எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது!

in 2026 பிப்ரவரி

எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்

2026  ஜனவரி  தொடர்ச்சி

(விசுவாசிகளே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால், உங்களை மிகைப்பவர் எவருமில்லை. உங்களுக்கு. அவன் (உதவி செய்யாது) விட்டுவிட்டாலோ, அதற்குப் பின்னர், உங்களுக்கு உதவி செய்பவர் யார்? இன்னும் அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் (தங்களின் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை  வைக்கவும்.    (அல்குர்ஆன் 3:160)

(அன்றி அவர்களிடம்) “அல்லாஹ்வை யன்றி உங்களுக்கு யாதொரு இடரையோ, நன்மையையோ செய்யச் சக்தியற்றவற்றை நீங்கள் வணங்குகின்றீர்களா? என்று (நபியே!) நீர் கேட்பீராக! இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் செவியுறுவேன், யாவற்றையும்) நன்கறிந்தோன்.  (அல்குர்ஆன் 5:76)

(அதற்கு நபியே!) நீர் கூறுவீராக! “அல்லாஹ் நாடியதையன்றி எனக்கு யாதொரு இடரை நீக்கிக் கொள்வதையும், யாதொரு பலனை (காத்துக்கொள்தையும் நான் சக்தி பெறமாட்டேன், ஒவ்வொரு சமுதாயத்தா ருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணையுண்டு, அவர்களுடைய தவணை வந்துவிட்டால் ஒரு நாழிகை பிந்தவுமாட்டார்கள், முந்தவுமாட்டார்கள்.”   (அல்குர்ஆன் 10:49)

அவனையன்றி வேறு வணங்கப்படுபவர்களை (என் வணக்கத்திற்குரியவர்களாக) நான் எடுத்துக்கொள்வேனோ? அர்ரஹ்மான் யாதொரு இடரை எனக்கு நாடினால் இவர்களின் பரிந்துரை எதற்கும் எனக்குப் பயனளிக்காது. (அதிலிருந்து) என்னை இவர்கள் விடுவிக்கவும் மாட்டார்கள்  (அல்குர்ஆன் 36:23)

(நபியே!) மேலும், நீர் கூறுவீராக. “அல்லாஹ்விடமிருந்து அவன் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்க நாடினால் உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் அருள் புரிய நாடினால் (உங்களை விட்டு அதனை தடுத்து விடுபவர் யார்?) அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பாதுகாவலரையும், உதவி செய்பவரையும்  அவர்கள்  காணமாட்டார்கள்”.(அல்குர்ஆன் : 33:17)

அல்லாஹ் (தன்) அருளிலிருந்து மனிதர்களுக்குத் திறந்துவிட்டால், அதனைத் தடுத்து விடக் கூடியவர் (ஒருவரும்) இல்லை அவன் (தன் அருளைத்) தடுத்துக் கொண்டால் அதன் பின் அதனை அனுப்பக்கூடிய (ஒரு) வரும் இல்லை. இன்னும், அவன் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன். (அல்குர்ஆன் 35:2)  இறுதியாக,

நீர் உமது தோட்டத்திற்குள் நுழைந்த போது (அதன் வனப்பைப் பார்த்து) “அல் லாஹ் நாடியதே நடக்கும். அல்லாஹ்வால் அன்றி (வேறு யாராலும்) எந்த ஆற்றலும் கிடைக்காதுஎன்று சொல்லியிருக்க வேண்டாமா? (18:39) அதாவது, நீர் உமது தோட்டத்திற்குள் நுழைந்து அதன் வனப்பைப் பார்த்துப் பெருமிதம் அடைந்தபோது அதை உமக்கு அருளிய இறைவனுக்கு நன்றி செலுத்தி அவனைப் போற்றியிருக்க வேண்டாமா? அவன்தான் வேறு யாருக்கும் வழங்காத மக்கட் செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் உமக்கு வழங்கினான். மேலும் அல்லாஹ் நாடியதே நடக்கும் அல்லாஹ்வால் அன்றி (வேறு யாராலும்) எந்த ஆற்றலும் கிடைக்காது என்று நீர் சொல்லியிருக்க வேண்டாமா?  என்றும்  அவர்  வினவினார்.

இதனாலேயே சான்றோர்களில் ஒருவர், “ஒருவருக்கு அவரது சிறந்த சூழ்நிலையோ அவருடைய மக்கட் செல்வமோ அவரது பொருளாதாரமோ பெருமித உணர்வை உண்டாக்கினால், உடனே அவர்மாஷா அல்லாஹ் லா குவ்வத்த இல்லாஹ் பில்லாஹ் (அல்லாஹ் நாடியதுதன் நடக்கும்; அல்லாஹ்வால் அன்றி வேறு யாராலும் எந்த ஆற்றலும் கிடைக்காது) எனச் சொல்லவேண்டும்என்று குறிப்பிட் டார். (தஃப்சீர்  இப்னு கஸீர் : 5:436-440) இது மேற்குறித்த (18:39) வசனத்திலிருந்து பெறப் பட்ட கருத்தாகும். மேலும் இது தொடர்பாக;

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அடியார் ஒருவருக்கு (அவரது) குடும்பம், பொருட்செல்வம், மக்கட்செல்வம் ஆகியவற்றில் ஏதேனும் அருட்கொடை ஒன்றை வழங்கும்போது அந்த அடியார், “அல்லாஹ் நாடியதே நடக்கும்; அல்லாஹ்வால் அன்றி வேறு யாராலும் எந்த ஆற்றலும் கிடைக்காது” (மாஷா அல்லாஹ், லா குவ்வத்த இல்லாஹ் பில்லாஹ்) என்று கூறினால் அதில் எந்த ஆபத்தையும் அவர் காணமாட்டார்; இறப்பைத் தவிர என்று. அதாவது, நீர் உமது தோட்டத்திற்குள் நுழைந்தபோது (அதன் வனப்பைப் பார்த்து) அல்லாஹ் நாடியதே நடக்கும்; அல்லாஹ்வால் அன்றி (வேறு யாராலும்) எந்த ஆற்றலும் கிடைக்காதுஎன்று சொல்லியிருக்க வேண்டாமா? (18:39) எனும் வசனத்திற்கு விளக்கமாகவே நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி), தப்ரானீ, மஜ்ம உஸ் ஸவாயித், தஃப்சீர் இப்னு கஸீர் : 5:436-440) இது;

சொர்க்கத்தின்  கருவூலம் :

அபூ மூஸா அல் அஷ்அரீ(ரழி) அப்துல்லாஹ் இப்னு கைஸ்(ரழி), ஜாபிர்(ரழி) அறிவித்ததாவது: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கைபர் போருக்கான) பயணத்தில் இருந்தோம். நாங்கள் மேடான பகுதியில் ஏறும்போதுஅல்லாஹு அக்பர்‘ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (சப்தமிட்டுக்) கூறலானோம். அப்போது  நபி (ஸல்) அவர்கள், “மக்களே! உங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள் (அவசரப்படாதீர்கள் மென்மையாக மெல்லக் கூறுங்கள்!) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை மாறாக செவியுறுவோனையும் பார்ப்பவனையுமே  அழைக்கின்றீர்கள்என்றார்கள்.

பிறகு என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் (மனதுக்குள்) “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்‘ (அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ (நல்லறங்கள்) புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று கூறிக்கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இப்னு கைஸே! லா ஹவ்ல வலா குவ்வத்த இவ்லாபில்லாஹ்எந்று சொல்வீராக! ஏனெனில், அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்அல்லது உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும் என்று கூறியவாறு (அந்த வார்த்தை) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (என்பதாகும்) என்றார்கள். (புகாரி : 2992, 4202, 4205, 6384, 6409, 6610, 7386, முஸ்லிம் : 5237, 5238, 5240, தஃப்சீர் இப்னு கஸீர் : 5:436-440)

மேலும், அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம்அபூஹுரைரா! இறை அரியணைக்குக் கீழேயுள்ள சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை நான் உமக்குச் சொல்லித் தரட்டுமா?” என்று கேட்டார்கள் நான் “”என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம்; சொல்லித்தாருங்கள்என்றேன் அதற்கு  அவர்கள்;

அல்லாஹ்வால் அன்றி வேறு யாராலும் எந்த ஆற்றலும் கிடைக்காது. (லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாஹ் பில்லாஹ்) என்று நீர் கூறுவதாகும்என்றார்கள். இந்த ஹதீதின் அறி விப்பாளர்களில் ஒருவரான அபூ பல்ஜ் யஹ்யா பின் சுலைம்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த வாசகத்தை ஒருவர் கூறும்போதுஎன் அடியான் (எனக்குக்) கட்டுப்பட்டுவிட்டான், அடிபணிந்துவிட்டான்என்று அல்லாஹ் கூறுகின்றான் என எனக்கு இந்த ஹதீதை அறிவித்த அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் எனக் கருது கிறேன். (முஸ்னது அஹ்மத், ஹாகிம், தஃப்சீர் இப்னு கஸீர் : 5:436-440)    

Previous post:

Next post: