விமர்சனம்!! விளக்கம்!!

in 2025 செப்டம்பர்

விமர்சனம்!! விளக்கம்!!

விமர்சனம் : ஆகஸ்ட் 2025 அந்நஜாத் மாத இதழ் பக்கம் 30ல்ஸலஃபிகளைபின்பற்றலாமா என்ற கேள்விக்கு குர்ஆன் சுன்னாவை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கூறிவிட்டு இறுதியில் நபித் தோழர்களின் நடைமுறைக்கு முன்னுரிமை கொடுப்பதே ஏற்புடையதாகும் என்று கூறி நழுவியுள்ளீர்கள்.

இது விசயத்தில் அந்நஜாத்தும் தடுமாற்றத்தில் உள்ளது என்கிறேன். விளக்கம் தரவும்.
M.
அபூநபீல், தேங்காய்பட்டணம்.

விளக்கம் : தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல நபிதோழர்களின் நடைமுறைக்கு முன்னுரிமை கொடுப்பதே ஏற்புடையதாகும் என்று நாம் ஐயம்தெளிவு பகுதியில் இறுதி பாராவில் குறிப்பிட்டுள்ள  வாசகம்  உண்மையே.

ஆயினும் அதே ஐயம்தெளிவு பகுதியில் பக்கம் 30ல் முதல் பத்தியில் இரண்டாவது பாராவில் ஸலஃபு கொள்கை உருவான காரணத்தையும் அது வளர்ந்த விதத்தையும் காட்டிவிட்டு, அவ்வாறு செய்வது கூடாது என்பதைப் பற்றி பக்கம் 31ல் முதல் பத்தியில்நபி தோழர்களை (ஸலஃபுகளை) நேரடியாக பின்பற்றச் சொல்லி ஒரே ஒரு ஆயத்தையோ, ஹதீதையோ காட்டமுடியாது என்பதை நாம் குறிப்பிட்டுள்ளதை தாங்கள் படித்தால் விளங்கலாம்.

அது மட்டுமல்ல அதே ஐயம்தெளிவு பகுதியில் பக்கம் 32ல் இரண்டாவது பத்தி கடைசி பாராவில் குர்ஆன்ஹதீத் தெளிவாக நேரடியாகக் கூறும் காரியங்களில், அதற்கு மாற்றமாக நபி தோழர்களில் யார் செயல்பட்டிருந்தாலும் அதை ஆதாரமாக நாம் எடுக்கக் கூடாது என்பதை உதாரணத்துடன் விளக்கியும் உள்ளோம். நேரடி ஆதாரம் இல்லாத விசயங்களில் இன்றைய புரோகித முல்லாக்களின் சுய விளக்கத்தை ஏற்பதை விட நபி தோழர்களின் (ஸலஃபுகளில்) நடைமுறைக்கு முன்னுரிமை கொடுப்பது ஏற்புடையதாகும் என்று தான் குறிப்பிட்டுள்ளோம். இதில் எந்த நழுவலும் இல்லை. எந்த தடுமாற்றமும் இல்லை.

Previous post:

Next post: