சுவை எனும் நஞ்சு!
அ. நஜ்முத்தீன்
சமீப காலமாக உணவு வணிகமும் (RESTARENT) மற்றும் உணவகங்களில் சாப்பிடுவதும் பெருகிவிட்டது. முன்பெல்லாம் பெரும் நகரங்களில் வசிக்கக்கூடியவர்களிடம் மட்டுமே இருந்த இந்த பழக்கம் இப்போது கிராமங்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உணவு வணிகம் பெருகிவிட்டது. மேலும் உலகிலுள்ள அனைத்து வகையான பெரும்பாலான உணவுகளும் தமிழகத்தில் உணவகங்களில் கிடைக்கிறது.
முன்பெல்லாம் (70s,80s,90s) காலத்தில் வாழ்ந்தவர்களால் சுவை இல்லாத, ஆரோக்கியத்திற்கு கேடான, மற்றும் சுகாதார முறைப்படி செய்யப்படாத உணவுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இப்போது பிளாட்பாரம் முதல் ஏர்போர்ட் வரை அந்நிய உணவுகளுக்கு தமிழக மக்கள் அடிமையாகிவிட்டார்கள்.
எவ்வாறு தமிழர்கள் அந்நிய மொழிக்கு அடிமையானார்களோ அதைவிட பலமடங்கு அந்நிய உணவுகளுக்கு அடிமையாகிவிட்டார்கள்.
தாய்(தமிழ்) மொழி அழிந்தால் கூட காப்பாற்றி விடலாம். அந்நிய உணவால் தமிழ் இனம், தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் மறைமுகமாக அழிந்துகொண்டிருக்கிறது.
மனிதர்கள் எதையாவது தின்றுகொண்டே இருக்கவேண்டும் என்று எழுதப்பட்டுவிட்டதா? மேலும் ஊரில் பெரும்பாலோருக்கு பல் இல்லை என முடிவு செய்துவிட்டார்களா? என்று தெரியவில்லை.
எங்கு பார்த்தாலும் வட இந்திய, சைனிஷ் வகை உணவுகள் பெருகிவிட்டன.
தமிழர் களின் பாரம்பரிய உணவான சோறு, இட்லி, தோசை, பொங்கல் போன்றவை ஏளன உணவு பொருட்களாகப் பார்க்கப்படுகிறது.
மாறாக பிரைட் ரைஸ் சவ(ம்)ர்மா, நூடுல்ஸ், பர்கர், பீஸா, பாஸ்தா, சான்ட்விச், பாணிபூரி, சாப்பிடுவது நாகரீகமாக பார்க்கப்படுகிறது. இந்த கலாச்சாரம் பெருகினால் சுமார் 10 வருடங்களுக்குள் ஊரெங்கும் மருத்துவமனைகள் இப்போது இருப்பதை விட பல மடங்கு பெருகிவிடும்.
பெண்கள் இளம் வயதிலேயே பூ பெய்தல், இளைஞர்கள் மாரடைப்பால் மரணம், குழந்தைகள் அளவுக்கு மீறிய உடல் பருமனா குதல், சுமார் 40 வயதிற்குள்ளேயே சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி இன்னும் பெயர் தெரியாத நோய்கள் புதிதுபுதிதாக பெருகும். இது நிச்சயம் நடக்கும்.
மேலும் இந்த அந்நிய உணவுகளை நின்று கொண்டே சாப்பிடுவதும், இருட்டு அறையில் (போதுமான வெளிச்சம் இல்லாத இடத்தில்) சாப்பிடுவதும் நாகரிகமாக ஆகிவிட்டது.
ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்; அறு சுவையான உணவாக இருந்தாலும் அடுத்த நாள் மலம் ஆகிவிடவேண்டும். ஆனால் இந்த நஞ்சுகள் அவ்வாறு ஆகுவது இல்லை. உடலிலேயே தங்கி பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. சிறிது சிறிதாக கொல்லும்.
இதற்கு காரணம்: இப்போது பசியை விட ருசிக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
உணவு உற்பத்திகளும், உணவு முறைகளும் அந்தந்த நில சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி உருவாக்கப்பட்டது, உண்ணப்பட்டது. ஆனால் இப்போது மனிதர்களின் மரபணுவைச் சிதைக்கும் அளவிற்கு உணவு முறை மாறிவிட்டது.
முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரங்களிலும், வீட்டுக்கு வந்து சமைக்க நேரம் இல்லாத காரணத்தினாலும் வெளியே உண வருந்தும் பழக்கம் எப்போதாவது இருந்தது.
இப்போது ஆர்டர் செய்தால் Swiggy, Zomoto மூலம் வீட்டுக்கு வந்துவிடும். வெளியே செல்ல தேவையில்லை. எல்லாமே துரித உணவு (Fast Food) இப்போது நோய்களும் துரிதமாக பெருகிறது.
அதாவது அதிகப்படியான டால்டா மற்றும் கலப்படம். மேலும் சுகாதார குறைவு, சுகாதார முறையில் செய்யப்படாததும். பணியாளர்களின் கவனக்குறைவு இவை எல்லாம் சேர்ந்து நஞ்சாக மாறிவருகிறது.
சுவை எனும் நஞ்சிலிருந்து வெளியேறி பசி எனும் இயல்புக்கு மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும்.
சுவைகள் நான்கு வகைப்படும் :
1. இனிப்பு (Sweet), 2. புளிப்பு (Sour), 3. உப்பு (Salt), 4. கசப்பு (Biller)
உணவின் உண்மையான சுவை எது தெரியுமா?
சரியான அளவில் (சமஅளவில்) இருப்பதே சுவையான உணவு. எதை மூக்கும் நாக்கும் உணர்கிறதோ அதுவே சுவையான உணவாகும். சுவையான உணவு சுமார் 70% சதவீதம் மனத்திலிருந்து (வாசனை) வருவதாகும்.
(மூக்கு அடைத்தால் சுவை குறைந்துவிடும். அதனால்தான் காய்ச்சலான நேரங்களில் சுவை குறைகிறது)
உணவு முறை :
3ல் ஒரு பகுதி உணவு, 3ல் ஒரு பகுதி தண்ணீர், 3ல் ஒரு பகுதி காற்று இதுவே ஆரோக்கியத்தின் ரகசியம். மற்றும் இஸ்லாம் கூறும் உணவு முறையாகும்
உணவிற்காகச் செய்யும் செலவுகளை நாம் குறை சொல்லவில்லை. யாரும் அவ்வாறு கருதுவதில்லை. ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள் என்று தான் இறைவன் இறைநூலில் கூறுகிறான்.
“நிச்சயமாக வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்” (அல்குர்ஆன் 17:27)
நாம் மேலே குறிப்பிட்டுள்ள அந்நிய உணவுகள் தடை செய்யப்பட்ட உணவு அல்ல. ஆனால் தவிர்த்துக் கொள்ளலாம்
இறைவனும் இறைநூலில் தூய்மையானவற்றை உண்ணுங்கள் என்று கூறுவதன் நோக்கம் ஆரோக்கியத்திற்கு கேடு தரக்கூடியதை தவிர்க்க வேண்டும் என்பதாகும்.
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்ட நல்லவற்றை உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168)