அறிந்து கொள்வோம்!

in 2025 செப்டம்பர்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ,  குண்டூர்

1. இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதால் கிடைக்கும் நன்மை என்ன என  நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

பாதிஇரவுவரைநின்றுதொழுதநன்மை. முஸ்லிம் : 1162

2. மூன்று குழந்தைகளை மரணத்தின் மூலம் இழந்த பெண்ணின் நிலை என்னவாகும் என  நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

நரகிற்குசெல்லாமல்தடுக்கப்படுவார்கள்.  புகாரி : 101

3. அபூ சுஃயானின் வணிகக்குழு பற்றி அறிந்துவர உளவாளியாக நபி(ஸல்) அவர்கள்  யாரை அனுப்பி வைத்தார்கள்?

புசைசாபின்அம்ர்அல்அன்சாரீ(ரழி). முஸ்லிம் : 3858

4. ஹஜ் செய்த நபி(ஸல்) அவர்களுக்காக அலி(ரழி) அவர்கள் குர்பானி ஒட்டகங்களை எந்த நாட்டிலிருந்து கொண்டு வந்தார்கள்?

யமன்  நாட்டிலிருந்து.  முஸ்லிம்: 2334

5. நபி(ஸல்) அவர்களுக்கு தலாக் செய்திட எந்த நிபந்தனைகளுடன் அல்லாஹ் ஆணையிட்டான்?

இத்தாவைக்கணக்கிட்டுதலாக்செய்திட.  அல்குர்ஆன் 65:1

6. இரவு நேர உணவு வைக்கப்பட்டபோது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

உணவைஅருந்தவேண்டும்.    புகாரி : 672

7. படுக்கையில் எவ்வாறு படுக்கவேண்டும் என  நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

வலப்பக்கம்  சாய்ந்து  படுக்கவும்.  புகாரி:247

8. யூதர்களுடன் போரிடாதவரை எது வராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

இறுதி  நாள்.  புகாரி : 2926

9. யாரை ஏசாதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

இறந்தோரை.   புகாரி : 6516

10. நபி(ஸல்) எந்த தொழுகையை தாமதப்படுத்தி தொழுவதை விரும்புபவர்களாக  இருந்தார்கள்  யார்?

இஷாதொழுகை. புகாரி : 547 

11. பத்ருப் போரில் இணை வைப்பாளர்கள் எத்தனை பேரை முஸ்லிம்கள் சிறை பிடித்தனர்?

70 பேர்.  முஸ்லிம் : 3621

12. நரகத்தில் இறை மறுப்பாளரின் கடைவாய்ப்பல் எவ்வாறு இருக்கும் என நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

உஹூத்  மலையைப்  போன்று.   முஸ்லிம்:5479

13. படைப்புகளில் மிக மேலானவர்கள் யார் என  அல்லாஹ்  கூறுகிறான்?

ஈமான்கொண்டுநற்செயல்கள்செய்பவர்.   அல்குர்ஆன் 38:7

14. கஅபாவை தவாப் செய்த பின் இரண்டு ரக்அத்கள் தொழுதால் கிடைக்கும் நன்மை  என்ன?

அடிமையைவிடுதலைசெய்தநன்மை.  இப்னு மாஜா : 2947

15. நோன்பாளிகள் மட்டும் சுவர்க்கத்தில் எந்த வாசல் வழியாக செல்வார்கள் என நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

ரய்யான்என்றவாசல்.    புகாரி : 3257

16. அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாக பங்கிடாமல் நடப்பவர்களுக்கு மறுமை நாளில் எது உரியதாகும் என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

நரகம்.   புகாரி : 3118

17. நபி(ஸல்) அவர்கள் எதனை வெறுப்பவர்களாக  இருந்தார்கள்?

இஷாவுக்குமுன்உறங்குவதை. புகாரி:547

18. ஸஅத் பின் முஆத்(ரழி) அவர்கள் எந்த போரில்  மரணமடைந்தார்கள்?

அகழ்ப்போரில்.  புகாரி: 4122

19. அஸ்ர் தொழுகையை பேணித் தொழுதவருக்கு எத்தனை மடங்கு நன்மை என நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

இரண்டுமடங்குநன்மை.  முஸ்லிம்: 1510

20. எந்த நபித்தோழர் நீண்ட காலம் உயிர் வாழ்வதன் மூலம் எங்களுக்கு பயன் கிடைக்க நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை  செய்யுமாறு  கேட்டனர்?

ஆமிர்பின்அக்வா(ரழி) புகாரி : 4196

Previous post:

Next post: