சர்க்கரையும்… அக்கறையும்…

in 2025 ஜுலை

வருமுன் காப்போம்…..

சர்க்கரையும்அக்கறையும்

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

2025 ஜூன்  மாத  தொடர்ச்சி….

(2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்வருமுன் காப்போம்கட்டுரை வருவது வாசகர்கள் அறிந்ததே. மார்க்க ரீதியாக மக்கள் எவ்வாறு எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை கடந்த 40 ஆண்டு களாக மக்களிடையே அதன் உண்மை தன்மையை அந்நஜாத் தெளிவுபடுத்தி வைப்பதுபோல் மருத்துவ ரீதியாக மக்கள் விழிப்புணர்ச்சி அடைய நாம் எழுதி வருவது வாசகர்களிடையே மற்றும் சில மருத்துவர்களிடையே கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  அல்ஹம்துலில்லாஹ்.

சமீப காலமா சில வாசகர்கள் நீரழிவு நோயைப் பற்றி சற்று விரிவாக எழுதுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த இதழில் நீரழிவு நோயைப் பற்றி எழுதியுள்ளோம். படியுங்கள் பரப்புங்கள் மற்றும் தங்களின்  கருத்துக்களை  தெரிவியுங்கள்)

பொதுவாக தாய், தந்தையர்கள் பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவதும், அதுபோல் பிள்ளைகள் தாய், தந்தையர்கள் மீதும் அக்கறை செலுத்துவதும் இயல்பான  ஒன்று.

இறைநூலில் தாய் தந்தையர்களுக்கு கட்டுப்படுங்கள், அவர்கள் மீது அக்கறை செலுத்துங்கள் என்று இறைவனும்  கூறியுள்ளான்.

அதுபோல் கணவன், மனைவி, உறவினர்கள், மற்றும் நண்பர்கள் கூட ஒருவருக்கு ஒருவர் அக்கறையும், அன்பும் செலுத்துவதும் இயல்பானதே. இதில் தவறு ஒன்றும் இல்லை, அவசியமானதும் கூட. சமீபகாலமாக அனைவரின் அக்கறையும் எதன் மீதுள்ளது என்றால்சர்க்கரைமீதே  உள்ளது.

என்ன  ஆச்சரியமாக  இருக்கிறதா? 

ஆம்!  உண்மையே.

நாம் சொன்ன அக்கறை அடையாறு ஆனந்தபவன் சுவீட்டில் கலக்கப்படும் சர்க்கரைப் பற்றியோ, பாம்பே சுவீட்டின் சர்க்கரைப் பற்றியோ, கோழிக்கோடு(கேரளா) அல்வாவின் சர்க்கரைப் பற்றியோ அல்லது மளிகை கடையில் விற்கப்படும் சர்க்கரைப் பற்றியோ சொன்னதாக  யாரும்  நினைக்க வேண்டாம்.

நாம் சொல்ல வந்தது சர்க்கரை என்னும் நீரழிவு நோயைப் பற்றியதாகும். அதாவது முன்பெல்லாம் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொள்வது வழக்கம், ஆனால் இப்பொழுது உங்களுக்கு சுகர் எவ்வளவு இருக்கு? என்பதுதான் முதல் விசாரிப்பாகவே உள்ளது. அந்த அளவிற்கு மக்களிடையே  இது  பிரபலமடைந்துள்ளது. 

அதற்குக்  காரணம்;

சில (கார்ப்பரேட்) மருந்து கம்பெனிகளும், மருந்து கம்பெனிகளிடம் கைகூலி பெற்றுக்கொண்டு சில அலோபதி மருத்துவர்கள் மக்களை பயமுறுத்தி வருவதுமாகும். உயிர் மீதுள்ள அக்கறையினாலும், ஆசையினாலும் மக்களும் இந்த நோயைக் கண்டு அச்சமடைந்துள்ளார்கள்.

நீரழிவுநோய்அது என்ன உயிர் கொல்லி நோயா?

நிச்சயமாக  இல்லை.

எவ்வாறு  என்றால்;

இந்த வியாதி மக்களுக்கு மட்டுமே பெரும்பாலும் வரும், மருத்துவர்களுக்கு பெரும்பாலும் வருவதில்லை, அவர்கள் நம்புவதும்  இல்லை.

நம்மைப் போன்று மருத்துவர்களும் சுவீட், மற்றும் டீ, காபி, பால் முதலியவற்றில் வெள்ளை சர்க்கரையை கலந்து தான் சாப்பிடுகிறார்கள், பருகுகிறார்கள்.

பின்  எப்படி?

மக்களின் அறியாமையையும், உயிர் பயத்தையும் காட்டி பணம் பண்ணுகிறார்கள். அவ்வளவே. உண்மை என்னவென்றால் எந்த ஒரு மனிதனின் உடலிலும் சர்க்கரை(சுகர்) இல்லாமல் இருப்பதில்லை. மனிதனின் படைப்பு மகத்துவமிக்க இறைவனின் படைப்பாகும். எனவே அவன்  சரியாகத்தான்  படைத்துள்ளான்.

அவன்(மனிதன்) எப்பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் இதற்கு முன் அவனை நாமே படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்கவேண்டாமா?  (.கு. 19:67)

மற்றொரு  வசனத்தில்,

தனது உணவைப் பற்றி மனிதன் சிந்திக்கட்டும்  (அல்குர்ஆன் 80:24)

மேலும் “….அல்லாஹ்வே ஒவ்வொரு பொருளையும் படைத்தவன், அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்என்று கூறுவீராக. (.கு. 13:16)

இறைவன் மேற்கண்டவாறு கூறியிருக்கும்போது இந்த மருத்துவர்கள் சிலர் இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும் மக்களை நோயின் காரணமாக பயமுறுத்து கிறார்கள். எவ்வாறு சில மதகுருமார்கள் ஏமாற்றுகிறார்களோ அதுபோல இவர்களும் ஏமாற்றுகிறார்கள்.

சென்ற 2020ஆம் ஆண்டு கொரோனா என்ற நோயை பரப்பினார்கள். அதுசமயம் எந்தவொரு நீரழிவு நோயாளிகளுக்கும் சுகர் கூடவில்லை. அதுமட்டுமல்ல மருத்துவர்கள் சுகர் நோயாளிகளுக்கு வைத்தியமும் பார்க்கவில்லை. குறிப்பாக பெண்களில் பெரும்பாலோருக்கு சிசேரியன் ஆப்ரேசன் குறைந்து பெரும்பாலும் சுக பிரசவமே  நடந்தன.

மற்றொரு உண்மை என்னவென்றால், நீரழிவு நோய் குறைய மருந்து மாத்திரைகள் உண்பவர்கள் கூட அதை முழுமையாக நம்பவில்லை. ஆயினும் எடுத்துக்கொள்கிறார்கள். காரணம் சுகர் குறையவில்லை என்றாலும் கூடவில்லை என நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு வேடிக்கையான மனப் போக்கிற்கு  இரண்டு  காரணம்.

ஒன்று=நீரழிவு நோய் துரிதமாக உயிரைப் பழிவாங்கும் நோய் அல்லது என்பது,

மற்றொன்று = அதிகமான நபர்களிடம் இந்த நோய் இருக்கின்றது என்ற நம்பிக்கையாகும்.

நமது உடல் நலமாக இருக்க இன்சுலீன் எனும் ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோன் கணையத்தில் சுரக்கிறது. உடலின் சரியான செயல்பாட்டிற்கு ஹார்மோன்கள் இன்றியமை யாதவை.

ஹார்மோன் என்பது உடலில் சுரக்கப்படும் வேதிப் பொருட்கள் ஆகும். இவை இரத்த ஓட்டத்தின் வழியாக திசுக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்குச் சென்று அவை பாதிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும். எப்போது செய்யவேண்டும் என்பதை செய்கின்றன. இது இறைவனின்  ஏற்பாடாகும். 

இந்த ஹார்மோன் கணையத்தில் சுரக்கிறது. இந்த வேதி பொருட்கள் உணவை ஜீரணிக்கவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த முக்கிய உறுப்பை சரியான உணவுகளுடன் உண்டு வந்தாலே நீரழிவு நோய் என்பதே வராது. கணையம் நன்கு செயல்பட மஞ்சள், இஞ்சி, பூண்டு, கீரை, ஆப்பிள், ஓட்ஸ், தயிர், ஆலிவ் எண்ணெய், போன்ற உணவுகள் உண்டு வந்தால்  போதுமானது.

பொதுவாக இரத்தத்தில் 80 முதல் 120% சர்க்கரை இருந்தால் நல்லது, இது கூடும் போதும், குறையும்போதும் நீரழிவு நோய் உண்டாகுவதாக மருத்துவர்கள் பயமுறுத்துகிறார்கள். உண்மை என்ன வென்றால் உணவு பழக்கங்களுக்கு ஏற்ப இது கூடும்குறையும். எனவே உடல்நலத்திற்கு மிகவும் முக்கியமானது மனநலமே. மனநலத்தை பாதிக்காமல் வைத்திருப்பவர்கள் (உயிர் பயம் இல்லாதவர்கள்) வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக  இருப்பார்கள்.

நீரழிவு எனும் நோய் பாதிப்பு ஏற்படாமல் மனிதன் வாழ்ந்திட முடியும்; நமது முன்னோர் களும் அவ்வாறுதான் வாழ்ந்தார்கள். உணவே மருந்தாக  உண்டார்கள். நீரழிவு நோய் வந்தபின்னர் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதை விட அது நம்மிடம் நெருங்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வதுதான் நல்லது. இது எல்லா நோய்களுக்கும்  பொதுவானதும்  கூட. பொதுவாக நோய் என்றால் அதற்கு அடிப்படையாக எதாவது ஒரு கிருமி காரணமாக இருக்கும் என்பதுதான் மருத்துவ  கணிப்பு. (விதி)

ஆனால் நிரழிவுக்கு எந்தவொரு நோய்க் கிருமிகளும் காரணமாக இருக்கவில்லை. எனவே இது நோய் அல்ல. நமது உடலில் ஏற்படும் ஒரு வகையான பாதிப்பு அவ்வளவு தான். நிரழிவு என்ற நோயின் பயத்தால் சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் வரைமுறை இல்லாமல் வாழும் சிலரின் வாழ்க்கையை மாற்றி  இருக்கிறது.

ஒருவருக்கு நிரழிவு நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு தெளிவான அடையாளங்கள்  மூன்றுதான்.

1. வழக்கமாக ஏற்படும் பசி உணர்வு மிகுதியாக  ஏற்படும்.

2. தாகம் உணர்வு அடிக்கடி ஏற்படும்.

3. சிறுநீர் அளவுக்கு அதிகமாக வெளியேறும்.

இவைகளை சரியான உணவு முறை மூலம் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். 

நாம் மேலே குறிப்பிட்ட உணவுகளை உண்டு நோய் வராமல் கட்டுப்படுத்துங்கள். முயற்சி செய்யுங்கள்.  இன்ஷா அல்லாஹ்! நலமுடன் சந்திப்போம்.

Previous post:

Next post: