்த நியதிக்கேற்ப உலகிலும் சரி, மறு உலகிலும் (சுவர்க்கத்திலும்) சரி, ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தேவைப்படும்.

ஆனால் குர்ஆன் மொழிப் பெயர்ப்பாளர்கள் சிலர் கீழ்கண்ட வசனங்களில்அஸ்வாஜீன்என்று குறிப்பிடப்பட்டுள்ள (இணை/துணை) என்பதை /துணைவியர்கள், மனைவியர்கள் என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்    அல்குர்ஆன் 2:25

மேலும் 3:15, 4:57, 36:56, 44:54, 56:22,23.

மேற்படி வசனங்களில் எல்லாம் தூய்மையான துணைகள் என்றே கூறப்பட்டுள்ளன.

எனவே இத்தகைய சந்தேகம் தவறானதாகும்.

ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, இறை நியதிப்படி ஒன்றுடன் ஒன்று சேர்வதால் தான் முன்னேற்றமும், எல்லா சுகங்களும்  முழுமை பெறுகிறது.

ஏன்  என்றால்;

இறைவன் நீதியாளன், கருணையாளன், எந்தவொரு ஆன்மா (உயிருக்கும்) விற்கும் நிச்சயம் அநியாயம் செய்பவன் அல்ல.

ஆண்களைப் பற்றித் தானே அல்குர்ஆன் பேசுகிறது. (அதாவது அனைத்துக் கட்டளைகளை யும், அறிவுரைகளையும் ஆண்களைக் குறிக்கும் வகையில் தானே உள்ளது) பெண்களைப் பற்றி பேசுவது இல்லையே இது ஏன்?  என்று உம்முஸலமா (ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம்  கேட்டார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் குர்ஆன் வசனம் 33:35 நீங்கள் படிக்கவில்லையா (ஓத வில்லையா) என்று கேட்டுவிட்டு ஆண்களுக்கு கூறப்படும் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்று கூறினார்கள்.    (அஹ்மத் 25363)

எனவே அல்லாஹ் ஆண்களுக்கு மட்டும் துணையைக் கொடுத்துவிட்டு பெண்களுக்குத் துணை இல்லாமல் விடமாட்டான்.

குர்ஆனில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இணை/துணை உண்டு கூறிவிட்டு பிரத்தியேகமாக சில வசனங்களில் மட்டும் மனைவி இல்லாமல் சுவர்க்கத்திற்கு வரக்கூடிய ஆண்களுக்குஹுருல்ஈன்கள்” (கண்ணழகிகள், கண்ணியர்கள், சம வயதுடையவர்கள்) என்ற ஒரு படைப்பை படைத்து ஆண்களுக்கு வழங்க இருப்பதாக வசனம் 56:22,23 மற்றும் 56:35ல் இறைவன்  கூறியுள்ளான். 

எனவேதான் இறைவன் ஹுருல்ஈன்களைப் பற்றி கூறும்பொழுதுஇதுவரை எந்த கண்களும் பார்த்திராத, எந்த ஆடவரும் தீண்டாத  என்று  கூறியுள்ளான்.

அந்த ஹுருல்ஈன்கள் எத்தகையானவர் கள் என்பதை அல்லாஹ்வே அறிவான். அதனை சுவர்க்கத்தில் நேரில் காணும் பொழுதுதான் மனிதர்கள் தெரிந்து கொள்வார்கள்.

Previous post:

Next post: