அறிந்து கொள்வோம்!
ரஹிமுத்தீன், குண்டூர்
1. இணை வைத்து வணங்குபவர்களை என்ன செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
புறக்கணித்திடவேண்டும். அ.கு. 15:94
2. வெளி உலகுக்கு யார் இஸ்லாமை தழுவியபோது தெரிய வந்தது?
உமர்(ரழி) அவர்கள். ஆதாரம்:நூல் முஹம்மது, பக்கம் 136
3. அல்ஃபாருக் என்றால் என்ன?
உண்மைக்கும், பொய்யுக்குமிடையில் வித்தியாசத்தை ஏற்படுத்துபவர்.
ஆதாரம்: நூல் முஹம்மது, பக்கம் 136
4. ஜின்களில் காஃபிர்கள் என்ற வாழ்க்கை முறை உள்ளதா?
ஆம்! ஆதாரம் முஹம்மது, பக்கம் 137
5. நபி(ஸல்) அவர்கள் வானுலக பயணம் செல்ல பயன்படுத்திய வாகனம் எது?
“”புராக்” ஆதாரம் : நூல் முஹம்மது, பக்கம் 179
6. பாலஸ்தீனத்தில் குதுஸ் என்ற நகரில் உள்ள பள்ளிவாசல் எது?
அல்மஸ்ஜிதுல்அக்ஸா. ஆதாரம்: நூல் முஹம்மது, பக்கம் 23
7. பிஃர் மஊனா என்றால் என்ன?
அஸம்பாவிதம். பக்கம் 356
8. கடுமையான பசி பட்டினிக்கு ஆளாகி இருந்தும் முஸ்லிம்கள் எதற்காக சுறுசுறுப்பாக இருந்தார்கள்?
அகழ்தோண்டுவதற்காக. ஆதாரம்: முஹம்மது என்ற நூலில் பக்கம் 371
9. உலகில் நற்செய்தி கூறுபவராகவும், அச்ச மூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பப்பட்ட நபி யார்?
முஹம்மதுநபி(ஸல்) அவர்கள். அ.கு.34:28
10. சந்திரன் பிளந்த அத்தாட்சியை கண்ட பின்பும் காஃபிர்கள் என்ன கூறினார்கள்?
வழமையான சூனியம் தான். அ.கு.54:2
11. நூஹ்(அலை) அவர்களின் மகனைப் பற்றி அல்லாஹ் என்ன கூறினான்?
ஒழுங்கீனமான செயலுடையவன். அல்குர்ஆன் 11:46
12. தூதர்கள் ஒன்று சேரும் நாளில் எந்த மாதிரியான பதிலை கூறுவார்கள்?
எங்களுக்கு எவ்வித அறிவும் இல்லை. நாங்கள் இறந்தபின், அவர்கள் செய்ததை அறிய மாட்டோம். (அ.கு. 5:109)
13. எவர்கள் நரகவாசிகள் என அல்லாஹ் கூறுகிறான்?
எமதுவசனங்களைநிராகரித்துபொய்யாக்கிநிராகரிப்பவர்களை. (அ.கு. 5:10)
14. அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை என்று கூறுகிறான்?
வரம்புமீறுபவர்களை. அல்குர்ஆன் 2:190
15. யாருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்வதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள்?
தொழுதஇடத்திலேயேஒழுமுறியாமல்உட்கார்ந்திருப்பவருக்கு. புகாரி : 444
16. அம்புடன் பள்ளிவாயில்களில் நடப்பவர் கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அம்பின்முனைப்பகுதியைபிடித்திருக்கவேண்டும். புகாரி: 452
17. தொழுகை அறிவிப்பு செய்யப்பட்டால் ஷைத்தான் எவ்வாறு வெளியேறுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
வாயுவெளியேறியவண்ணம்வெருண்டோடுவான். முஸ்லிம்: 635
18. நபி(ஸல்) அவர்கள் கஅபா அருகில் இருந்த போது ஜம்ஜம் தண்ணீரை எவ்வாறு அருந்தினார்கள்?
நின்றுகொண்டு அருந்தினார்கள். முஸ்லிம் 4123
19. சொர்க்கத்தின் கதவுகள் எப்போது திறக் கப்படுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும். முஸ்லிம் 5013
20. ஹஜ்ஜின் போது கல்லெறிவதற்கு முன்பு முடி களைவது பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?
குற்றமில்லை. புகாரி: 6666