இயேசுவைப் பற்றி இறைநூல் கூறும் உண்மைகள்!

in 2026 ஜனவரி

இயேசுவைப் பற்றி இறைநூல் கூறும் உண்மைகள்!

1. முதல் மனிதர் ஆதம் படைக்கப்பட்டது போன்றே இறைவனின்ஆகுகஎன்ற கட்டçளயின்  மூலம்  படைக்கப்பட்டார்.

அந்த இறைவனிடத்தில் நிச்சயமாக (இயேசு) ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின்ஆகுகஎனக் கூறினான்; அவர் ஆகிவிட்டார்.   (3:59)

2. இறைவனின் அற்புதத்தால் தொட்டில் குழந்தையாக இருந்தபோதே இயேசு மக்களிடம் பேசினார். (19:30-33)

3. இயேசு தொட்டில் குழந்தையாக இருந்த போது  இதோ  அவர்  பேசியவை :

நிச்சயமாக நான் அந்த இறைவனுடைய அடியானாக இருக்கிறேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை தூதராகவும் ஆக்கியிருக்கிறான்இன்னும், நான் எங்கிருந்தாலும் அவன் என்னை (நற்)பாக்கியமுடையவனாக ஆக்கியிருக்கின் றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். “என் தாயாருக்கு நன்மை செய்பவனாக வும் (என்னை ஏவியிருக்கிறான்) நற்பேறு அற்றவனாகவும், பெருமைக்காரனாகவும்  என்னை  அவன்  ஆக்கவில்லை 

இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழுப்பப்படும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்என்றும் (அக்குழந்தை) கூறியது.  (19:30-33)

4. “இயேசுவுக்கு முன்னர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களையே அவர் பின் தொடர்ப வராக  இருந்தார்”.   (5:46)

5. ஒரே இறைவனை மட்டுமே வணங்குங்கள் என்றே  இயேசு  மக்களுக்குப்  போதித்தார்.

இஸ்ரேயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இரட்சகனுமாகிய அந்த இறைவனையே வணங்குங்கள்!” என்று; எனவே, எவனொருவன் அந்த இறைவனுக்கு இணை கற்பிப்பானோ, அவனுக்கு அந்த இறைவன் சுவனபதியை நிச்சயமாகத் தடுத்துவிட் டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்; அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிபவர் எவருமில்லை    (5:72)

இயேசு  ஓர்  இறைத்  தூதரே!  (5:75)

நிச்சயமாக இயேசு இறைவனால் அனுப்பப் பட்ட தூதரே! (4:171)

6. ஏனைய மனிதர்களைப் போன்று உணவு உண்டவர் எப்படி கடவுளாக முடியும்? “இயேசுவும், அவரது தாயாரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்”. (5:75)

7. “இயேசு தன்னை இறைவனின் மகன் எனக் கூறவில்லை, தன்னை இறைவனின் அடிமை என்றே  கூறினார்.”    (19:30)

8.  இறைவனின் உதவியால் பல பிரம்மிப்பூட்டும்  அற்புதங்களை  இயேசு  நிகழ்த்தினார்.  (3:49, 5:110)

9. “இஸ்ராயீல் மக்களே இறைவனிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதராவேன் என  இயேசு  கூறினார்  (61:06)

10. “மோஸேவுக்கு இறைவன் அருளிய தவ்ராத்தை உண்மைப்படுத்துபவனாக நான் வந்துள்ளேன்  என  இயேசு  கூறினார்” (61:6)

11. இறுதித் தூதர் முஹம்மத் நபியின் வருகையைப் பற்றியும் நற்செய்தி கூறினார். எனக்குப் பின்னர் அஹ்மத் எனும் பெயரில் வரவிருக்கும் தூதரைப்  பற்றியும்  நற்செய்தி  கூறினார்.  (61:6)

12. இறைவனுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்? என இயேசு தனது சீடர்களிடம் கேட்ட போது, நாம் இறைவனின் உதவியாளர்கள் என அவரது  சீடர்கள்  கூறினர்.    (61:14, 3:52)

13. இயேசு தன்னை வணங்குமாறு கூறவில்லை. மாறாக ஒரே இறைவனை வணங்குவதே நேர்வழி எனக்  கூறினார்.

நிச்சயமாக அந்த இறைவன் என்னுடைய இரட்சகனும், உங்களுடைய இரட்சகனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்”.   (3:51)

14. “இயேசு கொல்லப்படவுமில்லை, சிலுவையில் அறையப்படவுமில்லை. இறைவன் தன் பால் அவரை உயிருடன் உயர்த்திக் கொண்டான்  (4:157)

15. இயேசு  இறைவனின்  அடியாரே.      (43:59)

16. இயேசு வானுலகிலிருந்து உலக அழிவுக்கு முன்னர் இறங்கி வருவார். “நிச்சயமாக அவர் (இயேசு) மறுமை நாளின் அத்தாட்சியாளர்  (43:61)

17. இறைத் தூதராகிய இயேசுவுக்கு பெயர் வைத்தது  இறைவனே! (4:45)

18. இயேசு இறைவனுக்கு அடிமையாக இருப் பதை ஒருபோதும் குறைவாகக் கொள்ள மாட்டார். (4:172)

19. இயேசு  இறைவனின்  மகனல்ல.   (9:30)

Previous post:

Next post: