அறிந்து கொள்வோம்!

in 2025 டிசம்பர்

அறிந்து கொள்வோம்!

ரஹிமுத்தீன்,  குண்டூர்

1. ஈமானின் அம்சங்கள் எத்தனை? அவை யாவை?

1. அல்லாஹ்வை நம்புவது, 2. மலக்குமார் களை நம்புவது, 3. இறைநூலை நம்புவது, 4. நபிமார்களை நம்புவது, 5. மறுமையை நம்புவது.        அல்குர்ஆன் 2:177

2. வானங்கள், பூமியுடைய சாவிகள் யாரிடம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?

தன்னிடம்இருப்பதாககூறுகிறான்.  அல்குர்ஆன் 42:12

3. பெண்களை விவாகரத்தை எந்த காலத்தில் செய்ய அல்லாஹ் கூறுகிறான்?

மாதவிடாய்இல்லாதகாலத்தில். அல்குர்ஆன் 65:1

4. அல்லாஹ் விரும்பினால் என்ன செய்வதாக  கூறுகிறான்?

காற்றுவீசாமல்நிறுத்திவிடுவதாககூறுகிறான். அல்குர்ஆன் 42:33

5. வானங்களை எவ்வாறு படைத்துள்ளதாக அல்லாஹ்  கூறுகிறான்?

தட்டுதட்டாக. (அடுக்கடுக்காக) படைத் துள்ளான். அல்குர்ஆன் 71:15

6. ஸபா நாட்டு இளவரசியின் சிம்மா சனத்தை சுலைமான் (அலை) அவர்களின் சபைக்கு கொண்டு வந்தது யார் என அல்லாஹ்  கூறுகிறான்?

வேதஞானம்பெற்றவர்கொண்டுவந்ததாகஅல்லாஹ்கூறுகிறான்.
அல்குர்ஆன் 27:40

7. நபி(ஸல்) அவர்களை எந்த நிலையில் அனுப்பியதாக  அல்லாஹ்  கூறுகிறான்?

அகிலத்தாருக்கும்அருட்கொடையாக.  அல்குர்ஆன் 21:107

8. சிறுமையடைந்த குரங்குகளாக மாற்றியது யாரை  என  அல்லாஹ்  கூறுகிறான்?

சனிக்கிழமைவரம்புமீறிமீன்பிடித்தவர்களை. அல்குர்ஆன் 2:65

9. மனிதனிடம் எந்த அளவுக்கு அருகில் இருப்பதாக அல்லாஹ்  கூறுகிறான்?

பிடரிநரம்பைவிடமிகஅருகில்.  அல்குர்ஆன் 50:16

10. மனிதர்களில் மிகச் சிறந்தவர் யார் என அல்லாஹ்  கூறுகிறான்?

நம்பிக்கைகொண்டுநல்லறம்புரிபவர்.  அல்குர்ஆன் 98:7

11. நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தா செய்த போது அவருடன் ஸஜ்தா செய்தவர்கள் யார் யார்?

அவருடன்அப்போதுஇருந்தமுஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள், ஜின்கள்.
புகாரி 1071

12. இறைவனின் அத்தாட்சிகளை பொய்ப் பிப்பவர்களை என்ன செய்வதாக அல்லாஹ்  கூறுகிறான்?

அவர்கள்அறியாதவாறுபடிப்படியாகப்பிடிப்பதாக  கூறுகிறான். அல்குர்ஆன் 7:182

13. எந்த அத்தியாயம் மக்காவிலும், மதினாவிலும்  அருளப்பட்டது?

ஸுரத்துல்நஹ்ல். அத்தியாயம் 16. 1-125 மக்காவிலும், 126-128 மதீனாவிலும்.

14. செல்வங்களும், பிள்ளைகளும் எதற்காக ஏற்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான்?

சோதனைக்காக.  அல்குர்ஆன் 64:15

15. யாருடன் அறப்போர் புரிய நமக்கு கட் டளையிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்?

நிராகரிப்பவர்கள், நயவஞ்சகர்கள்.  அல்குர்ஆன்  66:9

16. எந்த காரியமும் தகுதியற்றவரிடம் ஒப்படைக்கப்பட்டால் எதை எதிர்பாருங்கள் என நபி(ஸல்) கூறினார்கள்?

மறுமைநாளை. அபூஹுரைரா(ரழி), புகாரீ 59

17. அல்லாஹ் தூதர்களை யாரிடமிருந்து தேர்ந்தெடுப்பதாக  கூறுகிறான்?

மனிதர்களிடமிருந்தும், வானவர்களிடமிருந்தும். அல்குர்ஆன் 22:75

18. எந்த தொழுகை சாட்சி கூறத் தக்கதாக இருக்கும் என அல்லாஹ் கூறுகிறான்?

பஜ்ருடையதொழுகை.  அல்குர்ஆன் 17:78

19. யாரை பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?

நம்பிக்கைகொண்டோரை. அல்குர்ஆன் 22:38

20. பயபக்தியாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்  என  அல்லாஹ்  கூறுகிறான்?

செல்வநிலையிலும், வறிய நிலையிலும் நல்லறங்களில்  செலவு  செய்வார்கள்.
அல்குர்ஆன் 3:134

Previous post:

Next post: