அழியாத உடலும்! அழியாத ஞானமும்!
குர்ஆன் 50:4 மற்றும் கார்பன்-14 (Carbon Decay) கதிரியக்கக் குறைவு!
எஸ். ஹலரத் அலி, திருச்சி.
1991ஆம் ஆண்டு, ஆஸ்திரியா, இத்தாலி எல்லையில் உள்ள ஆல்ப்ஸ் பனி மலையின் 10,000 அடி உயரத்தில் உள்ள “ஓட்ஸி பள்ளத்தாக்கில்” ஒரு மனித உடல் கண்டெடுக்கப்பட்டது. அது ஓட்சி “பனி மனிதன்” என்று பெயரிடப்பட்டது. உடல் மக்கவில்லை, உக்கவில்லை, அரிக்கப்பட வில்லை. ஆனாலும் இறந்த மனிதனின் தோல், தசை, உறுப்புகள், உடை, கருவிகள் எல்லாம் 5,300 ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே அழியாமல் இருந்தன.
உடல் அழியாவிட்டாலும் அதன் மரண காலத்தை அறிய முடிந்தது எப்படி?
கார்பன் 14 கதிரியக்கக் குறைவு எனும் அறிவியல் ஆய்வு முறையால் கண்டுபிடிக்கப்பட்டது. இதே உண்மையை 1,400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் 50:4 வசனம் தெளிவாகக் கூறுகிறது.
(மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத் திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம். நம்மிடம் (யாவும் பதியப்பட்ட) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது. அல்குர்ஆன் 50:4
இந்தக் கட்டுரை, அறிவியல் கண்டுபிடிப்பையும் இறை வசனத்தையும் இணைத்து ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்த முயல்கிறது.
உடல் அழிந்தாலும், அழியாவிட்டாலும் அம்மனிதன் வாழ்ந்த காலத்தை நவீன அறிவியலில் அறிய முடியும். இதை மனிதன் அறியும்போது, இறைவனின் ஞானம் எத்துணை மகத்தானது என்பது புலப்படும்.
1. ஓட்சி பனி மனிதன் இறந்து 5,300 ஆண்டுகளுக்குப் பிறகும் உயிரோட்டமான அழியாத உடல்.
1991 செப்டம்பர் 19, ஆல்ப்ஸ் பனியில் இரு சுற்றுலாப் பயணிகள் ஒரு உடலை கண்டனர்.
ஆரம்பத்தில் 20ஆம் நூற்றாண்டு வாக்கில் எவராவது கொலை செய்திருப்பார்கள் என்று நினைத்தனர்.
ஆனால் ம்ஹிபு உடை, கருவிகள், தாவர மகரந்தங்கள் எல்லாம் கி.மு. 3300 காலத்தில் வாழ்ந்த மனிதன் என்பதை காட்டின. அதாவது இறந்து உறைந்த உடலானது 5300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் உடல் என்ற உண்மை புரிந்தது.
மைனஸ் 6OC பனியில் உறைந்ததால், உடல் உறுப்புகள் அழியாமல், மக்காமல் அப்படியே உறைந்து இருந்தது. இது இயற்கையின் ஃப்ரீஸர் போன்றது.
ஆனால் காலத்தை எப்படி துல்லியமாக கணித்தார்கள்?
உடல் அழியவில்லை என்பதால் அல்ல. கார்பன் 14 சிதைவினால் (Carbon-14 Isotope Decay)
கார்பன் 14 அழியாத கடிகாரம்!
உயிருள்ள உயிரினங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் 14(C-14)ஐ உணவு மூலம் உறிஞ்சுகின்றன.
உயிர் இறந்தவுடன் C-14 கதிரியக்க சிதைவு (Radioactive Decay) தொடங்குகிறது.
அரை ஆயுள் (Half Life) : 5,730 ஆண்டுகள் 5,730 ஆண்டுகளில் பாதி C-14 அழியும்.
“ஓட்சி பனி மனிதனின்” உடலில் கார்பன் ளீ-14 அளவு வளிமண்டலத்துடன் ஒப்பிடப்பட்டது. மீதமுள்ள C-14 கி.மு. 3300 (நூ100 ஆண்டுகள். துல்லியம் நூ50 ஆண்டுகள் வரை) ஆண்டுகளை காட்டின கி.மு. 3300+கி.பி.2000 ஓட்ஸி பனி மனிதன் 5300 ஆண்டுகளுக்கு முன் இறந்ததை அவ்வுடலில் குறைந்திருந்த கார்பன் அணுக்கள் எடுத்துக்காட்டின. உடல் மக்கினாலும், எரிந்தாலும், கரைந்தாலும் C-14 சிதைவு தொடரும். அது நிற்காது.
குர்ஆன் 50:4 : அழிவு சாரா ஞானம்.
“நாம் அவர்கள் உடலிலிருந்து எந்தளவு குறைந்திருக்கின்றது என்பதை திட்டமாக அறிவோம்!”
வசனத்தின் ஆழம் :
“இறந்த உடல் எந்தளவு குறைந்திருக்கிறது” என்று அல்லாஹ் அறிந்த ஞானம்.
உடல் மக்கியது, அழிந்தது, எரிந்தது, உறைந்தது, காணாமல் போனது, ஆனால் இறைவன் எத்தனை பேர், எந்நேரம் இறந்தார் கள் என்பதை அறிவேன் என்று அல்லாஹ் கூறுகிறான். அளவீடு தேவையில்லை C-14 போல அரை ஆயுள் கணக்கு இல்லை. அல்லாஹ்வின் இறை ஞானம் முழுமையானது, தவறாதது, நிரந்தரமானது.
அறிவியலும் இறைவசனமும் ஒரு இணக்கம்:
மனித அறிவியல் C-14
இறை ஞானம் (50:4)
மனிதன் ஒரு உடலை 5,300 ஆண்டுகளுக்குப் பிறகு அடையாளம் காணும்போது, இறைவன், ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு நொடியையும் என்றும் அறிந்தவன் என்பது உறுதி.
முடிவுரை :
ஓட்சியின் உடல் பனியில் உறைந்தது. ஆனால் அதன் காலம் உறையவில்லை. C-14 சிதைவு அதை வெளிப்படுத்தியது. குர்ஆன் 50:4 உடல் அழிந்தாலும், அழியாவிட்டாலும், இறைவன் எல்லாவற்றையும் அறிவான் என்று 1,400 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தது. இது அறிவியலின் வியப்பு அல்ல இறைவனின் அறிவின் சாட்சி. “அல்லாஹ் அறிந்தவற்றை மனிதன் அறியமாட்டான்” ஆனால் அறியத் தொடங்கும்போது… அவன் படைத்தவனின் மகத்துவம் புலப்படும். அல்ஹம்துலில்லாஹ்.