எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடமையா? அறிவீனமா?

in 2026 ஜனவரி

எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடமையா? அறிவீனமா?

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

2025  டிசம்பர்  மாத  தொடர்ச்சி….

இந்த மவ்லவிகள் எந்தளவு வழிகேடர்கள்  என்று  பாருங்கள்.

உலகத்தில் காணப்படும் இஸ்லாம் அல்லாத அனைத்து மதங்களும் ஒரு குறிப்பிட்ட நாடு, இனம், பகுதி, கூட்டம் என்ற அடிப்படையில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்குப் பின் அந்தந்த சமூகத்தில் திருட்டுத்தனமாகப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு நுழைந்த அந்தந்த மதகுருமார்களின் கற்பனையில் உருவானவை. எனவே அனைத்து மதத்தினரும்காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுஎன்ற அடிப்படையில் தங்கள் தங்கள் மதங்களில் பிடிவாதமாக இருப்பதில் ஓரளவாவது அர்த்தமுண்டு. தங்களின் மதக் கொள்கையை உரசிப் பார்க்கும் உரை கல்லான பதிந்து பாதுகாக்கப்பட்ட நெறிநூலும் (வேதம்) அவர்களிடம் இல்லை. அவை இறக்கி அருளப்பட்ட மொழிகளும் இல்லை. செத்த மொழிகளாகிவிட்டன. அவரவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார்கள் சொல்வது தான் அவர்களிடம் வேதவாக்கு. எனவே தத்தமது மதமே சரியானது. நேர்வழி காட்டக்கூடியது. சுவர்க்கம் சேர்ப்பது என்ற குருட்டு நம்பிக்கையில் இருப்பதில் ஓரளவாவது நியாயமுண்டு. ஆயினும் நாளை நரகமே!

இந்த முஸ்லிம் மதகுருமார்களுக்கு ஏற்பட்டுள்ள கேடு என்ன? இறுதி வாழ்க்கை நெறிநூல் ஒரு புள்ளி, ஓர் எழுத்து முதல் மாற்றப்படாத நிலையில் முழுமை பெற்ற நிலையில் (5:3, 15:9) கடந்த 1450 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குர்ஆன் இறங்கிய அரபு மொழி இன்றும் அழிந்துவிடாமல் பல நாடுகளில் பேச்சு வழக்கில் இருக்கிறது. .நா. சபையில் பேச அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒரு மொழியாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அதன் உண்மை நிலையை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக குர்ஆன் இருக்கிறது.

குர்ஆன் நாடு, இனம், மொழி, பகுதி, கூட்டம் என எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் அகில உலக மக்களுக்கும், ஆதத்தின் மக்கள் அனைவருக்கும் அவர்கள் நாளை சந்திரனிலோ, செவ்வாயிலோ போய் குடியிருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டும் ஒரே நூலாக, முழுமை பெற்ற நூலாக இருக்கிறது என்று அதே குர்ஆனின் பல நூற்றுக்கணக்கான வசனங்கள் நெற்றிப் பொட்டில்  அடிப்பது  போல்  கூறுகின்றன.

குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அதில் நாஸ்மனிதர்கள் என்று 241 இடங்களிலும், இன்சான் என்று 65 இடங்களிலும் இன்ஸ் என்று 18 இடங்களிலும் ஆக 324 இடங்களில் ஒட்டுமொத்த மனிதர்களைக் குறிப்பிட்டிருப்பது இம்மவ்லவிகளின் கண்ணில் படுவதில்லையா? அதிலும் பல இடங்களில் யா அய்யுஹன்னாஸ்ஓ மனிதர்களே! என்று மனிதர்களையே அழைத்து அறிவுரை கூறி இருப்பது இம்மவ்லவிகளின் கண்ணில் படுவதில்லையா? யா அய்யுஹன்னபிய்யு என்று பல இடங்களில் காணலாம். ஆனால் ஒரே ஒரு இடத்தில் கூட யா அய்யுஹல் உலமாவு என்று இல்லவே இல்லை. ஆம்! 7:146 179, 45:23, 47:25, இறைவாக்குகள் கூறுவது போல், அவர்களின் ஆணவம் மற்றும் பெருமை காரணமாக குர்ஆன் வசனங்களை விட்டும் அல்லாஹ்வாலேயே இம்மதகுருமார்கள் திருப்பப்படு கிறார்கள். அவர்கள் வீண் பெருமையை விடாதவரை ஒருபோதும் நேர்வழியடையவே முடியாது என்பதை இவ்வசனங்கள் உறுதி  செய்யவில்லையா?

அதன் விளைவு முழுமை பெறாத, பதிந்துப் பாதுகாக்கப்படாத, குறிப்பிட்ட நாட்டுக்கு, இனத்திற்கு, ஊருக்கு எனத் தற்காலிகமாக, தற் சமயமாகக் கொடுக்கப்பட்ட நெறிநூல்கள் அந்தந்த மதகுருமார்களால் மாசுபடுத்தப்பட்டு வேதங்களாக்கப்பட்டதை, ஒவ்வொரு மதத்தினரும் தூக்கிப் பிடித்துச் சொந்தம் கொண்டாடுவது போல், இந்த மவ்லவிகளும் அம்மதகுருமார்களையே சுயநலத்துடன் பின்பற்றி குர்ஆனில் நேரடி போதனைகளுக்கு முற் றிலும் முரணாக குர்ஆன் முஸ்லிம்களின் நெறிநூல். மற்ற மதத்தினருக்கு குர்ஆனில் எவ்வித உரிமையும் இல்லை. குர்ஆனை மாற்று மதத்தினருக்குக் கொடுக்கக் கூடாது. அவர்கள் அரபு மொழி படித்து டாக்டரேட் பட்டம் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு குர்ஆன் விளங்காது. ஏன்? அரபு மொழி படித்து மவ்லவியாகாத முஸ்லிம்களுக்கே, குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்து விளங்க முடியாது என்று கூறி ஒட்டுமொத்த, மனித குலத்தினரையும், குறிப்பாக மவ்லவி அல்லாத முஸ்லிம்களையும் குர்ஆனைப் படித்து விளங்குவதைத் தடுத்து வருகின்றனர். இதை விட  வழிகேடு  உண்டா?

அதனால் மற்ற மதத்தினருக்கு இயற்கையாகவே குர்ஆன் மீது ஒரு வெறுப்பும், அதனால் துவேசமும் வளருமா? வளராதா? அவர்கள் குர்ஆனை இழிவுபடுத்த முற்படுவார்களா? இல்லையா? பத்திரிக்கைச் செய்திகளில் வந்தது போல் எரிக்கத் துணிவார்களா? துணிய மாட்டார்களா? நவூதுபில்லாஹ் இத்தீய விளைவுகளுக்கு முஸ்லிம் மதகுருமார்கள் காரணமா? மற்ற மதங்களின் மதகுருமார்கள் காரணமா? எய்தவன் இருக்க அம்பை நோகு பவன் அறிவாளியா? அறிவு கெட்டவனா? சொல்லுங்கள்.

இந்த மவ்லவிகள் 2:159 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆன் கருத்துக்களை திரிக்காமல், வளைக்காமல், மறைக்காமல் உள்ளது உள்ளதுபடி சொன்னால் இப்படிப்பட்ட கேடுகள் விளையுமா? இம்மவ்லவிகள் அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரதும் கொடிய சாபத்திற்கு ஆளாகிறார்களா? இல்லையா? இக்கேடுகெட்ட நிலை எதனால் ஏற்படுகிறது. அல்குர்ஆனின் நூற்றுக்கணக் கான வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி, ஒரே தூய மார்க்கத்தைப் பல மதங்களாக்கி வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வதுதானே? அற்ப உலகியல் ஆதாயங்கள் அடைய  முற்படுவதால்  தானே!

இம்மவ்லவிகள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளாமல், தூய எண்ணத்துடன் மறுமையில் அல்லாஹ்விடம் கூலியை மட்டுமே எதிர்பார்த்து குர்ஆனில் உள்ளதை உள்ளபடிச் சொல்வதாக இருந்தால், அப்படித் திறந்த மனதுடன் சொல்ல முன்வந்தால் என்ன நடக்கும்?

மாற்று மதங்களின் சகோதரர்களே, சகோதரிகளே நீங்கள் உங்கள் கைகளில் வைத்திருக்கும் நெறிநூல்கள் முன்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கு, இனத்தினருக்கு, மொழியின ருக்கு, ஊரினருக்கு தற்காலிகமாக கொடுக்கப்பட்டவை. அவை முழுமை பெறவுமில்லை. அவற்றின் மூலமொழிகள் பேச்சு வழக்கில் இல்லாமல் செத்துப் போனதால் நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் மதகுருமார்கள், தங்களின் அற்ப உலக ஆதாயம் கருதி அவற்றில் பல திரிபுகளைச் செய்துள்ளனர். அவற்றில் ஒருசில இறைவன் அருளியதாக இருந்தாலும், பெரும்பாலானவை மதகுருமார்களின் கைச்சரக்காகும். மேலும் நீங்களும், நாங்களும் நம்பிக்கை வைத்துள்ள அந்த ஒரே இறைவன் முந்தைய நெறிநூல்கள் அனைத்தையும், ஆட்சியாளர்கள் முன்னர் நடைமுறையிலிருந்த கரன்சி நோட்டுகளை ரத்து செய்வது  போல்  ரத்து  செய்துவிட்டான்.

இறைவன் இறுதியில் இறக்கியருளியுள்ள முழுமை பெற்ற இறுதி வாழ்க்கை நெறிநூல் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. அனைத்து மதத்து மக்களுக்கும் சொந்த மானது. அதன் கருத்துக்களை உங்களுக்குத் தெரிந்த மொழிகளில் படித்துத் தெளிவாக விளங்கமுடியும். நீங்கள் நேர்வழியை அறிந்து நடப்பதற்கு எந்த மதகுருவும் தேவை இல்லை. 2:186, 7:3, 9:31, 18:102-106, 33:36, 58:7 குர்ஆன் வசனங்கள் இடைத்தரகைக் கடுமையாகக் கண்டிக்கின்றன. மதகுருமார்களும், அவர்களை இடைத்தரகர்களாகக் கொண்டு, அவர்களின் வழிகாட்டல்படி நடப்பவர்கள் நாளை நரகை நிரப்புபவர்களே என்று குர்ஆனில் உள்ளது உள்ளபடி சொல்லியிருந்தால், மாற்று மதத்தினருக்கு குர்ஆனில் வெறுப்பு ஏற்பட்டிருக்குமா? எரிக்கத் துணிந்திருப்பார்களா? இன்னும் பல வகையில் இழிவுபடுத்தத் துணிவார்களா?  சொல்லுங்கள்!

மேலும் எண்ணற்ற நபிமார்கள் வெவ்வேறு சமூகங்களுக்கென்று இருந்தது போல், முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குரிய நபி என்ற மூட நம்பிக்கையில் நமது நபி, எம்பெருமானார், எங்கள் நபி என்று இம்மவ்லவிகள் சுயநலத்துடன் பிதற்றுகின்றனர். குர்ஆன் என்ன சொல்கிறது? ஒட்டுமொத்த மனிதகுலத்தினருக்கும் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் என்று தெளிவாக நேரடியாகக் கூறுகிறது. (பார்க்க : 21:107)

இந்த மவ்லவிகள் மனித குலத்திற்கே சொந்தமான நிறைவு பெற்ற சம்பூரணமான பதிந்து பாதுகாக்கப்பட்ட நெறிநூல் குர்ஆனையும் ஏனைய இரத்து செய்யப்பட்ட நெறிநூல்களைப் போல் ஒரு நெறிநூல் என்றும், அது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் தொடர்ந்து கடந்த ஆயிரம் வருடங்களாக அப்பட்டமான பொய்யை கோயபல்ஸ் தத்துவப்படிக் கூறி மக்களின் உள்ளங்களில் பதியவைத்து விட்டார்கள். அதேபோல் அகில உலக மக்களுக்கு இறுதி இறைத்தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது(ஸல்) அவர்களை முஸ்லிம்களுக்குரிய இறைத் தூதராக்கி அதையும் கடந்த ஆயிரம் வருடங்களாக தொடர்ந்து கொயபல்ஸ் தத்துவப்படிக் கூறி மக்களின் உள்ளங்களில் பதியவைத்து விட்டார்கள். அதன் விளைவு 1450 வருடங்களுக்கு முன் மக்கள் அழிவின் விளிம்பில், நரக நெருப்பின் விளிம்பில் நின்றது போல் இன்றைய ஆதத்தின் சந்ததகளை அழிவின் விளிம்பில், நரக நெருப்பின் விளிம்பில் இம்மவ்லவிகளே நிற்க வைத்திருக்கிறார்கள்.

குன்றின் மேல் 1000 வாட்ஸ் பவருள்ள வெள்ளை பல்பாக இருக்க வேண்டிய குர்ஆனை, குடத்திலுள்ள 0 வாட்ஸ் பவரில்லாத விளக்கைப் போல் இம்மவ்லவிகள் காட்டி வருகிறார்கள். உலகத்திற்கே இம்மவ்லவிகள் இழைத்துள்ள அநீதி உங்களுக்குப் புரியவில்லையா? ஆக 16:25 இறைவாக்குக் கூறுவது போல் நாளை மறுமையில் உலக மக்க ளின் பாவங்களையும் சேர்த்தே இம்மவ்லவிகள்  சுமக்க  இருக்கிறார்கள்.

தவ்ஹீத் மவ்லவியோ நேரடி குர்ஆன் கருத்துக்களை ஏற்று ஆலிம்அவாம் வேறுபாடு இல்லை. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சுயமாக குர்ஆன், ஹதீஃதை விளங்கி அதன்படி நடக்க வேண்டும். புரோகித வர்க்கம் இல்லை, நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வ தில்லை. இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கு இல்லை, கடமையான மார்க்கப் பணிக்கு கூலிஹராம் கூடாது. இன்னும் இவை போல் குர்ஆன், ஹதீஃத் நேரடியாகக் கூறுபவற்றை ஏற்று 1986 ஏப்ரல் முதல் 1987 ஜூன் வரை அந்நஜாத்தால் எழுதியவர், 2:146, 6:20, 7:175-179, 45:23, 47:25 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் நன்கு அறிந்த நிலையில் சுயலாபம் கருதி, அதாவது அற்பமான உலகியல் பேர், புகழ், பட்டம், பதவி, பணம் காசு, ஜால்ரா போடும் கூட்டம் என புதியதோர் கோணல் வழியை கற்பனை செய்து இளைஞர், இளம் பெண்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் தவ்ஹீத் மவ்லவிகள் அனைவரையும் விட பெரும்  வழிகேட்டில்  இருக்கிறார்.

சுன்னத் ஜமாஅத்தினர் குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் நான்கும் மார்க்க ஆதாரங்கள் என்ற அடிப்படையில் செயல்படுகின்றனர். எனவே குர்ஆன், ஹதீஃதில் இல்லாதவற்றை இமாம் களின் பெயரால் மார்க்கம் ஆக்குகின்றனர். தவ்ஹீத் மவ்லவியோ குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்று மக்களை ஏமாற்றி வருகிறார்.

இணை, துணை, கூட்டு, தரகர், தேவை எதுவுமே இல்லாத ஏகன் இறைவனுடன் கூட்டு என்றால், அது சிர்க்கிலும் கொடிய சிர்க்கா இல்லையா? “”தவ்ஹீத்வாதிஎன்றால் ஏகத்துவத்தை நிலைநாட்டுபவன்நேர்வழி நடப்பவன் என்பதே பொருளாகும். இப்படி தன்னைத்தானே பீற்றிக் கொள்பவன் 4:49, 16:9, 17:84, 20:123, 53:32 வசனங்கள் இன்னும் நேர் வழியில் நடப்பது. அதாவது தவ்ஹீத்வாதி யார் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று கூறும் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ர், சிர்க்கில் மூழ்குவதா? இல்லையா?  (பார்க்க: 16:9,17:84,20:123)

Previous post:

Next post: