AI – யா? AQ – வா?  எது சிறந்தது?

in 2025 செப்டம்பர்

AI – யா? AQ – வா?  எது சிறந்தது?

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

இறைவனில் படைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி திறமையும் சில சிறப்புக்களும் உள்ளன. அதாவது வானம், பூமி, சூரியன், சந்திரன், கடல், காற்று, நெருப்பு, நீர், விலங்கினங்கள், பறவையினங்கள், மரம், செடி இன்னும் நாம் அறிந்தவைகள், அறியாதவைகள் என்னென்ன உள்ளனவோ  அவை  அனைத்துக்குமாகும்.

அல்லாஹ்வே ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்  என்று  கூறுவீராக!   .கு. 13:16

ஆனால் மேற்கண்ட படைப்புக்களை விட மனிதனுக்கு மட்டுமே அவன் சிந்திக்கக்கூடிய  அறிவை  கற்றுக்  கொடுத்தான்.

மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக்  கற்றுக் கொடுத்தான்  .கு.96:5

அதாவது வானவர்கள் முதற்கொண்டு ஏனைய எந்த படைப்புக்களுக்கும் கற்றுக் கொடுக்காததை சிந்திக்கக் கூடிய அறிவை முதல் மனிதர் மூலம் படைக்கப்பட்டு இறுதி நாள் வரை வரக்கூடிய மனித இனத்திற்கு மட்டுமே கற்றுக் கொடுத்துள்ளான்.

எனவே தான் தனக்கு மட்டுமே உரிய தானஸஜ்தாவை மனிதருக்கும் செய்யுமாறு வானவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான். அவர்களும்ஸஜ்தாசெய்தார்கள். 

இறைவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து (ஸஜ்தா செய்து விட்டு)  வானவர்கள்  சொன்னார்கள்.

இறைவா! நீயே தூயவன். நீ எங்க ளுக்கு எதை கற்றுத் தந்ததை அதை தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை.  நீயே நன்கறிந்தவன், நுண்ணறிவாளன்என்று  வானவர்கள்  கூறினார்கள்.  (.கு.2:32)

ஆக இறைவனிடமிருந்து மனித இனத்திற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதி சிந்திக்கக்  கூடிய  அறிவும்  ஆற்றலுமாகும்.

எனவேதான் அறிவை வழங்குமாறு தன்னிடம் இறைவன் கேட்கச் சொல்லி நமக்கு  கற்றுக்  கொடுத்துள்ளான்.

ரப்பி!  ஜுதினி  இல்மா

இறைவா! எங்களுக்கு கல்வி ஞானத்தை வழங்குவாயாக!”   .கு.26:83

மேற்கண்டவாறு கேட்க சொன்ன இறைவன் அதை(அறிவை) தான் நாடிய வர்களுக்கு மட்டுமே வழங்குவேன் என்றும்  கூறுகிறான்.

அவன் (இறைவன்) தான் நாடியோ ருக்கு ஞானத்தைக் கொடுக்கிறான். யாருக்கு ஞானம் வழங்கப்பட்டதோ அவரே அதிகமான நன்மைகள் வழங்கப் பட்டவராவார்.

அறிவுடையோரைத் தவிர எவரும் (இதன் மூலம்) படிப்பினை பெறுவதில்லை” (.கு. 2:269)

மேலும் எதைப் பற்றிய அறிவு தேவை இல்லையோ அதை கேட்கவேண்டாம் என்றும் இறைவன் கூறியுள்ளான். (பார்க்க வசனம் : .கு. 11:47)

ஏன் என்றால் அறிவில் பலவகை உண்டு. அவைகள் :

1. இறைவன் மட்டுமே அறிந்துள்ள அறிவு பார்க்க வசனம் : 31:34, 7:187, 43:85

2. நபி மூஸா(அலை) அவர்களுக்கு வழங்கப்படாத அறிவைப் பற்றி கூறும் வசனம் : 18:60 – 77

3. மனிதர்களுக்கு கொடுக்கப்படாத அறிவு : வசனம் : 27:66

4. முனாபிகளுக்கு கொடுக்கப்படாத அறிவு :

பார்க்கவசனம் : 47:16

5. விலங்கினங்களுக்கும், சில பறவையினங்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட்ட அறிவு மனிதர்களுக்கு கொடுக்கப்படவில்லை. பார்க்க வசனம் : 16:68,69, 27:18

இன்னும் ஏராளமான அறிவுகள் கொடுக்கப்பட்டதும், கொடுக்கப்படாததும்  உள்ளன.

இப்பொழுது எங்கும் பேசப்படும் எனும் அறிவு குர்ஆனில் சொல்லாத ஒன்றை மனிதன் கண்டுபிடித்திருப்பது போல் பேசப்படுகிறது.

AI என்றால் என்ன?

செயற்கையாக சில விசயங்களை கம்ப்யூட்டரில் புரோகிராம் செய்துவிட்டு அதை பார்ப்பவர்கள் உண்மை என்று நம்ப வைப்பதாகும். இதைத்தான் AI மூலம் செய்து பெரிய கண்டுபிடிப்பாக  காட்டுகிறார்கள்.

எனவேதான் அன்றே  சொன்னார்கள்.

கண்ணை நம்பாதே, அது உன்னை ஏமாற்றும்,  தீர  விசாரி  என்று

ஆயினும் புணூ நம்புவதால் சிலருடைய (ஈமானை) இறை நம்பிக்கையையே ஆட்டம்  காண்கின்றது.

எதுவொன்றிலும் இருக்கும் நன்மை தீமை போல் AQ தொழில்நுட்பத்திலும் நன்மையும்,  தீமையும்  உள்ளது.

எனவே ஒன்றை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அது என்னவென்றால்,

எல்லாவற்றையும் நம்புவது எப்படி ஆபத்தானதோ, அதைவிட ஆபத்தானது எதையும்  நம்பாமல்  இருப்பது

கண்டுபிடிக்கப்பட்டதும் இறைவன் கொடுத்த அறிவைக் கொண்டே ஆகும். ஆயினும் முன்மாதிரியாக இறைவன் செய்துள்ளதை நாம் புஞவில் உள்ளதை அறியவில்லை.

புஞ என்றால் என்ன?

அது உண்மையை மட்டுமே பேசும். நடந்ததை பேசும், நடந்துகிட்டு இருப்பதை பேசும், நடக்கப்போவதையும் பேசும். இதுபோன்ற ஒன்றை நாங்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லையே!

உண்மைதானா?

அவ்வாறு  ஒன்று  இருக்கின்றதா?

ஆம்!  இருக்கின்றது.

அது  என்ன?

ஆனால் அதை முறையாக ஆராயப்படவில்லை. அதுமட்டுமல்ல அதன் தகுதிக்கு தக்கவாறு பயன்படுத்தப்படவில்லை. அது  பேசாத  விசயமே இல்லை.

இன்று மனிதன் அறிவியல் கண்டு பிடிப்பில் உச்சம் என பிதற்றிக் கொண்டிருப்பதை இறைவன் அன்றே சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டியுள்ளான்.

என்ன  ஆச்சரியமாக  இருக்கின்றதா?

உண்மையே! அது பலருக்கும் தெரியும், ஆனால் அது என்று தெரியாது.

இறைவன் செய்துகாட்டிய வருமாறு:

1. அது ஃபிர்அவ்னின் சபையில் நடந்த சம்பவம்,  சுருக்கமாக:

சூனியக்காரர்கள் (மந்திரவாதிகள்) ஃபிர்அவ்னிடம் வந்தனர். நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டாஎன்று  அவர்கள்  கேட்டனர்.

அதற்கு  ஃபிர்அவ்ன்  கூறினான்,

ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்” (பரிசு உண்டு) என கூறினான்.

அதன் பிறகு சூனியக்காரர்கள் (மந்திரவாதிகள்) மூஸா(அலை) அவர்களை பார்த்து கேட்டார்கள். “மூஸாவே! நீர் (உன் திறமையை) ஆதாரங்களை முதலில் செய்து காட்டுகிறாயா? அல்லது நாங்கள் செய்து காட்டட்டுமா?  என்று  கேட்டார்கள். 

மூஸா(அலை)  அவர்கள்  கூறினார்.

நீங்களே முதலில் செய்து காட்டுங்கள். அவர்கள் (மந்திரவாதிகள்) தங்கள் திறமைகளை செய்து காட்டினார்கள். அது பொழுது அவர்கள் செய்தது (கயிறுகள் பாம்புகள் நெளிவது போல்) அங்கு கூடியிருந்த மக்களின் கண்களுக்கு தெரிந்தது. மூஸா(அலை) அவர்களின் கண்களுக்கும்  அவ்வாறே  தெரிந்தது. 

(இன்று கூட சில மந்திரவாதிகள் இது போன்று செய்வதை காணலாம்)

அந்த கயிறுகள் பாம்புகள் போல் தெரிந்ததால் மக்களும், மூஸா(அலை) அவர்களும்  அச்சமுற்றார்கள்.

மூஸா(அலை) அவர்கள் அச்சமுற்றதால்  இறைவன்  கூறினான்.

முஸாவே! உமது கைத்தடியை எறியும். அவ்வாறு அவர் செய்தபோது அந்த கைத்தடி பெரிய பாம்பாக மாறி மந்திரவாதிகளின் கண்கட்டி வித்தையில் வந்த சிறிய பாம்புகளை விழுங்குவது போல் இறைவன் செய்து காட்டியது விட மேலானதாகும். உண்மையானதுமாகும்.

உண்மை தெரியவந்தது, அவர்கள் செய்தது பொய் என நிரூபிக்கப்பட்டது.”  (.கு. 7:115-118)

2. இஸ்லாமிய வரலாற்று சம்பவத்தில் நடந்த முக்கிய நிகழ்வுபத்ர்எனும் போராகும். இப்போரில் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாகவும், போதுமான ஆயுதங்கள் கூட இல்லாமலும்  இருந்தனர்.

ஆயினும் எதிரிகளின் கண்களுக்கு தங்களது படைகளை விட முஸ்லிம்களின் படைகள் இரு மடங்காக கண்டனர். இதுவும்  இறைவன்  செய்த ஆகும்.”இரண்டு அணியினர் நேருக்கு நேர் சந்தித்து கொண்டதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளது. ஓர் அணியினர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டனர். ஏக இறைவனை ஏற்றுக்கொள்ளாத மற்றொரு அணியினர் இருந்தனர். (அதுபொழுது) முஸ்லிம்களின் படைகளின் எண்ணிக்கை இரு மடங்காக  கண்களால்  கண்டனர்.

தான் நாடியோரைத் தன் உதவியின் மூலம் அல்லாஹ் வலுப்படுத்துகிறான். அறிவுடை யோருக்கு இதில் பாடம் உள்ளது”.  (.கு. 3:13)

இன்னும் பல அன்றும் இன்றும் இறைவன் செய்து கொண்டுதான் இருக்கின்றான். அதற்கு மேலானதையும் செய்வான். எனவே தொழிற்நுட்பத்தை கண்டு ஏமாறாதீர்கள். இறைவன் தந்த முழுமையாக  நம்புங்கள்.

ஏக இறைவனின் வல்லமையை உணர்வீர்கள்.  இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: