மனித நேயம் மலர! மத சின்னங்கள் புனிதமாகுமா?

in 2025 செப்டம்பர்

மனித நேயம் மலர! மத சின்னங்கள் புனிதமாகுமா?

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில்மத நல்லிணக்கம்என்பது மிக முக்கிய மானதாகும். ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்கள் நம்பக்கூடிய மத வழிபாட்டுத் தளங்களை புனிதமாக நம்புகின்றனர், மதிக்கின்றனர்.

அதில்  தவறு  ஒன்றுமில்லை,

அதுவே இரு மதத்தவர்கள் மத்தியில் கலவரம் நடக்கும்போது ஒருவர் மற்றவரின் மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அதன் விளைவு புனிதமாக மதிக்கக்கூடிய சில வழிபாட்டு தளங்கள் அவ மதிக்கும்போது தமது சொத்துக்களை விட, உயிரை விட பெரிதாக மதிப்பதால் எதிர் தாக் குதலில் இறங்குகிறார்கள். அல்லது சிலரால் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு மனித நேயம் மிக்க செயல்கள் அங்கே அரங்கேறுகின்றன.

இது மீடியாக்களுக்கு பரபரப்பான  செய்தியும் கூட, அதனால் அதில் நடக்காததையும் நடந்ததாக செய்திகள் சித்தரிக்கப்பட்டு உணர்ச்சிகள்  தூண்டப்படுகின்றன.

இதைப்பற்றி இறைவனின் வழிகாட்டி நூலான (குர்ஆனில்) என்ன கூறப்பட்டுள்ளது என்றால்;

“…. அல்லாஹ் (இறைவன்) மனிதர்களில் சிலரைக் கொண்டு வேறு சிலரைத் தடுத்துக் கொண்டிராவிடில்

மடங்களும்,

கிறிஸ்தவ  ஆலயங்களும்,

வழிப்பாட்டுத்  தளங்களும்,

அல்லாஹ்வின் பெயர் அதிகமாகக் கூறப்படும் பள்ளிவாசல்கள் ஆகியவையும் தகர்க்கப்பட்டிருக்கும்!

நிச்சயமாகத் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான். அல்லாஹ் வலிமை மிக்கவனும், யாவற்றையும் மிகைத்த வனுமாவான். (.கு. 22:40)

பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில்மத நல்லிணக்கம்ஏற்படுவதற்கு முக்கிய அறிவுரையாக மேற்கண்ட வசனம் இருக்கிறது. கோயில்களோ, சர்ச்சுகளோ அவற்றைத் தாக்கும்  உரிமை  எவருக்கும்  கிடையாது.

அதுபோல் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் இருக்கும் பள்ளிவாசல்களையும் தாக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என் பதையும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகவும்  இவ்வசனம்  இருக்கிறது.

அது மட்டுமல்ல மத நம்பிக்கையுள்ள பெரும்பாலான மனிதர்களிடம் அவரவர்கள் சார்ந்த சில சின்னங்களும் புனிதமாக மதிக்கப்படுவதால் சில சண்டைகளும், சச்சரவுகளும் ஆங்காங்கே  நடக்கின்றன.

இஸ்லாம் மதம் அல்ல, மார்க்கம் என்று தெரிந்தும் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்று பின்பற்றுபவர்கள் கூட மூட நம்பிக்கை உள்ளது.

அதாவதுபிறை நட்சத்திரம்ஸு இணைந்த ஒரு சின்னம் அல்லது “786′ என்ற எண் முஸ்லிம்களின் அடையாளமாகவும், புனிதமாகவும்  கருதப்படுகிறது.

இந்த நம்பிக்கை அனைத்தும் தவறானதும், அவைகள் புனிதமானதும் அல்ல, நிச்சயமாக இவைகள்  மூட நம்பிக்கையாகும்.

அதாவது சிலர் இஸ்லாமியர்களின் புனித சின்னமாக கருதப்படும் பிறை+நட்சத்திரம் விண்மீண் மண்டலத்திலுள்ள கோள்கள்  ஆகும்.

இந்த கோள்கள் உலக மக்கள் அனைவருக்குமானது. எனவே இது எப்படி இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தமானதாக இருக்க முடியும்.  ஒருபோதும்  இருக்கமுடியாது.

எவ்வாறு  என்றால்,

இது (இறை வழிகாட்டி நூல்/குர்ஆன்) உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய பொதுவானதோ அதுபோல் இறைவன் படைத்த இந்த கோள்களும் உலக மக்கள் அனைவருக்கும்  பொதுவானதாகும்.

இவ்வாறு இருக்க பிறை+நட்சத்திரம் புனிதமானதும் அல்ல, இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தமானதும் அல்ல. இத்தகைய மூட நம்பிக்கையிலிருந்து முஸ்லிம்கள் முதலில் விடுபட்டு முன்மாதிரியாக திகழவேண்டும். அப்பொழுதுதான் ஏனைய மதங்களில் புனிதமாக கருதப்படும் சின்னங்கள் தவறானது  என்பதை  நிரூபிக்க  முடியும்.

எவ்வாறு  என்றால்,

கடவுள் (இறைவன்) என்பவன் ஒருவரே! இது பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நம்பிக்கையும், உண்மையும் கூட. அவ்வாறு இருக்க பல சின்னங்கள் எப்படி புனிதமாக இருக்கமுடியும், ஒருபோதும் இருக்க முடியாது.

ஏன்  என்றால்,

இந்த சின்னங்கள் எல்லாம் மனிதர்களின் கற்பனையில் உருவானதே தவிர கடவுளிடமிருந்து வந்த சின்னங்களும் அல்ல, இறைத் தூதர்களால் வழிக்காட்டப்பட்டதும் அல்ல. உண்மை என்னவென்றால் தங்களையும், தங்கள் இல்லங்களையும், அவரவர்கள் வழிபடும் இடங்களை யும் அடையாளம் காட்டுவதற்காக மனித கற்பனையில் உருவாக்கப்பட்டவையே  ஆகும்.

உதாரணமாக ;

கிறிஸ்த்தவ மதத்தினர் நம்புகின்ற (+) சிலுவை சின்னம் என்பது ஏசுநாதரை (ஈஸா (அலை) அவர்களை) கொலை செய்து சிலுவையில் அறைந்தார்கள் (அந்த நாட்டில் தவறு செய்தவருக்கு தண்டனை கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கமாகும்) அப்போது ஏசுநாதர் இரண்டு நாள் மரண நிலையிலும், மூன்றாம் நாள் உயிர்ப்பித்தார் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றவையாகும்.

என்ன ஆச்சரியம் என்றால் ஒருவருக்கு (ஏசுநாதருக்கு) தண்டனை வழங்கப்பட்ட சிலுவைச் சின்னம் எப்படி புனிதமாகும். அதைப் பார்த்தால் உண்மையில் கிறிஸ்தவர்களுக்கு யூதர்கள் மீது வெறுப்பல்லவா வரவேண்டும். அது மட்டுமல்ல, கடவுளாக கருதப்பட்ட ஒருவரை எவ்வாறு மனிதர்களால் கொல்ல முடியும். (கடவுள் தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கமாட்டாரா? அவ்வளவு பலகீனமானவரா?  கடவுள்)

இதைப்பற்றி இறைநூல் (குர்ஆன்) என்ன சொல்கிறது  என்றால்,

“… அவரை(ஏசுவை) கொலை செய்யவும் இல்லை, அவரை (உண்மையான ஏசுவை) யூதர்கள் சிலுவையில் அறையவும் இல்லை…”  (.கு. 4:156,157)

இக்கட்டுரையின் சுருக்கம் கருதி இதன் விரிவான விளக்கம் தர இயலவில்லை. விரிவான விளக்கம் காண மேற்கண்ட (4:156,157) வசனம் இடம் பெற்றுள்ளதை குர்ஆனில் காணலாம்.

மேலும் சிலுவையில் அறையும் தண்டனை பற்றி குர்ஆன் வசனம் 5:33ல் காணலாம். அடுத்து உதாரணமாக இந்து மதத்தை  எடுத்துக்கொண்டால்; எண்ணிக்கையில் அடங்காத கடவுள்கள், கடவுள் உருவங்கள், அதுமட்டுமல்ல ஊருக்கு ஊர் கோயில்களின் தோற்றமும் பல்வேறு அமைப்பில் உள்ளது. இதில் எது புனிதமானது. புனிதமாக கருதப்பட்ட எத்தனை கோயில்கள், சர்ச்சுகள், பள்ளிவாசல்கள், சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது என்பதாலும், சாலை போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததாலும் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டது என்பதை நாம் கண் முன்னே கண்ட காட்சியும் கூட.

இத்தகைய காட்சிகள் (சின்னங்கள்) மனித கற்பனையில் உருவானதாக இருப்பதால்தான்,

மனித நேயம் வளராமல் மதவெறி வளர்கிறது 

எனவே இத்தகைய மூடநம்பிக்கையிலிருந்து அனைத்து மதத்தினரும் விடுபட வேண்டும்.

Previous post:

Next post: