இறைவனின் பார்வையில் கண்ணியத்திற்கு  உரியவர்

in 2025 செப்டம்பர்

இறைவனின் பார்வையில் கண்ணியத்திற்கு  உரியவர் :

நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்:

மூஸா பின் இம்ரான்(அலை) அவர்கள் இறைவனிடம் வினவினார்கள். என் அதிபதியே! உன்னுடைய அடியார்களில் உன்னுடைய பார்வையில் மிக அதிகக் கண்ணியத்திற்கு  உரியவர்  யார்?” 

இறைவன்  பதிலளித்தான் :

சக்தி பெற்றிருந்த நிலையிலும் மன்னித்து விடுகின்ற மனிதன் (தான் மற்றெல்லா மனிதர்களை விடவும்  கண்ணியத்துக்குரியவன்)  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி), நூல்: பைஹகீ.

உண்மையில் மனிதன் ஓர் ஒழுக்கப் படைப்பு ஆவான். அவனுடைய ஒழுக்கம் முழுமை பெறுகின்ற போதுதான் அவன் முழுமையடைகின்றான். ஒழுக்கத்தளத்தில் அவன் எந்த அளவுக்கு உயர்ந்து நிற்கின்றானோ அந்த அளவுக்கு அவன் இறைவனாலும் அதிகக் கண்ணியமானவனாக அறிவிக்கப்படுவான்.

அவனுடைய ஒழுக்கத் தரத்தைப் பொருத்தே படைப்புகள் மத்தியிலும் அவன் மதிக்கப்படுவான். அவனுடைய ஒழுக்க நிலையின் அடிப்படையில்தான் பிற மனிதர்கள் மத்தியிலும் அவன் மீதான மரியாதை தோன்றும். ஒருவர் ஒழுக்கத்திலும், குணத்திலும் உயர்ந்த படித்தரத்தை அடைந்திருக்கின்றார் என்பதை அறிந்துகொள்வது எப்படி என்பதற்கான விடை இந்த  நபிமொழியில்  தரப்பட்டுள்ளது.

பழி வாங்குகின்ற தண்டிக்கின்ற சக்தியும் வலிமையும், வாய்ப்பும் பெற்றிருந்தும் அவர் மற்றவர்களின் தவறுகளையும்,  பிழைகளையும்  பொறுத்துக்  கொள்கின்றார்.

தமக்குக் கேடு விளைவித்தவர்கள் மன்னித்து விடுகின்றார் எனில், அவர் ஒழுக்கத் தளத்தில் உயர்ந்து நிற்கின்றார். மிக உயர்ந்த படித்தரத்தை எய்தியிருக்கின்றார். இறைவனிடத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கின்றார்  என்றே   அதிலிருந்து  விளங்கிக்  கொள்ளலாம்.

Previous post:

Next post: