S I R – (SLAVE INDIAN RESIDENT)

in 2025 டிசம்பர்

தலையங்கம் :
S I R – (SLAVE INDIAN RESIDENT)

SIR என்பது பல்வேறு இடங்களில், பல்வேறு பொருளில் அழைக்கப்படுகிறது. அதாவது மரியாதை சொல்லாக SIR ஆசிரியர், அதிகாரி, பெரியவர் அல்லது மரியாதைக்குரிய நபரை அழைக்கும்போது பயன்படுத்தப்படும் ஆங்கிலச்  சொல்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் SIR என்று ஆங்கிலேயர்களை அழைப்பதற்கு சில மறைமுகமான அர்த்தங்களும் இருந்தன. அதாவது ஆங்கிலேயர்கள் மேன்மையானவர்கள், மதிப்பிற்குரியவர் கள் என்றும் இந்தியர்கள் மதிப்பு குறைவானவர்கள் என்றும் நம்ப வைப்பதற்காக இந்த SIR வார்த்தையை பயன்பாட்டுக்கு  கொண்டுவந்தார்கள். 

அதற்கு மறைமுகமான அர்த்தம் SLAVE INDIAN  RESIDENT என்பதாகும். 

அதன் விளக்கம் : அடிமைப்படுத்தப்பட்ட இந்திய  குடியிருப்பாளர்  ஆகும்.

அதாவது இந்தியர்களாகிய நீங்கள் எங்களுக்கு அடிமை என்பதை மறக்கக்கூடாது என்பதற்காக ஆங்கிலேயர்களால்  புழக்கத்திற்கு  கொண்டுவரப்பட்ட   வார்த்தை  ஆகும்.

(பொதுவாக SIR என்ற வார்த்தையை தவிர்ப்பது  நல்லது)

இந்த SIR என்பது வேறு சில இடங்களில் எவ்வாறு உபயோகப்படுத்துகிறார்கள் என்று  பார்ப்போம்.

மிகப்பெரிய விற்பனை நிறுவனங்களில் SIR என்பதை SALES INFORMATION REPORT என்றும் சில முக்கியமான சம்பவங்களை குறிப்பதற்காக  பயன்படுத்துவார்கள்.

இன்னும்  இதுபோன்று  பல  உள்ளன.

இப்போது பேசு பொருளாக இருக்கும் SIR என்பது SPECIAL INTENSIVE REVISION என்ற பொருளில் தேர்தல் கமிசனால் அழைக்கப்படுகிறது.

அதாவது தேர்தல் நடைபெறப் போகும் / நடைபெறும் இடங்களில் வாக்காளர்கள் விபரங்கள் அடங்கிய அறிக்கையை பற்றிய விபரமாகும்.

இதில் (SIR–ல்) வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஆண், பெண், மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் எவ்வளவு உள்ளனர் என்ற  விபரம்  இருக்கும்.

இந்த SIR- Returning Officer (RO), District Election Officer (DEO) Election Commissioner (EC)                                                        ஆகியவர்கள் கொண்ட குழு (இந்த றீணூயூஐ) தயாரிக்கும். இதுவே தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான அறிக்கையாகும். இதன் அடிப்படையில்தான் வாக்காளர் அடையாள அட்டை (VOTER ID) வழங்கப்படும்.

இந்த கணக்கெடுப்பு 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் முதலில் ஆரம்பமானது. பிறகு கம்ப்யூட்டர் (Computer) பயன்பாட்டிற்கு வந்ததும் இதுவே நிலையான (Standardized) என்ற  அறிக்கையாக  தயாரானது.

சுமார் 2010ஆம் ஆண்டு முதல் EVM, VVPAT பயன்பாட்டிற்கு வந்ததும். இதுவே வாக்காளர்களின் எண்ணிக்கையாகவும், வாக்காளர்களை கண்காணிக்கவும் (ஓட்டு போட்டவர்கள், ஓட்டு போடாதவர்கள்) பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த SIR என்பது புதிது ஒன்றும் அல்ல. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து  வருவதுதான்.

ஆனால் இந்த SIR என்னவாக மாறியது என்றால் ஆட்சியாளர்களின் ஆசைக்கு இணங்க றீணூயூஐ தயார் செய்யும் அதிகாரிகள் மாறியதால் அதன்மீது நம்பிக்கை குறைந்து விட்டது. இதற்கு உதாரணம்: பீகார் மாநிலத்தில் பல லட்சம் வாக்காளர்களை SIR மூலம் நீக்கியதாகும். இது முறையான செயலும் அல்ல. அந்த அறிக்கை சரியானதும் அல்ல. தெரிந்தே செய்யப்பட்ட தவறான  புள்ளி  விபரமாகும்.

எனவே SIR வேண்டுமா? வேண்டாமா? என்ற  கேள்வி  எழுகிறது.

முன்பெல்லாம் வாக்காளர்கள் பெயர் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் ஆர்வமாக இருந்த தேர்தல் கமிசன் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. அதுவே இன்று பாதகமாக மாறியது. அதாவது ஒரே நபரின் பெயர் பல்வேறு இடங்களில் வாக்காளர்களாக  பதிவாகியுள்ளது.

இதில் ஒரு முறைக்கு மேல் இடம் பெற்ற வாக்காளர் பெயரை நீக்கினால்தான் மிக சரியான றீணூயூ அறிக்கையை தரமுடியும். அதற்கு ஆதார் கார்டுடன் இணைத்தால் போதும். ஆயினும் ஒன்றிய ஆட்சியாளர்கள் மீதும், தேர்தல் கமிசன் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. இதுவும் ஓரளவு  உண்மை  கூட.

பாமர மக்கள் (படிப்பறிவு குறைவான மக்கள்) அதிகமான உள்ள நம் நாட்டில் மக்களுக்கும்  றீணூயூ  மீது  அச்சம்  நிலவுகிறது. 

மேலும்,  ராமன்  ஆண்டால்  என்ன?

ராவணன்  ஆண்டால்  என்ன?

என்ற மனப்பான்மையும் நிலவுகிறது. அது மட்டுமல்ல சுமார் 40 சதவிகிதத்தினர் வாக்களிப்பதும்  இல்லை.

இது போன்ற தவறுகள் எல்லாம் களைய தேர்தல் கமி­ன் மிக சரியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே. SIR என்பது உண்மையான மதிப்பிற்குரிய அறிக்கையாக இருக்கும்.

எவ்வாறு என்றால்; ஒரே நபரின் பெயர் பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டதை கண்டறிந்து அந்த தவறை சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு சுட்டிக்காட்டி, இதில் எது சரியானது என்பதை தெரிவிக்குமாறு தகவல் அளிக்க வேண்டும். வாக்காளர்களும் இதற்கு உண்மையாக ஒத்துழைக்க  வேண்டும்.

அதுவரை SIR மதிப்பு மிக்கதாக இருக்காது. SLAVE INDIAN RESIDENT (அடிமைப்படுத்தப்பட்ட இந்திய குடியாளர் போல் தான்  இருக்கும்).

தேர்தல் கமிசன் மீது குற்றம் சொல்கிற அரசியல்  கட்சிகளுக்கு…..

சந்தேகத்திற்கிடமான EVM தேர்தலை புறக்கணிக்கிறோம்என்று சொல்ல தைரியம் இல்லை. அதாவது EVM வேண்டாம் என்று சொல்ல தைரியம் இல்லை. அல்லது VVPAT மூலம் அனைத்து வாக்காளர்களுக்கும் எந்த சின்னத்தில் தன் ஓட்டு பதிவாகி உள்ளது என்று அறியும் உரிமையை வழங்குமாறு தேர்தல் கமிசனை கேட்க தைரியம் இல்லை.

தேர்தல் கமிசனை எதிர்த்து ஒரு பேரணி, சாலை மறியல், ஆர்ப்பாட்டம், அடையாள உண்ணாவிரதம் கண்டன பொதுக்கூட்டம் என நடத்திவிட்டு திருப்தி அடைக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் வரை தேர்தல் கமிசனின் செயல்பாட்டை ஒருபோதும் சரிசெய்ய  முடியாது.

தேர்தல் கமிசன் எதிர்கட்சிகளை கால்களை ஊனப்படுத்திவிட்டு பிறகு தானே ஓட்டப்பந்தயமே (தேர்தலை) வைக்கிறார்கள்.

நேர்மையான தேர்தல் ஆணையம் செயல்படாமல் நியாயமாக தேர்தல் முடிவுகள்  வெறும்  கானல்  நீரே!

Previous post:

Next post: