பொய்க்கு மட்டும் பச்சைக் கொடியா?

in 2025 ஜுலை

பொய்க்கு மட்டும் பச்சைக் கொடியா?

A.N. Trichy.

போர் என்று வந்தால் அதில் முதலில் பலிகடாவாக ஆவதுஉண்மை‘. அந்நாளில் (முதல் உலக போர், மற்றும் இரண்டாம் உலகப்போர்) வதந்திகள் வாய் வார்த்தை யாகத்தான் பரவின. ஆனால் இப்போது மீடியா மூலம் அது இறக்கை கட்டிப் பறக்கின்றன.

அதிலும் இந்தியாபாகிஸ்தான் போர் என்றால் இந்தியா மீடியாக்கள் பல வதந்திகளை பரப்புவதில் முழுமூச்சாக இருக்கின்றன.

.ம். : கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பஹ்லகாம் தாக்குதலுக்கு பின்பு சென்ற மே மாதம் 7ம் தேதி இந்தியா எதிர்தாக்குதல் செய்தது. சுமார் 4 நாட்கள் மட்டுமே இந்த தாக்குதல் நடந்தன. இதில் இந்தியா, பாகிஸ்தான் நிலையில் சமாதானம்  ஏற்பட்டது.

ஆனால் இந்த சமாதானத்தை இந்திய மீடியாக்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக தாக்குதலை தங்கள் மீடியாக்கள் ஸ்டுடியோவிலேயே உருவாக்கின. இதில் சில தமிழ் மீடியாக்களும், சேர்ந்து கொண்டன. இது வீVயில் வரும் நெறியாளருக்கும், விவாவதித்தல் கலந்து கொண்டவருக்கும் பெரும்  கொண்டாட்டமாக  இருந்தது.

உண்மையில் இந்தியா மீடியாக்கள் இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் நிகழ்ச் சியை எந்த அளவிற்கு மக்களிடையே மிகுதியாக மிகைப்படுத்தி கொண்டு செல்லுமோ அதைவிட மோசமா இந்த தாக்குதலை கையாண்டது.

உண்மையை சொன்ன சிலரும் தேசதுரோகி என முத்திரை குத்தப்பட்டார்கள். இந்த தாக்குதல் நடக்கும்போது எந்தவொரு ஊடகங்களும் பக்கத்தில் இல்லை. அதற்கு மாறாக போர் நெருப்பை ஸ்டுடியோவில் உருவாக்கி குளிர் காய்ந்தார்கள். ஏன் என்றால் இந்த மீடியாக்களை யாரும் சமாதானத்தை எதிர்பார்க்கவில்லை, விரும்பவும் இல்லை.

காஷ்மீருக்கு சுற்றுலா வந்தவர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் இந்த மீடியாக்கள் இதை மதவெறுப்பாக உருவாக்கியது. அதாவது இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை பரப்பியது.

ஒருசில மதவெறுப்பை விரும்பாத மீடியாக்களால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் மீது ஆன்டி இந்தியன்  என்று  விமர்சனம்  செய்தார்கள்.

வீVகளும் சமூக ஊடகங்களும் விரும்புகின்ற இந்த வன்மத்துக்கு முக்கிய அரசால் கிடைக்கும் சில சலுகைகளே. அதுமட்டுமல்ல சமூக ஊடகங்களில் முக்கியமாக இருக்கும் வாட்ஸ்ஆப் இதை ஊட்டி வளர்கின்றன. அதனால் அதை பார்த்தவர்கள் உண்மை என்றும் நம்புகிறார்கள். நாடெங்கிலும் இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக குரல்கள் மட்டுமே ஒலிக்க வேண்டும்  என்று  விரும்புகிறார்கள்.

அதாவது பொய்க்கு மட்டுமே பச்சை கொடி காட்டவேண்டும் என்கிறார்கள்.

இந்த நிலை மாற TVலும், சமூக வளைதளங்களிலும் பொய்யை பரப்புபவர்கள் யாரென்று அறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தியா மதசார்பின்மை நாடு என்பதை அரசியல் சாசனம் மூலம் உலகிற்கு சொல்கிறது. எனவே அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும் நடுநிலையை பேண வேண்டும். பொய்க்கு பச்சை கொடி காட்டும் ஊடகங்களையும், ஊடகர்களையும் புறக்கணிக்க வேண்டும்.

Previous post:

Next post: