நபி(ஸல்) விட்டுச் சென்ற ஜமாத்துல் முஸ்லிமீன் எங்கே?

in 2025 ஜுலை

நபி(ஸல்) விட்டுச் சென்ற ஜமாத்துல் முஸ்லிமீன் எங்கே?

S.H. அப்துர் ரஹ்மான்

ஜமாத்துல் முஸ்லிமீன் நபி(ஸல்) விட்டுச் சென்ற ஒரே அமீர் தலைமையிலான ஜமாஅத், கலிமாவை ஏற்ற முந்தியவர்கள், மூமின்கள், முஸ்லிம்கள், முனாபிக்கள் (கலிமா சொல்லிய பின்பு சிலை வணக்கமும் புரிந்தவர்கள்) அனைவரும் ஒன்றாக இருந்த ஒரே தலைமையில் ஆன அல்ஜமாத். (ஹிஜ்ரி 1 -11 வரை)

ஜமாத்துல் முஸ்லிமீன் நான்கு கலிபாக்கள் விட்டுச் சென்ற ஒரே அமீர் தலைமையில் ஆன ஜமாத், கலிமாவை ஏற்ற மூமின்கள், முஸ்லிம்கள், முனாபிகள் (கலிமா சொல்லிய பின்பு சிலை வணக்கமும் புரிந்தவர்கள்) கவாரிஜ் சிந்தனை உடையவர்கள் சியத்து அலி(சியா) சிந்தனையாளர்கள் அனைவரும் இருந்த ஒரே தலைமையில் ஆன அல்ஜமாத்.  (ஹிஜ்ரி 11-40 வரை)

இன்று நீங்கள் பின்பற்றும் ஜமாத்தில்மூமின்கள், முஸ்லிம்கள், முனாபிகள் (கலிமா சொல்லிய பின்பு சிலை / கபுர் வணக்கமும் புரிந்தவர்கள்) என்று கலிமா கூறிய அனைவரும் ஒன்றாக ஒரே ஜமாத் ஆக நபி(ஸல்) அவர்களும், சஹாபாக்கள் இருந்தது போல் இருக்கிறீர்களா? என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள்.

அல்லது, ஹிஜ்ரி 38ல் தூய்மை வாதம் பேசி பிரிந்து சென்ற ஆரம்ப தவ்ஹீதுகளான கவாரிஜ் பிரிவு போல் பாவம் செய்தவர் முஸ்லிமாக இருக்கமுடியாது என்பது அவர் களின் நம்பிக்கை. அலி(ரழி), முஆவியா(ரழி) இருவரும் காஃபிர் என தீர்ப்பு கூறி பிரிந்து சென்ற கவாரிஜ்கள் வழியில் தவ்ஹீத் வாதம் பேசி தனி பள்ளி, தனி ஜமாத் கண்டவர்களா? என்பதையும் பரிசோதித்து கொள்ளுங்கள்.

மேலும் ஜமாத்துல் முஸ்லிமீன் உமைய்யா கலிபாக்கள் விட்டுச் சென்ற ஒரே அமீர் தலைமையில் ஆன ஜமாத், கலிமாவை ஏற்ற மூமின்கள், முஸ்லிம்கள், முனாபிகள் (கலிமா சொல்லிய பின்பு சிலை வணக்கமும் புரிந்தவர்கள்) சியத்து அலி(சியா) சிந்தனை யாளர்கள் அனைவரும் இருந்த ஒரே தலைமையில்  ஆன  அல்ஜமாத்.      (ஹிஜ்ரி 41-132 வரை)

ஹிஜ்ரி 41க்கு பின்னர் சியத்து அலி என்பதில் இருந்து வந்த சியா பிரிவினர், சகாபாக்களை காஃபிர் என்று கூறி பிரிந்து சென்றார்கள். இதில் இமாமியா, இஸ்மாயிலியா போன்ற 5 பெரும் பிரிவினர் நுஸைரியா யசிய்கியா போன்ற 4 சிறு பிரிவுகளும் உண்டு.

´யாக்கள் வழியில் தவ்ஹீத் வாதம் பேசி தனி பள்ளி தனி ஜமாத் கண்டவர்களா? நீங்கள் என்பதையும் பரிசோதித்து கொள்ளுங்கள்.

மேலும் ஜமாத்துல் முஸ்லிமீன் அபாஸ்ஸிய கலிபாக்கள் விட்டுச் சென்ற ஒரே அமீர் தலைமையில் ஆன ஜமாத், கலிமாவை ஏற்று மூமின்கள், முஸ்லிம்கள், முனாபிகள் (கலிமா சொல்லிய பின்பு சிலை வணக்கமும் புரிந்தவர்கள்) சுன்னி முஸ்லிம்கள் (கவாரிஜ்கள், முஅதஸ்ஸிலாக்கள் பிரிவுக்குப் பின் ஹிஜ்ரி 260ல் ஜமாத் அல் முஸ்லிமீன் பெயர் கைவிடப்பட்டு ஹிஜ்ரி 500க்குள் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாத் என்று புதிய பெயர் சூட்டப்பட்டது) அனைவரும் இருந்த ஒரே தலைமையில் ஆன பெயர் மாற்றப்பட்ட அல்ஜமாத் (ஹிஜ்ரி 132-923)

ஹிஜ்ரி 132ல் பிரிந்த முஅதஸ்ஸிலாக்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவியலை வைத்து தர்க்கம் செய்தவர்கள். முஅதஸ் ஸிலாக்கள் வழியில் தர்க்க வாதம் பேசி தனி பள்ளி தனி ஜமாத்கண்டவர்களா? நீங்கள் என்பதையும்  பரிசோதித்து கொள்ளுங்கள்.

அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாத் என்று அபாஸ்ஸிய கலிபாக்கள் காலத்தில் பெயர் மாற்றம் பெற்ற உஸ்மானிய கலிபாக்கள் விட்டுச் சென்ற ஒரே அமீர் தலைமையில் ஆன ஜமாத், கலிமாவை ஏற்ற மூமின்கள், முஸ்லிம்கள், முனாபிகள் (கலிமா சொல்லிய பின்பு சிலை வணக்கமும் புரிந்தவர்கள்) அனைவரும் இருந்த ஒரே தலைமையில் ஆன பெயர் மாற்றப்பட்ட அல்ஜமாத்.  (ஹிஜ்ரி 923-1342)

உஸ்மானிய கலிபாக்கள் காலத்துடன் ஒற்றை கலிபா தலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இன்று நீங்கள் பின்பற்றும் ஜமாத்தில் மூமின்கள், முஸ்லிம்கள், முனாபிகள் (கலிமா சொல்லிய பின்பு சிலை/கபுர் வணக்கமும் புரிந்தவர்கள்) என்று கலிமா கூறிய அனைவரும் ஒன்றாக ஒரே ஜமாத் ஆக நபி(ஸல்) சஹாபாக்கள், குலபாக்கள் இருந்தது போல் அனைவருடன் இணைந்து ஒன்றாக இருக்கிறீர்களா? பிரிவு உண்டாக்கி தனித்து இருக்கிறீர்களா? என்று பரிசோதித்து தெளபா செய்து  திருந்தி  கொள்ளுங்கள்.

கவாரிஜ், ´யா, முஅதஸிலாகள் பிரிவிற்கு பின்பு ஜமாத்துல் முஸ்லிமீன் என்ற பெயர் மறைக்கப்பட்டு 35 நூற்றாண்டிற்கு அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாத் என்று பெயர் மாற்றம் பெற்ற ஒரே தலைமையை இழந்த ஜமாத், கலிமாவை ஏற்ற மூமீன்கள், முஸ்லிம்கள், முனாபிகள் (கலிமா சொல்லிய பின்பு சிலை/சமாதி வணக்கமும் புரிந்தவர்கள்) அகீதா அடிப்படையில் அஷ்அரிய்யா, மாதூரி தியா, ஸலஃபி, புதிய ஜமாத்துல் முஸ்லிமீன் ETC., ஃபிக்ஹ் அடிப்படையில் ஹனபி, ­ஃபி, மாலிக்கி, ஹம்பலி  ETC.,  அனைவரும் இருந்த ஒரே தலைமையை இழந்து இன்று வரை மஹல்லாவில் செயல்பாட்டில் உள்ள சுன்னத் வல் ஜமாத் என்ற பெயரில் உள்ள அல்ஜமாத். (ஹிஜ்ரி 1343 முதல் இன்று வரை)

ஜமாத்தின் பெயர் மாற்றம் நடைபெற்றுள்ளதே தவிர ஜமாத் இல்லாமல் போகவில்லை, இன்றும் எல்லா மஹல்லாவிலும் செயல்பாட்டில் உள்ளது.

அந்த ஜமாத்தில்மூமின்கள், முஸ்லிம்கள், முனாபிகள் (கலிமா சொல்லிய பின்பு சிலை/ கபுர் வணக்கமும் புரிந்தவர்கள்)” என்று  கலிமா கூறிய அனைவரும் ஒன்றாக ஒரே ஜமாத்  ஆக  இருக்கிறார்கள். 

நீங்கள் இன்று பின்பற்றும் ஜமாத்தில்மூமின்கள், முனாபிகள் (கலிமா சொல்லிய பின்பு சிலை/கபுர் வணக்கமும் புரிந்தவர்கள்)” என்று கலிமா கூறிய அனைவரும் ஒன்றாக ஒரே ஜமாத் ஆக நபி(ஸல்), சஹாபாக்கள் இருந்தது போல் இருக்கிறீர்களா? என்று பரிசோதித்து கொள்ளுங்கள்.

அல்லது ஹிஜ்ரி 1306-1393ல் அஹமதியா ஜமாத் (காதியானி) பிரிந்து சென்று தனி பள்ளி, தனி தலைமை கண்டவர்கள் போலவும் மேலும் ஹிஜ்ரி 1408ல் கவாரிஜ்கள் வழியில்  தூய்மை வாதம் பேசி பிரிந்து சென்று தனி பள்ளி, தனி தலைமை கண்ட AQH-ஆக், JAQH–ஜாக் பிரிவு, ஜாக்கில் இருந்து பிரிந்து சென்ற 30க்கும் மேற்பட்ட, இன்றும் பிரிந்து கொண்டுள்ள அனைத்து தவ்ஹீத் ஜமாத் பிரிவுகளும் இன்று உள்ளது போல, கவாரிஜ்கள், ´யா, முஅதஸிலா வழியில் தவ்ஹீத் தூய்மை வாதம் பேசி தனி பள்ளி, தனி ஜமாத் கண்டவர்களா? என்பதையும் உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள். தவறில் இருந்தால் சரி செய்து கொள்ளுங்கள். 

அல்லாஹ் நம் அனைவரையும் ஒற்றுமையான சரியான பாதையில் செலுத்துவானாக.

Previous post:

Next post: