சூரியன் மேற்கில் உதிப்பதால் ஒரு நாளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

in 2025 செப்டம்பர்

சூரியன் மேற்கில் உதிப்பதால் ஒரு நாளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

ஹலரத் அலி.

நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள் :

சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமை நாள் ஏற்படாது. அதைக் கண்டதும் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆனால் ஏற்கனவே இறைவனை நம்பாதிருந்தவர்களின்  நம்பிக்கை எப்பயனுமளிக்காது.  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: புகாரி 6506

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மறுமை நாளின் பெரிய அடையாளங்களில் ஒன்றாக கிழக்கிலிருந்து சூரியன் உதிப்பதற்கு பதிலாக மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும் என்பதையும், இப்பெரு நிகழ்வை மக்கள் பார்த்ததும் அனைவரும் அல்லாஹ்வை(ஈமான்) நம்பிக்கை கொள்வார்கள் என இந்த ஹதீதில்  குறிப்பிடுகிறார்கள்.

இவ்வேளை காபிரின்இறை நிராகரிப்பாளனின் ஈமானோ, நற்காரியங்களோ (தவ்பா) பாவ மீட்சியோ, எவ்விதப் பயனையும் தரமாட்டாது. தொடர்ந்தும் நபியவர்கள்  கூறினார்கள்.

மக்கள் அனைவரும் அவர்களின் அன்றாட விவகாரங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக மறுமை சம்பவிக்கும் என அறிவிக்கிறார்கள்.

விற்பவரும், வாங்குபவரும் (விற்பனைக்கான) துணிகளை விரித்து(ப் பார்த்து)க் கொண்டிருப் பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக் கவுமாட்டார்கள். சுருட்டிக் கூட வைத்திருக்க மாட்டார்கள். அவ்வாறு இருக்கும் நிலையில் மறுமை சம்பவிக்கும்.

ஒருவர் மடியில் பால் நிறைந்த தம் ஒட்டகத்தில் பால் கறந்து இன்னும் அதைப் பருகிக் கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.

ஒருவர் தம் நீர் தொட்டியை அப்போது தான் கல் வைத்துப் பூசியிருப்பார். இன்னும் அதில் நீர் இறைத்திருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.

ஒருவர் தம் உணவை சாப்பிடுவதற் காக வாயருகில் கொண்டு சென்றிருப் பார். அதை உண்டிருக்க மாட்டார். அதற்கு மறுமை சம்பவித்து விடும்.  புகாரி: 6506

பூமியில் மேற்கு திசையில் சூரிய உதயம் தோன்றக் காரணம். தற்போதுள்ள வட துருவம் உச்சியிலும், தென் துருவம் கீழ்ப்புறத்திலும் உள்ளது. இவை ஒரு இரவு சுழலும் வேகத்திலேயே தலைகீழாக மாறிவிடும். காலையில் கண் விழித்துப் பார்க்கும் மக்களுக்கு சூரியன் மேற்கில் உதிப்பதாக தெரியும்.

Previous post:

Next post: