நட்பும்…! நம்பிக்கையும்…!!

in 2025 செப்டம்பர்

நட்பும்…! நம்பிக்கையும்…!!

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

இவ்வுலகில் எந்தவொரு மனிதனும் தனித்தவனுமல்லன், அதுபோல் தனித்து தனியாக வாழ்ந்திட கூடியவனும் அல்லன். ஏன் என்றால்; வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பிற மனிதர்களைச் சார்ந்தே வாழ்பவனாகவே இருக்கின்றான், இருக்கின்றோம்.

அதாவது கணவன், மனைவி உறவு, உடன் பிறந்த சொந்தங்களின் உறவு, நண்பர்கள் உறவு, இன்னும் ஏனைய சில உறவுகளின் தொடர்புகளுடனும் வெவ்வேறு அடையாளங்களுடன் வாழ வேண்டியவனாகவே இருக்கின்றான்.

இதைப் பற்றி இறைவன் கூறியிருப்பதாவது:

அவனே(இறைவனே) நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அம்மனிதனுக்குப் பெற்றோர் வழி உறவுகளையும், திருமண வழி உறவுகளையும் ஏற்படுத்தினான், உமது இறைவன் ஆற்றல் மிக்கவனாக இருக்கின்றான்.கு. 25:54

மேற்கண்ட உறவுகள் மட்டுமே நிலையானவை. அவை இறப்பு வரை நீடிப்பவை. மேலும் மரணத்திற்குப் பின்பும் பேசப்படுபவை.

மேற்கண்ட உறவுகள் அல்லாமல் மேலும் சில உறவுகள் உண்டு. அவை:

1. பள்ளி தோழர்கள்/தோழிகள்,

2. கல்லூரி தோழர்கள் / தோழிகள்,

3. பணிபுரியும் இடத்தின் மூலம் ஏற்படும் நட்புகள்.

4. தொழில் பங்குதாரர்களுக்குள் உருவாகும் நட்பு.

5. முதலாளி, தொழிலாளி உறவு.

6. கொள்கை உறவு. இன்னும் சில உறவுகள்.

இவைகள்எல்லாம்தொடரவும்செய்யும், விலகவும் செய்யும்.

மேற்கண்ட நட்புகளுக்குள் அனுபவங்களும், விருப்பங்களும், கொள்கைகள் அடிப்படையி லான நட்புகள் மட்டுமே பேசும்பொழுது மன நிறைவு தரும்.

நட்பு தொடர என்ன செய்யவேண்டும் :

ஒருவருடன் ஏற்பட்ட நட்பு தொடர ஓரளவு பழகிய பின்பு நலம் விசாரிப்பதும், டீ, காபி, குளிர்பானம் அருந்துவதும், ஒன்றாக சில நேரங்களில் ¼ச்ந்து உணவு உண்பதும், அவருக்காக இவரும், இவருக்காக அவரும் நேரங்களை செலவழிப்பதும், மற்றும் உலக ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டால்தான் நட்பு தொடர முடியும்.

இப்போது எல்லாமே அலைபேசி காலமாகி விட்டது. நலம் விசாரிப்பது முதல் கொடுக்கல் வாங்கல் வரை அலைபேசிக்குள் சுருங்கி விட் டது. நம்மில் பெரும்பாலோர் நம்பகமான நண்பர்கள் இல்லாமல் தவிக்கிறார்கள்.

அடித்தால் தான் வலிக்கும் என்று அல்ல, நட்பில்  நடித்தாலும்  வலிக்கும்

நட்பில்  செய்யும்  தவறு :

செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக ஆதரிப்பதையே நல்ல நட்பு  என்று  பலர்  தவறாக  கருதுகிறார்கள்.

எனவேதான் இறைவன் இதை தவறு என்று இறைநூலில் கூறியுள்ளான்.

“…நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங் கள்! பாவத்திலம், பகைமையிலும் ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்ளா தீர்கள்!

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்  கடுமையாகத்  தண்டிப்பவன்.கு.5:2

பொதுவாக நல்ல நண்பர்களைப் பெறுதல் எளிதல்ல. அதற்கு காரணம் விட்டுக் கொடுத் தலும், சரியான புரிதலும் இல்லாததுமாகும். 

நல்ல நட்பு :

நல்ல நட்பு எதுவென்றால் அன்பு, புரிதல், மதித்தல், உதவி, அக்கரை, ஆறுதல், ஒளிவு மறைவின்மை ஆகும். அதற்காக பார்க்கின்ற வர்கள் அனைவரையும், அல்லது பேசுகின்ற அனைவரையும் நாம் நல்ல நண்பர்களாக்கி கொள்ளமுடியாது. அது தேவையும் அல்ல.

நட்பு தொடர நாம் யாரை விரும்புகி றோமோ அவருக்கும் நமக்கும் பொதுவான சில அம்சங்கள் இருந்தால்தான் நட்பு தொடரும். அவ்வாறு தொடர அவை மனப் பூர்வமாக விரும்புகிறீர்கள், நம்புகிறீர்கள் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளவேண்டும்.

இந்த உலகிலேயே நல்ல நட்புக்கு உதாரண மாக இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கும், அபூ பக்கர் சித்திக்(ரழி) அவர்களுக்கும் இருந்த தாகும். அதற்கு காரணம்; இருவருக்குள் இருந்த புரிதலும், மதித்தலும், நம்பிக்கையுமே ஆகும்.

நபி(ஸல்) அவர்களை அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்கள் எந்த அளவிற்கு நம்பினார்கள் என்பது வரலாற்றில் நடந்த மிகவும் முக்கிய மான நிகழ்வு.

நபி(ஸல்) அவர்கள்அல்அமீன்நம்பிக்கை யாளர் என்று அன்றைய தோழர்களும், உறவுகளும் நபியாக ஆவதற்கு முன்பு வரை நம்பத் தான் செய்தார்கள். அதனால் அன்று ஆதரித்தவர்கள் மட்டுமே உண்டு. எதிர்த்தவர்கள் யாருமே இல்லை. ஆனால் நபியான பின்பும், நபி(ஸல்) அவர்கள் மிஹ்ராஜ்(விண்வெளி) சம்பவத்தை வெளிப்படையாக பல தோழர்களிடம் சொன்ன பொழுதும்முஹம்மதுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதுஎன்று பலரும் பேச ஆரம்பித்தார்கள். அதுவரை நட்புடன் பழகிக் கொண்டிருந்த பல தோழர்களும் நபி(ஸல்) அவர்களை விட்டு விலக ஆரம்பித்தார்கள்.

(இஸ்லாம் மார்க்கத்தில் மக்காவில் நடந்த முதல் ய்ஷ்யிமிer சம்பவம் இது. அடுத்து மதினாவில் நடந்தகிப்லாசம்பவம் இதுபோல ஒவ்வொரு சம்பவத்தின் மூலமும் அன்றும், இன்றும் அல்லாஹ் முஸ்லிம்களை ய்ஷ்யிமிer செய்து கொண்டே இருக்கிறான்)

(இதைப் பற்றி இன்ஷா அல்லாஹ் தனி கட்டுரையில் காண்போம்)

ஆனால் மிஹ்ராஜ் சம்பவம் நடந்த அன்று அபூபக்கர் சித்திக்(ரழி) அவர்கள் மக்காவில் இல்லை. வியாபார வி­யமாக வெளியூர் சென்றிருந்தார்கள். மக்காவிற்கு திரும்பிய பொழுது மிஹ்ராஜ் சம்பவத்தை நபி(ஸல்) அவர்களின் எதிரிகள் அபூபக்கர் சித்திக்(ரழி) அவர்களிடம், “”உன் தோழருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதுஎன்று கேலியாகவும், கிண்டலாகவும் கூறினார்கள்.

அதுபொழுது சம்பவத்தை சொன்னது முஹம்மத் நபி(ஸல்) அவர்களா? என்று கேட்டார்கள். ஆம்! என்றார்கள் எதிரிகள்.

அதற்கு அபூபக்கர்(ரழி) அவர்கள் கூறிய பதில் என்ன தெரியுமா?

என் தோழர்(முஹம்மத்) ஒருபோதும் பொய் சொல்லமாட்டார். அவர் சொன்னது உண்மையாகத்தான் இருக்கும்என்றார்கள். இந்த நம்பிக்கைதன் நட்பின் இலக்கணமே.

அதுபோல் நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர் சித்திக்(ரழி) அவர்களை எந்த அளவிற்கு நம்பினார்கள் என்பதற்கு உதாரணம்.

இறைக்கட்டளைக்கு இணங்க மக்காவை விட்டு இரவோடு இரவாக மதீனா செல்லும் பொழுது பல தோழர்களும், உறவுகளும் இருந்தும் கூட அபூபக்கர் சித்திக்(ரழி) அவர்களை மட்டுமே தன்கூட நபி(ஸல்) அவர்கள் அழைத்து சென்றார்கள்.

இன்னும் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. (கட்டுரையின் சுருக்கத்தை கருதி விரிவாக எல்லாவற்றையும் எழுத முடியவில்லை)

எனவேதான் நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். “இவ்வுலகிலுள்ள எல்லா தோழர்களின் (ஈமானை) நம்பிக்கையை விட அபூபக்கர் சித்திக்(ரழி) அவர்களின் (ஈமானே) நம்பிக் கையே மேலானதுஎன்பதாக.

எனவே நல்ல நட்புக்கு நம்பிக்கையே முக்கியமானதும். அத்தகைய நல்ல நண்பர் களை தர இறைவன் ஒருவனே போதுமான வனாக  இருப்பான்.

Previous post:

Next post: