எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்
2025 டிசம்பர் தொடர்ச்சி…
மேலும், “இன்னின்ன நட்சத்திரங்களால் தான் எங்களுக்கு அருட்செல்வம் கிடைத்தது என்று நம்பியவர் அல்லாஹ்வை நிராகரித்த காஃபிராவார்” அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறிய தாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் இறைவன் என்ன சொன்னான் என்று நீங்கள் அறிவீர்களா?” என்று (மக்களிடம்) கேட்டார்கள். பிறகு, “என் அடியார் களுக்கு நான் என் அருட்செல்வங்களில் ஒன்றை வழங்கும்போது அவர்களில் ஒரு சாரார் “(இதற்கெல்லாம் காரணம் இன்னின்ன) நட்சத்திரங்கள்தாம் (அந்த) நட்சத்திரங்களாலேயே (இது எங்களுக்குக் கிடைத்தது)” என்று கூறி அந்த அருட்செல்வத்தின் விசயத்தில் நன்றி கெட்ட வர்களாய் நடந்துகொள்ளாமல் இருந்ததில்லை (என்று அல்லாஹ் சொன்னான்)” என்றார்கள்.
இந்த ஹதீத் மூன்று அறிவிப்பாளர் தொடர் களில் வந்துள்ளது. (மேலும்) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் வானிலிருந்து ஏதேனும் ஒரு வளத்தை இறக்கும்போதெல்லாம் மக்களில் ஒரு சாரார் அதன் விசயத்தில் நன்றி கொன்றவர்களாய் மாறிவிடாமல் இருந்ததில்லை. (வானிலிருந்து) அல்லாஹ் மழை பொழிவிக்கிறான். (ஆனால்) அவர்களோ, “இன்ன இன்ன நட்சத்திரம் தான் (மழை பொழிவித்தது)” என்று கூறுகின்றனர். இதை அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் சலமா அல்முராதீ(ரஹ்) அவர்களது அறிவிப்பில் “இன்ன இன்ன நட்சத்திரங்களால் தான் (மழை பொழிந்தது என்று அவர்கள் கூறு கின்றனர்)” என வந்துள்ளது. (முஸ்லிம் : 126, புகாரி : 1038)
மேலும், “பொய்யாக்குவதையே நீங்கள் உங்கள் பிழைக்கும் தொழிலாக்கிக் கொண்டீர்களா?” (56:82)
அதாவது, உங்கள் மீது அல்லாஹ்தான் மழையை இறக்கி வைக்கிறான். அவனுக்கே நீங்கள் நன்றி செலுத்தவேண்டும். மாறாக நீங்களோ இந்த நட்சத்திரம் குறிப்பிட்ட இந்த இடத்தில் தோன்றுவதாலேயே மழை பொழிகிறது என்று கூறி ஓரிறையைப் பொய்ப்பிக்கிறீர்கள் என்று இப்னு அப்பாஸ்(ரழி) போன்றவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள். அத்துடன் இந்த அத்தியாயத்தில் உள்ள (56:75-82) வரை உள்ள வசனங்களின் தொடர் இறங்கிய காரணத்தை இப்னு அப்பாஸ்(ரழி) போன்றவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (ஒரு நாள்) மழை பெய்திருந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள், “மக்களில் நன்றியுடையவர்களும், நன்றி கெட்டவர்களும் இருக்கின்றனர்” என்று கூறினார்கள். (காரணம்) நபித்தோழர்களில் சிலர் இந்த மழை அல்லாஹ்வின் ரஹ்மத் என்று கூறினார்கள். வேறு சிலர் இன்னின்ன நட்சத்திரத்தால் மழை பொழிந்தது என்று கூறினார்கள். அப்போதுதான் அல்லாஹ் (56:75-82) ஆகிய வசனங்களை இறக்கினான். (கிதாபுத் தவ்ஹீத்: பக்கம் 104-107)
வானங்களிலோ, பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் உமது இறைவனாகிய அவனை விட்டும் மறைந்து விடுவதில்லை. அதைவிடச் சிறியதா(ன அணுவின் துகள் அள வா)யினும் அல்லது பெரியதாயினும் விளக்கமாக அவனது (லவ்ஹூல் மஹ்பூல் எனும்) ஏட்டில் (துல்லியமாகப்) பதிவு செய்யப்படாமல் இல்லை. (34:3, 10:61, 54:52,53) என்றும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்.
எக்காரியத்திலும் நீர் இருப்பதில்லை, இந்தக் குர்ஆனிலிருந்து நீங்கள் ஓதுவதுமில்லை. செயல் எதையும் நீங்கள் செய்வதுமில்லை, நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும் பொழுது உங்கள் மீது நாம் பிரசன்னமானவர்களாக இருந்தே தவிர தவிர இன்னும், பூமியிலோ, வானத்திலோ உள்ள வற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உமது இரட்சகனுக்குத் தெரியாமல் மறைந்து விடு வதில்லை. இன்னும், இவற்றை விடச் சிறிதோ, பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய தெளிவான (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பதிவுப் புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருந்தே யல்லாமல் இல்லை. (அல்குர்ஆன் 10:61)
மேலும், (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு நான் எந்த நன்மையையோ (அல்லது) தீமையையோ தேடிக்கொள்ள உரிமை பெற்றிருக்கவில்லை. மறைவானவற்றை நான் அறிந்தவனாக இருந்திருந்தால், நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன். தீமை என்னைத் தொட்டிருக்காது, நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், விசுவாசங் கொண்ட சமுதாயத்தினருக்கு நன்மாராயங் கூறுபவனுமேயன்றி வேறில்லை.” (அல்குர்ஆன் 7:188)
இன்னும் (நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவது (ஒரு) துன்பத்தைக் கொண்டு பிடிப்பானாகில் அதனை நீக்குவோர் அவனையன்றி வேறு ஒருவரும் இல்லை. (அவ்வாறே) அவன் உமக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தித் தந்தால் (அதைத் தடுத்துவிடுவோர் அவனையன்றி எவரு மில்லை), அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். (அஃகுர்ஆன் 6:17) இங்கு அல்லாஹ் தனது வல்லமை குறித்து அறிவிக்கின்றான். நன்மை மற்றும் தீமை ஆகிய அனைத்தின் அதிபதி அல்லாஹ்வே அவன்; தான் நாடியபடி தன் படைப்புகளை நிர்வகிக்கின் றான். அவனது முடிவைத் தாம தப்படுத்தவோ அவனது தீர்ப்பைத் தடுத்து நிறுத்தவோ எவராலும் முடியாது. (தஃப்சீர் இப்னு கஸீர் 3:409-413)
“அவன் கொடுத்ததைத் தடுப்பவரோ அவன் தடுத்ததைக் கொடுப்பவரோ இல்லை”
(நபியே!) உமக்கு அல்லாஹ் ஒரு துன்பத்தை ஏற்படுத்தினால் அதை அகற்றுபவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தினால் (அதைத் தடுப்பவரும் யாருமில்லை. ஏனெ னில்) அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றல் உள்ளவன் ஆவான். (6:17) என்று அல்லாஹ் தனது வல்லமை குறித்து அறிவிக் கின்றான். நன்மை மற்றும் தீமை ஆகிய அனைத்தின் அதிபதி அல்லாஹ் மாத்திரமே அவன் தான் நாடியபடி தன் படைப்புகளை நிர்வகிக்கின்றான். அவனது முடிவை தாமதப்படுத்தவோ அல்லது அவனது தீர்ப்பைத் தடுத்து நிறுத்தவோ எவராலும் முடியாது வேறொரு வசனத்தில்;
“மனிதர்களுக்காக அல்லாஹ் கருணையைத் திறந்துவிட்டால் அதைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் தடுத்ததை அவனுக்குப் பின்னர் கொடுப்பவர் யாருமில்லை” (35:2) என்று கூறுகின்றது. இதையே, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுப்பதைக் கொடுப்பவர் யாருமில்லை எந்தச் செல்வரின் செல்வமும் உன்னிடம் பயன் அளிக்காது” என்று பிரார்த்தனை செய்து வந்தார்கள். அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷிஅபா(ரழி) புகாரி, 844, 6330, 6615, 7292, முஸ்லிம் : 1039,1040, தஃப்சீர் இப்னு கஸீர் : 3:409-413)
இது குறித்து இறை நிராகரிப்பாளர்களி டம்: (அன்றி அவர்களிடம்) “அல்லாஹ்வையன்றி உங்களுக்கு யாதொரு இடரையோ, நன்மையையோ செய்யச் சக்தியற்றவற்றை நீங்கள் வணங்குகின்றீர்களா? என்று (நபியே!) நீர் கேட்பீராக! இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் செவியுறுவோன், யாவற்றையும்) நன்கறிந்தோன். (அல்குர்ஆன் 5:76) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்.
மேலும், (நபியே!) நீர் கூறுவீராக! “அல்லாஹ் நாடியதையன்றி எனக்கு யாதொரு இடரை நீக்கிக் கொள்வதையும், யாதொரு பலனை (காத்துக் கொள்வதையும் நான் சக்தி பெறமாட்டேன், ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணையுண்டு, அவர்களுடைய தவணை வந்துவிட்டால் ஒரு நாழிகை பிந்தவுமாட்டார்கள். (அல்குர்ஆன் 10:49) என்றும்;
அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குகிறவன். அவனைத் தவிர (வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை பெற்றுக்கொள்ளுமாறு செய்கின்றான். அவனோ மிக்க மன்னிப்போன், மிகக் கிருபையுடை யோன். (அல்குர்ஆன் 10:107) என்று கூறுகின்றது. அதாவது நன்மை–தீமை பயன்–இடர் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடம் மட்டுமே உண்டு இதனையே;
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“: உங்கள் வாழ்நாள் முழுவதும் நன்மையைத் தேடிக்கொண்டே இருங்கள் உங்கள் இறைவனின் அருட்கொடைகளுக்கு இலக்காகி விடுங்கள்.
அல்லாஹ்வின் அருட்கொடை அவனது கருணையின் பாற்பட்டாதாகும். தன் அடியார்களில் தான் நாடுவோருக்கே அல்லாஹ் அதை வழங்குகிறான். உங்களது குறையை மறைக்கு மாறும் அச்சங்களை அகற்றுமாறும் அவனிடம் கோருங்கள் என்று. (அறிவிப்பவர் : அனஸ் (ரழி), அபூஹுரைரா(ரழி), பைஹகியின் ஷிஅபுல் ஈமான், இப்னு அபீஷைபா, முஸன்னஃப் அல்பிர்தவ்ஸ், தஃப்சீர் இப்னு கஸீர்: 4:574-576)
“அவனையன்றி வேறு வணங்கப்படுபவர்களை (என் வணக்கத்திற்குரியவர்களாக) நான் எடுத்துக் கொள்வேனோ? அர்ரஹ்மான் யாதொரு இடரை எனக்கு நாடினால் இவர்களின் பரிந்துரை எதுவும் எனக்குப் பயனளிக்காது. (அதிலிருந்து) என்னை இவர்கள் விடுவிக்கவும் மாட்டார்கள்” (அல்குர்ஆன் 36:23) அதாவது அல்லாஹ்வையன்றி நீங்கள் வழிபாடு செய்யும் இக்கடவுளர்கள் எந்த விவகாரத்திற்கும் உரிமை பெற்றவர்கள் அல்லர். ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ் எனக்குத் தீங்கு எதையும் நாடிவிட்டால் அதை அகற்றக்கூடிய (ஆற்றலுள்ள)வன் அவனன்றி வேறு யாருமில்லை. இச் சிலைகள் அதைத் தடுத்து நிறுத்தவோ, விலக்கவோ ஆற்றல் இல்லாதவை எனக்கேற்பட்ட தீங்கிலிருந்து அவற்றால் என்னைக் காப்பாற்றவும் முடியாது. (தஃப்சீர் இப்னு கஸீர்:7:630-634)
அது மாத்திரமல்ல; நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் மர்யமுடைய குமாரர் மஸீஹ் என்று கூறினார்களே. அத்தகையோர் திட்டமாக நிராகரிப்பவர்களாகிவிட்டனர். (ஆகவே, நபியே!) மர்யமுடைய மகன் மஸீஹையும் அவருடைய தாயையும், (பூமியிலுள்ள மற்ற) யாவரையும் அவன் அழித்துவிட நாடிவிட்டால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து (அதனைத் தடுக்க) சிறிதேனும் எவர் சக்தி பெறுவார்? என நீர் கேட்பீராக! ஏனென்றால்) வானங்களுடைய மற்றும் பூமியுடைய இன்னும் இவை இரண்டிற்கு மத்தியிலிருப்பவைகளுடைய ஆட்சி அல்லாஹ் வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கின்றான். இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன் (அல்குர்ஆன் 5:17) என்றே உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்.
மேலும், “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று (நபியே!) நீர் அவர்களைக் கேட்பீராயின், “அல்லாஹ்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். (பின்னும் நபியே! அவர்களிடம்) “அல்லாஹ் வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால், அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக்கூடியவையா? அல்லது எனக்கு ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால், அவனுடைய அருளை அவை தடுத்துவிடக் கூடியவையா?” என்று நீர் கேட்பீராக!” அல் லாஹ்வே எனக்குப் போதுமானவன், (சகல காரியங்களையும் அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 39:38)
(அரபிகளிலுள்ள) நாட்டுப்புறத்துவாசிகளில் (நபியே! உம்முடன் போர் செய்ய வராது) பின் தங்கிவிட்டவர்கள் உம்மிடம் (வந்து “நாங்கள் உங்களுடன் போருக்கு வராமல்) எங்களுடைய செல்வங்களும், எங்களுடைய குடும்பமும் எங்களைப் பராக்காக்கி விட்டன. எனவே (அல்லாஹ்விடம்) நீர் எங்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக!” என்று கூறுவார்கள். தங்கள் இதயங்களில் இல்லாததவர்களைத் தங்கள் நாவுகளினால் அவர்கள் கூறுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! “அல்லாஹ் உங்களுக்கு ஒரு இடரை நாடினால் அல்லது அவன் உங்களுக்கு ஒரு பலனை நாடினால் (அதில்) எதையும் அல்லாஹ்விலிருந்து உங்களுக்கு(த் தடுத்து விடக்கூடிய) அதிகாரம் பெற்றிருப்பவர் யார்? (ஒருவரும்) இல்லை! நீங்கள் செய்பவற்றை, அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:11) என்றும்; (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)