இயக்க வெறியால் பிரசாரத்துக்கே தடை!

in 2025 செப்டம்பர்

இயக்க வெறியால் பிரசாரத்துக்கே தடை!

K.M. அப்துல் ஹமீது

மறுபதிப்பு : 

திருக்குர்ஆன் முக்காலத்தையும் உணர்த்தக் கூடிய இறுதி நெறிநூல். திருக்குர்ஆனையும், நபி வழியையும் அப்படியே ஏற்று நடக்கிறோம் என்று கூறும். நம் சகோதரர்கள் இயக்க விசயத்தில் மட்டும் நாம் பல வருடங்களாக எடுத்துக்காட்டும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களைத் தூக்கி எரிந்துவிட்டு, இவ்வுலகில் ஆதாயத்(பணத்)தை பெறவே இயக்கங்களை நிலைநாட்டி  வருகின்றனர்.

உலகத்தில் வாழக்கூடிய முஸ்லிம்கள் நாட்டுக்கு ஒரு அமைப்பு. மாநிலத்திற்கு ஒரு இயக்கம், மாவட்டத்திற்கு ஒரு மன்றம், ஊருக்கு ஒரு சங்கம், தெருவுக்கு ஒரு சபை என்று முஸ்லிம் களை கூறுபோட்டு வருகின்றனர். அவர்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்று நமது சகோதரர்களும் IAC, JAQH என்று இயக்கம் தோற்றுவித்து JAQH பள்ளிவாயில்களைக் கட்டி, ஒன்றாக இருக்கும் ஊரை இரண்டாக்கி, சமுதாயத்தைக் கூறுபோட்டு, முஸ்லிம்களை மேலும் பிளவுபடுத்தி வருவதைப் பார்க்கிறோம். இவ்வளவுக்கும் காரணம் தனி மனிதனால் உண்டாக்கப்பட்ட இயக்க வெறி தான்.

அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைச் சொற்பக் கிரயத்திற்கு விற்றுவிட்டு, அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்யும் காரியங்கள் மிகவும் கெட்டவை. அவர்கள் எந்த விசுவாசியின் விசயத்திலும் உறவையும், உடன்படிக்கையையும் பொருட்படுத்தமாட்டார்கள்.”   (திருக்குர்ஆன் 9 அத்தவ்பா வசனம் 9,10)

மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்.” (திருக்குர்ஆன் 9 அத்தவ்பா  வசனம் 34)

அல்குர்ஆன் 41:33 வசனத்தில் அல்லாஹ் தெளிவாக ஒரு பிரசாரகன் தன்னை முஸ்லிம்களில் உள்ளவன் என்று அழைத்துக்கொள்ள வேண்டும் என தெளிவாகச் சொல்லிக்காட்ட, மார்க்க அறிஞர்களோ மக்களுக்கு இயக்க போதையை உண்டாக்கி பகைவர்களாக்கி வருகின்றனர். ஆம்! இந்திய முஸ்லிம்கள் இந்தியாவில் பல இயக்கங்களாக செயல்படுபவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், அரபு நாடுகளிலும் முஜாஹித், அஹ்லே ஹதீத், ஸலஃபி, IAC, இஸ்லாஹி சென்டர், இந்தியன் முஸ்லிம் அசோசியேசன் (ஈமான்) அரப் இந்திய முஸ்லிம் அசோசியேசன் (அய்மான்) போன்ற பெயர்களில் செயல்பட்டு பிரசாரம்  செய்கின்றனர்.

பிரிவினைக்கும், இயக்க வெறிக்கும் புகழ் பெற்ற கேரள சகோதரர்கள், சுன்னத் ஜமாஅத்தார்கள் என்று பல பிரிவுகளாகவும், ஜமாஅத்தே இஸ்லாமி, .கே. குரூப், .கே. குரூப், தப்லீக்காரர்கள், சூபியிஸ கொள்கையுடையோர் இன்னும் எண்ணற்ற இயக்கத்தார்கள், குழுக்கள், குழுக்களாய் வாரந்தோறும் (வெள்ளிக் கிழமை) தேரா துபை நைஃப் ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் பயான் செய்து ஒரு இயக்கத்தார் மற்ற இயக்கத்தார்களுடன் (வெறியால்) மோதுவதும், சண்டைப் போட்டுக் கொள்வ தும் வழக்கமாகி, காவல்துறை சமாதானப்படுத்தியும் தொடர்ந்து பிரச்சனை பெரிதாக துபை (அவ்காப்)வக்பு வாரியம் தலையிட்டு அப்பள்ளியில் இனி எந்த இயக்க (பிரிவு)க் கூட்டத்தாரும் (பயான்) மார்க்க பிரசாரம் செய்யக்கூடாது என தடை விதித்துவிட்டது. பள்ளிவாசலிலேயே இப்படி மோதிக்கொள்பவர்கள் வெளியரங்கத்தில் மற்றும் மன்ற கூட்டங்களில் எப்படி மோதிக் கொள்வார்களோ  அல்லாஹ்  அறிவான்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து இஸ்லாத்தை இஸ்லாமாக எந்த பிரிவுகளுமின்றி எடுத்துக்காட்டி போதித்து தங்களை முஸ்லிம்கள் (முஸ்லிமீன்) என்று பிரசாரம் செய்யப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட தடை விதிக்கப்படுமா? என்பதை இயக்க வெறியர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே போவதாகும்  (அல்குர்ஆன் 17 பணி இஸ்ராயில் 81 வசனம்)

எவ்வளவு தான் இயக்கம் மேல் பக்தி கொண்டு செயல்பட்டாலும் உண்மையை மக்கள் உணர்ந்து இயக்கங்களை விட்டு வெளியேறும் காலம் வெகு தூரமில்லை. அல்லாஹ்வின் (17:81) வாக்கு பொய்யாகி விடாது என்பதை இங்கே  நினைவுபடுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் ஜமாஅத்துல் உலமா சபை (அரசு அனுமதி பெறாதது) ஆலிம்கள் தங்கள் இஷ்டத்திற்கு (கருத்து வேறுபாடு கொண்ட) காதியானிகளை காஃபிர் என்று ஃபத்வா (தீர்ப்பு) கூறினார்கள் என்றால் (அரசு பதிவு பெற்ற) தமிழ் நாட்டு ஜமாஅத்துல் உலமா (தவ்ஹீத்) ஆலிம்களோசிர்க்‘, “பித்அத்செய்பவர்கள் இமாமாக தொழ வைத்தார்களானால் அவர்களைப் பின்பற்றி தொழுவது ஹராம் என்றுஃபத்வாகொடுக்கின்றார்கள். இவர்கள் இஷ்டத்திற்கு தீர்ப்பு கொடுக்க மார்க்கம்  இவர்களின்  அப்பன்  வீட்டு  சொத்தா?

திருமறையில் அனைவரும் சகோதரர்கள் என்று  அல்லாஹ்  கூறுகிறான்.

இவர்களோ ஜ... ஆலிம்களை காஃபிராக்கி ஃபத்வா வழங்குகின்றனர். யாரையும் யாரும் காஃபிர் என்று கூற உரிமையும் இல்லை, அனுமதியும் இல்லை என்பதை தவ்ஹீத்  ஆலிம்களுக்கு  எச்சரிக்கிறோம்.

சமுதாயம் பிரிந்து கிடந்ததை அல்லாஹ் ஒற்றுமைப்படுத்திய முறையை தெளிவாக திருமறையில் (ஆலஇம்ரான் 3:103) வசனத்தில் கூறுகிறான். இதைப் படித்து ஒன்றுபட்டு செயல்பட உங்களை அன்போடு அழைக்கிறோம். வல்ல அல்லாஹ் நம்மை நல்லடியார் களாக்குவானாக.  ஆமீன்.

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள்கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாக இருந்தீர்கள். உங்கள் உள்ளங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைப் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்துகளை, வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்.      (அல்குர்ஆன் 3:103)

Previous post:

Next post: