அறிந்து கொள்வோம்!

in 2026 ஜனவரி

அறிந்து கொள்வோம்!

ரஹிமுத்தீன்,  குண்டூர்

1. மலக்குகள் இறைவனின் புகழைக் கொண்டு  என்ன  தேடுகின்றனர்?

உலகில்உள்ளவர்களுக்காகதஸ்பீஹ்செய்துமன்னிப்புதேடுகின்றனர். .கு. 42:5

2. தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு எதைக் காட்டுவதாக  அல்லாஹ்  கூறுகிறான்?

நேர்வழி.    அல்குர்ஆன் 42:13

3. யாருக்கு பாதுகாவலர்களோ, உதவி புரிபவர்களோ இல்லை என அல்லாஹ் கூறுகிறான்?

அநியாயக்காரர்களுக்கு.  அல்குர்ஆன் 42:8

4. ஹுத்ஹுத் பறவை எந்த நாட்டில் பெண் ஆட்சி செய்வதாக சுலைமான்(அலை) அவர்களிடம்  கூறியது  யார்?

ஸபாநாடு.   அல்குர்ஆன் 27:22,23

5. நபி(ஸல்) அவர்களுக்கு நோவினை செய்பவர்களை அல்லாஹ் எவ்வாறு எச்சரிக்கிறான்?

நோவினைதரும்வேதனையைதருவேன். அல்குர்ஆன் 9:61

6. நயவஞ்சகர்களை எத்தகைய உதாரணத்தை  அல்லாஹ்  கூறுகிறான்?

ஷைத்தானை  போன்றவர்கள்.    அல்குர்ஆன் 59:16

7. பொறுமையாளர்களுக்கு எத்தனை முறை கூலி தரப்படும் என அல்லாஹ் கூறுகிறான்?

இரு  தடவை.   அல்குர்ஆன் 28:54

8. நபி(ஸல்) அவர்களின் பொறுப்பு பற்றி அல்லாஹ்  கூறுவதென்ன?

எடுத்துரைப்பது  மட்டுமே.      .கு. 5:45

9. சூரிய கிரகணம் ஏற்பட்டபோது தனக்கு எது காட்டப்பட்டது என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

நரகம்.  புகாரி 431

10. யாருக்காக சுட்டெரிக்கும் நரகத்தை தயார் செய்து வைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?

இறைநிராகரிப்பாளர்களுக்கு.  .கு. 33:64

11. எது என் கோபத்தை மிகைத்துவிட்டது என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

என்  கருணை.  புகாரி : 3194

12. அறிவில்லாதவர்களில் அதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிய நபி யார்  என  அல்லாஹ்  கூறுகிறான்?

மூஸா(அலை) அவர்கள். அல்குர்ஆன் 2:67

13. அல்லாஹ் என்னை நேர்வழியில் செலுத்துவான்  என  கூறிய  நபி  யார்?

நபிஇப்ராஹீம்(அலை) அல்குர்ஆன் 37:99

14. மறுமைக்கான அடையாளமாக உள்ள நபி யார்?

ஈஸா(அலை) அவர்கள். அல்குர்ஆன் 43:61

15. எவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள் என  அல்லாஹ்  கூறுகிறான்?

நற்பாக்கியம்பெற்றவர்கள்.  .கு. 11:108

16. இஸ்ராயிலின் சந்ததிகளில் நிராகரித் தோரை  சபித்த  நபிகள்  யார்  யார்?

தாவூத்(அலை), ஈஸா(அலை)     .கு. 5:78

17. நம்பிக்கையாளர்கள் வேறு வீடுகளுக்கு செல்லும்போது இதனை செய்யாமல் உள்ளே நுழையாதீர் என அல்லாஹ் கூறுகிறான்?

அனுமதிமற்றும்ஸலாம்கூறாமல். அல்குர்ஆன்  24:27

18. மலக்குகளுக்கு பெண்களின் பெயரை சூட்டுபவர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்? 

மறுமையைநம்பாதவர்கள்.    .கு. 53:27

19. யாருடைய ஜனாஸாவிற்கு வானவர்கள் தங்கள் இறக்கைகளால் நிழலை ஏற்படுத்தி னார்கள்? 

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரழி) அவர்களின்  தந்தையின்  ஜனாஸாவுக்கு. புகாரி : 1244

20. பகடைக்காய் ஆட்டம் (நர்தசிர்) விளையாடியவரின் நிலை பற்றி நபி(ஸல்) அவர்கள்  எவ்வாறு  கூறினார்கள்?

பன்றி இறைச்சியிலும், இரத்தத்திலும் தமது  கையை  தோய்த்தவராவர்.  முஸ்லிம் 4549

Previous post:

Next post: