வாழ்க்கை ஒரு போராட்டமா?

in 2025 டிசம்பர்

வாழ்க்கை ஒரு போராட்டமா?

. நஜ்முத்தீன்

அல்லாஹ் உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் அமைதியையும், அருளையும் பொழியட்டும். 

அன்பிற்கினிய  அந்நஜாத்  வாசகர்களே!

இக்கட்டுரையின் வாயிலாக பேசப்போகும் தலைப்பு : ஒவ்வொருவரின் உள்ளத்திலும்  ஒலிக்கும்  ஒரு  கேள்வி :

வாழ்க்கை  ஒரு  போராட்டமா?

அதாவது  வாழ்க்கை  என்பது,

PRESSURE…?  மன அழுத்தமா)

PLEASER…?    பிளெசரா? மன மகிழ்ச்சியா)

இதை ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படும் போது இரண்டுக்கும் பெரிய வேறுபாடு தெரியும்.  வாழ்க்கையும்  அதுபோலவே.

அதாவது வெற்றி    தோல்வி

இன்பம்  துன்பம்

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.’  அல்குர்ஆன் 94:5

இவைகள் அனைத்தும் கலந்த ஒரு பயணம். இந்த பூமி மலர்களால் மட்டும் நிரம்பிய பாதை அல்ல, மாறாக முட்கள் நிறைந்ததும் ஆகும். கனவுகள் கூட கை கூடாது போகவும் கூடும். கனவுகள் பலவிதம். நாம் ஒவ்வொரு வரும் எதையாவது அடைய போராடிக் கொண்டிருக்கிறோம்.

சிலர்  கல்விக்காக,

சிலர்  குடும்பத்திற்காக,

சிலர்  பொருளுக்காக,

சிலர்  பதவிக்காக

இவைகள் அடைய ஒவ்வொன்றும் ஒரு பாடத்தை  கற்று  தருகிறது.

விழும்போது  ஒரு  பாடம்,

எழும்போது  ஒரு  பாடம்.

ஒரு விதை மண்ணுக்குள் புதையாமல் மரமாக  முடியுமா?

அதுபோல சோதனைகளும், சாதனைகளும்  நம்மை  உயர்த்துகிறது,  உயர்த்தும்.

போராடும் மனிதன்தான் உண்மையில் வாழ்கிறான். போராட்டமே நம்மை வடிவமைக்கிறது. எனவேதான் இறைவன் சொல்கிறான். ஒவ்வொரு மனிதனையும் ஆண்டுக்கு ஒருமுறையோ, இரு முறையோ சோதிப்பேன் என்கிறான்.

ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தாங்கள் சோதிக்கப் படுவதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? (அதன்) பிறகும் அவர்கள் பாவமன்னிப்புக் கோருவதுமில்லை, படிப்பினை பெறுவதுமில்லை”.  அல்குர்ஆன் 9:126

மேற்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் சொல்ல  வருவது.

இரவும், பகலும் நீடிக்காது, மாறும், மாறிக் கொண்டே இருக்கும். அதுபோல் எந்த இன்பமும், துன்பமும் நீடிக்காது. மாறும், மாறிக் கொண்டே இருக்கும்.

ஏன்  என்றால்,

இந்த பூமி, “வாடகை வீடுஇதில் உண்ண லாம், உடுத்தலாம், தங்கலாம், பயணம் செய்யலாம். ஆனால் இதற்கு உரிமை கொண்டாட முடியாது. அதாவதுஇது இறைவன் தந்த வீடுஇங்கு வீட்டில் வாழ்வோரும் உண்டு,  வீதியில்  வாழ்வோரும் உண்டு. 

அது PRESSURE…?  ஆகவும்  இருக்கலாம்.

PLEASER…?   மன மகிழ்ச்சியா?  ஆகவும்  இருக்கலாம்.

அவரவர்கள் செய்கின்ற முயற்சியைப் பொறுத்து. அது மட்டுமல்ல, “இவ்வுலக வாழ்வு ஒரு சிறைச்சாலை  நாம் அதில் வாழும் கைதிகள்.

கைதிகள் எப்போதும் சிறைசாலை சட்டத்திற்கு  உட்பட்டு  நடக்கவேண்டும்.

சட்டதிட்டங்களுக்கு மாறாக நடந்தால் GOOD CONDUCT CERTIFICATE (Charactor Certificate) கிடைக்காது. வெளியில் வரமுடியாது. அதாவது ஒருவரின் நல்ல ஒழுக்கமும், நல்ல குண நலமும், நற்செயலின் மூலம் நிரூபிக்கப்பட  வேண்டும். 

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்.

இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச் சாலையாகும்; இறை மறுப்பாளர் களுக்குச்  சொர்க்க  சோலையாகும்    நூல்: முஸ்லிம் : 5663

எனவே சிறைச்சாலை எனும் பூமியில் வாழ்ந்து நல்லொழுக்கம் என்ற நற்சான்றிதழ் பெற்றோமானால் மறுமை எனும் பூஞ்சோலை சொர்க்க  சோலையாக  இருக்கும்.

Previous post:

Next post: