இஸ்லாமிய  வாழ்வியல் சோதனை!

in 2026 ஜனவரி

இஸ்லாமிய  வாழ்வியல் சோதனை!

ஓர் இஸ்லாமிய பார்வை

முஹிப்புல் இஸ்லாம்

மறுபதிப்பு :

மனித  வாழ்வில்  சோதனைகள்  சங்கமம் :

மனிதர்கள்  சோதிக்கப்படும் போது!

மனித வாழ்வோடு ஐக்கியமாகிவிட்ட ஓர் பிரதான அங்கமே சோதனை! மனிதர்கள் விரும்பினும், வெறுப்பினும் அவர்கள் வாழ்வை நிழ லாய் பின்தொடர்பவை வாழ்வோடு இரண்ட றக் கலந்துவிட்ட இந்த சோதனைகளை மனிதர்கள்  நஞ்சாய்  வெறுக்கிறார்கள்.

சாதாரணத் துன்பங்களும் பேரிடிகளாய் சாமான்யர்களைத் தாக்குவதை அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். நல்ல சிந்தனையாளர்கள் கூட சில்லறை சிக்கல்களால் நிலை தடுமாறி விடுகிறார்கள். தன்னிலை இழந்து தாறுமாராய் பிதற்றுகிறார்கள். கோபம் கொப்பளிக்க கொதித்தெழுந்து விடுகிறார்கள் உணர்ச்சிப் பிழம்பாய் உருமாறிப் போகிறார்கள். கொதிப் படங்கியதும் இதற்காகவா இப்படி செய்தோம்? என்று வேதனைப்படுவோரும் உண்டு. உயிரை மாய்த்துக் கொள்வோரும் உண்டு. பைத்தியமாகி விடுவோரும் உண்டு. வாழ்நாள் முழுதும் மனநோயாளியாய் நடமாடுவோரும்  உண்டு  இதனால்தான்,

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமிஎன்ற  தத்துவம்  பிறந்தது.

வாழப்பிறந்த மனிதர்கள் சோதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இதிலிருந்து சோதனைதான் வாழ்க்கை என்பது தெளிவாய்த் தெரிகிறது. இந்த மனிதர்களை சோதிப்பது யார்? ஏன் மனிதர்கள் மீளாய்வு செய்கிறார்கள்? இதுதான் இன்று நமது சிந்தனைக்குரியது. இதை மனிதர்கள் சரியாகப் புரிந்து கொண்டால் சோதனை வாழ்வைச் சாதனை வாழ்வாக்கிக்  காட்டலாம்.

சோதனையை சாதனையாக்குவது எப்படி?

பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்டதே வாழ்க்கை! அதில் மனிதன் ஈடுபடும் காரியங்கள், செய்யும் செயல்கள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் முதல் அனைத்து நிகழ்வுகளையும் அழகானதாய் ஆக்கிக் கொண்டவர்கள். எவர்களோ அவர்களே சோதனையைச் சாதனையாக் கியவர்கள் இப்படிப்பட்ட சோதனைகளால் இவர்கள் பாதிக்கப்பட்டாலும், துன்பப்பட்டாலும் அவைகளை இவர்கள் சட்டைமேல் விழுந்த தூசியை வேகமாய் தட்டி விடுவது போல் தட்டிவிட்டு விடுவார்கள் கலக்கமடையமாட்டார்கள்; சோதனையை வென்றவர்கள் அல்லாஹ் இவ்வுலக வாழ்வில் மனிதர்களுக்கு வைத்த தேர்வில் வெற்றிபெற்றவர்கள். இவர்கள் பல நேரங்களில் மனித பார்வையில் இவ்வுலக (லெளகீக) வாழ்வில் தோல்வி யடைந்தவர்களாய் கணிக்கப்படலாம். மனிதர்களால் மதிக்கப்படாதவர்களாகவும்இருக்கலாம்.

அல்லாஹ்(ஜல்)  இதை :

உங்களுள் எவர் அழகிய (சிறந்த) செயல்களை உடையவர் என்பதை சோதிப்பதற்காக. (அல்முல்க் : 67:2)

உங்களுள் எவருடைய செயல்கள் மிக அழகானவைசிறந்தவை என அவன் உங்களைச் சோதிப்பதற்காக (ஹூது 11:7) என்பதன் மூலம் மனித சமுதாயத்திற்கு உணர்த்துகிறான்.

அழகிய செயலுக்குரியவர்களை தெரிவு செய்தல்!

மனிதர்களில் அழகிய செயலுக்குரியவர்களைத் தெரிவு செய்வதற்கே இந்த சோதனை! மனிதர்கள் சோதிக்கப்படுவது அவர்கள் துன்பப்படுவதற்காக அல்ல. அவர்களை வேதனைப் படுத்துவதற்காகவும் அல்ல. மாறாக மனித வாழ்வில் மனிதர்களையும் அறியாமல் பறந்து வரும் மாசுகள் அகற்றப்பட நடத்தப்படுபவைகளே இந்த சோதனைகள்! இதை எந்த மதமும், எந்த தத்துவமும், எந்த சித்தாந்தமும் எடுத்துரைக்கவில்லை. இது மனிதர்களையும் மற்ற படைப்பினங்கள் அனைத்தையும் படைத்து, பரிபாலித்து, இரட்சித்துக் காக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ் (ஜல்)வால் நடத்தப்படுகிறது. அதனால் இதை மனிதர்கள் சரியாக  புரிந்துகொள்ளவில்லை.

இறுதி இறைநெறிநூல் எடுத்துக்காட்டும் மனித வாழ்வின் அச்சாணியாகிய இப்பேருண்மையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய முஸ்லிம்களே இதை சரியாக உணரவில்லை என்றால், மற்றவர்கள் நிலையை  என்னென்பது?

சோதனைக்குள்ளாகும்  முஸ்லிம்கள் :

முறையாக அறிந்திருந்தால் முஸ்லிம்களும் சோதனைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அஞ்சி நடுங்கி, சிர்க், குஃப்ர், ஹராம், வழிகேடுகளில் மூழ்கி தங்கள் ஈமானை இழக்க மாட்டார்கள்.

சோதனைகளையும், துன்பங்களையும் எதிர்கொள்ளும்போது, முஸ்லிம்கள் மாற்றார்களை அப்படியே அப்பட்டமாய் காப்பியடிக்கிறார்கள். எப்படியாவது அவைகளிலிருந்து விடுபட எதையாவது செய்துவிடுவது என்ற தவறான போக்கை முஸ்லிம்களும் கடைபிடிக்கிறார்கள். இதனால் முஸ்லிம்கள் தங்கள் ஈமானை இழப்பதுடன் நின்றுவிடவில்லை. இஸ்லாத்துக்கும் இழுக்கைத் தேடி தந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற இக்கட்டான காலகட்டங்களில் முஸ்லிம்களின் அடாத செயல் கண்டு மாற்றாரும் கை கொட்டி சிரிக்கிறார்கள். இந்த இழிநிலை முற்றிலும்  மாறவேண்டும்.

சோதனைகளின் பெயரால், இந்த அளவுக்குத்தான் என்று வரையறை செய்ய முடியாத, சகிக்க முடியாத, ஈமானை பறிமுதல் செய்யும் வழிகேடுகளை முஸ்லிம்களே அரங்கேற்றிக் கொண்டும், அவைகளை நியாயப்படுத்திக் கொண்டுமிருக்கிறார்கள். இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் இதற்கு வழிகாட்டல் இல்லை என்றும் முஸ்லிம்களில் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த  இழி நிலை மாற

சோதனைகள் என்றால் என்ன? அவைகளை எப்படி எதிர்கொள்வது? சோதனைகளைச் சந்திக்கும்போது முஸ்லிம்கள் என்ன செய்யவேண்டும்? இவைகள் பற்றி முறையாக அறிதல் முஸ்லிம்கள் அனைவர் மீதும் கட்டாய கடமையாகும். இதுவே நாமும் நமது சமுதாயமும் சோதனையின் பெயரால் நிகழும் ஈமானை இழத்தல் முதல் அனைத்து வழிகேடு களிலிருந்தும் விடுபடமுடியும். மனித சமுதாயத்துக்கும் உணர்த்தமுடியும். இந்த உயர் லட்சியமே இந்த ஆய்வின் நோக்கம் இந்த நோக்கம் நிறைவேற நாமும் எப்போதும் அல்லாஹ்வின் அருள் வேண்டிக் கொண்டிருக்கிறோம். இதைப் படிக்கும் முஸ்லிம் பொது மக்கள் அனைவரும் அவ்வாறே துஆ செய்யுமாறு கேட்டுக் கொண்டு, இலட்சியம் நிறைவேற முறையாக முயற்சிக்குமாறு அனைவரையும்  அன்போடு  கேட்டுக் கொள்கிறோம்.

1. பூமியின்  அலங்காரம் :

அல்லாஹ்வின் பிரம்மாண்டமான படைப்புகளில் பூமியும் ஒன்று. இந்த பூமியில்தான் மனிதர்கள் பிறக்கிறார்கள்; வாழ்கிறார்கள்; இறக்கிறார்கள். மனிதர்கள் மட்டுமின்றி எண்ணற்ற ஜீவராசிகள், இப்பூமியில் வசித்து வருகின்றன. இதில் மனிதர்களுக்கு நேரடியாக பலன் நல்கும் தாவரங்கள், விலங்கினங்கள், உயிரினங்கள் முதல் திட, திரவ, வாயு பொருட்கள் உட்பட எண்ணிறந்த படைப்பினங்கள் அனைத்தும் இதற்குள் அடங்கும்.

இவைகளில் மனிதர்கள் பார்த்து தெரியக் கூடியவைகள் உண்டு. அறிவால் உணரக் கூடியவை களும் உண்டு. எதனாலும் உணர முடியாத எத்தனையோ விதவிதமான, வினோதமான படைப்பினங்களும் உண்டு. மனிதர்கள் பூமிக்கலங்காரம் பூமியில் காணப்படும் மற்ற படைப்பினங்கள் அனைத்தும் மனிதர்களுக்கு அலங்காரமானவைகள். இந்த அலங்காரங்கள்   எதற்காக?

நிச்சயமாக நாம் (அல்லாஹ்) அவர்களுள் எவர் மிக அழகிய (சிறந்த) முறையில் செயலாற்றுகிறார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்கார மாக்கியுள்ளோம்.” (அல்குர்ஆன்:அல்கஹ்ஃப் : 18:7)

பூமியின் அலங்காரங்களில் சாதாரண மனிதர்களே மனதைப் பறிகொடுக்கும்போது அவரவர் பார்வைக்கும், அறிவுக்கும் ஏற்ப கவிஞர்களும், நாவலாசிரியர்களும், எழுத்தாளர்களும் பூமியைப் பற்றி, அதன் அலங்காரங்கள் பற்றி வர்ணிப்பதை வர்ணிக்க எவரால்  தான்  இயலும்?

அறிவியல், புவியியல் ஆய்வாளர்கள் பூமியைப் பற்றி சாதாரண மக்களுக்குப் பல்வேறு உண்மைகளை நாள்தோறும் வாரி வழங்கி நம்மை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதையயல்லாம் ரசிக்கும் மனிதர்களின் கற்பனைக்கெட்டாத வாழ்வுண்மையை மேற் சுட்டிக் காட்டப்பட்டுள்ள (18:7) இறைவாக்கு எடுத்துக்காட்டுகிறது. மனிதர்களில் அழகிய செயலுடைய வரை சோதிப்பதற்காக அல்லாஹ் பூமியை அலங்காரமாக்கியுள்ளான்.

Previous post:

Next post: